Saturday, 9 June 2012

மின்னாத மின் மினிகள்...



எண்ணெய் படிய-
தலை சீவி!

வலது பக்கம்-
எடுத்த வகிடு!

விழுந்து முளைக்க-
ஆரம்பித்த-
பற்கள்!

விளையாடி -
அடிபட்டு -
ஆற ஆரம்பிக்கும்-
புண்கள்!

கழுத்து வரை-
மாட்டிய-
பித்தான்கள்!

கால் சட்டையை-
தாங்கி நிக்கும்-
அரைஞான் கயிறுகள்!

சென்றோம்-
விரல் பிடித்த-
கைகளை-
விட்டு விட்டு!

பிரம்புகள்-
பிடித்த-
கைகளிடத்து!

இன்று-
பள்ளி சேர்க்கை-
அளவீடு-
பணத்தை கொண்டு!

அன்று-
அளவீடு-
வலது கையால்-
இடது காதை-
தொடுவதைகொண்டு!

புது-
நட்புகள்!
புது-
கவலைகள்!

பெற்றோர்கள்-
எதிர்பார்ப்புகள்!

சில-
பாராட்டுகள்!
பல-
விரட்டுதல்கள்!

ஆதரிக்கும்-
நன் நெஞ்சங்கள்!
அலட்சியபடுத்திய-
வன்மை நெஞ்சங்கள்!

அடி இல்லாத-
வாளியை கொண்டு-
கடலை அள்ள-
முயல்வதை போல!

சில-எழுத்துக்களையும்!
எண்களையும்!-அறிந்து-
விட்டு!

நினைப்பு-
கல்வி கடலை-
குடித்து விட்டது போல!

குடும்ப சுமையை-
சுமக்கும்-
மூட்டை தூக்கும்-
தொழிலாளி!

குழந்தைகள் எடையை விட-
அதிகம் புத்தக-
சுமை தரும்-
பள்ளி!

ஓய்வில்லாமல் ஓடும்!
சந்திரனும்!
சூரியனும்!

அமாவாசையும்!
சூரிய கிரகணமும்-
அவைகளுக்கு-
விடு முறை!

குழந்தைகள் -
சுதந்திரமா இருக்க-
அனுமதி இல்லையா?
கோடை விடுமுறை!

பெற்றோர்களே!
நம் மனம்-
குளிர்வது-
பிள்ளைகளால்!

நமது-
'பேராசையினால்'-
நசுக்கி விடாதீர்கள்-
'விசேச'வகுப்புகளால்!

24 comments:

  1. எவ்வளவோ விசயங்களை சொல்லி பதிவிட வேண்டிய விடயத்தை கொஞ்சம் வரிகளுக்குள் அடக்கி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் நண்பா....தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சிட்டு குருவி!

      உங்களுடைய அருமையான பின்னூட்டதிற்கு-
      மிக்க நன்றி!

      Delete
  2. எவ்வளவு அருமையான அறிவுரைகள் பெற்றோர்க்கு. புத்தகச் சுமையுடன் பலகல்விச் சுமை...பாவம்.. அழகாகக் காட்டியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியும் குழந்தைகள் சார்பில் நன்றி சொல்ல வேண்டிய வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. aathira!

      உங்களுடைய அருமையான பின்னூட்டதிற்கு-
      மிக்க நன்றி!

      Delete
  3. என்னை பொருத்தவரை 10 வயதுவரை பிள்ளைகளை படி படி என்று அதிக நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது என்பேன். மதிப்பெண் மட்டுமே ஒருவனது வாழ்கையை தீர்மானிப்பதில்லை.

    அருமையான கவிதை வரிகள் சார் ..!

    ReplyDelete
    Replies
    1. suvadukal!

      உங்களுடைய அருமையான பின்னூட்டதிற்கு-
      மிக்க நன்றி!

      Delete
  4. உண்மை ஓய்வு என்பது இப்போது உள்ள குழந்தைகளுக்கு கிடைப்பது அரிது

    ReplyDelete
    Replies
    1. பிரேம்!

      உங்கள் முதல் வரவில்
      எனக்கு மிக்க மகிழ்ச்சி!

      மேலும் உங்கள் கருத்துக்களை
      எதிர்பார்க்கிறேன்!

      Delete
  5. அறிவுரைகளை வாரி வழங்கி, வழி சொல்லும் வரிகள்..

    தேவையான நேரத்தில்....... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி!

      உங்கள் வரவில்-
      எனக்கு மிக்க மகிழ்ச்சி!

      Delete
  6. பெற்றோர்களே!
    நம் மனம்-
    குளிர்வது-
    பிள்ளைகளால்!

    நமது-
    'பேராசையினால்'-
    நசுக்கி விடாதீர்கள்-
    'விசேச'வகுப்புகளால்!


    சிந்தனைப் புள்ளிகளை
    மிக நேர்த்தியாக இணைக்கும் விதம்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா!

      உங்கள் வரவிலும்-அழகிய பின்னூட்டம் கண்டு-
      எனக்கு மிக்க மகிழ்ச்சி!

      மேலும் உங்கள் கருத்துக்களை
      எதிர்பார்க்கிறேன்!

      Delete
  7. @வரலாற்று சுவடுக
    //மதிப்பெண் மட்டுமே ஒருவனது வாழ்கையை தீர்மானிப்பதில்லை//

    ரெம்ப சரியா சொன்னீர்கள் தோழரே (உண்மையும் கூட )

    நல்ல கவிதை சகோ

    ReplyDelete
    Replies
    1. செயதலி!

      உங்கள் வரவுக்கு கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  8. அருமையான கருத்துக்களை கோர்த்து தந்தமை அழகு.

    ReplyDelete
    Replies
    1. asiya omar!
      உங்கள் வரவுக்கு கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  9. சிறப்பான சிந்திக்க வைக்கும் வரிகள் பெற்றோரின் ஆசைகளை பிள்ளையின் மீது திணிப்பது கொடுமையே .

    ReplyDelete
    Replies
    1. SASIKALA!
      உங்கள் வரவுக்கு கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  10. மின்னாத மின் மினிகள் --

    தலைப்புக்கான சூப்பர் கவிதைங்க சீனி.

    ReplyDelete
    Replies
    1. arouna!
      உங்கள் வரவுக்கு கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  11. இது வரை நான் படித்த உங்கள் கவிதைகளில் பட்டென்று பிடித்த கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் !

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. கட்டுரைகளாய் எழுதினாலும் பக்கங்கள் போதாது அண்ணா சில வரிகளில் அழகாய் சொல்லிவிட்டீர்கள்! இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்! சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தோடு அவர்களின் பழைய பாடத்திட்டங்களயும் தொடர்கிறதாம் சில மெட்ரிக் பள்ளிகள்! பாவம் அவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. யுவராணி!

      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      அப்படியா!? அட பாவமே...

      Delete