Friday, 1 June 2012

பெத்தால் தான் தாயா..!?

என் மழலைக்கும் -
என் மணாளிக்கும்!

என் தாயிக்கும்-
என் தாயின்-
சேயான எனக்கும்!

உறவினர்களுக்கும்-
உறவுகளின் உயிரின்-
உருவங்களுக்கும்!

இன்னும் -
எத்தனையோ -
பேர்களுக்கும்!

இத்தனை என -
கணக்கிட
முடியாதவங்களுக்கும் !

தாயாக-
நீ-
வளர்த்தாய்!

மாரோடு-
சாய்த்து-
கொண்டாய்!

இத்தனை பேருக்கும் -
நீ தாயா!?

இல்லையே!

பெத்தால்தான்-
தாயா!?

பெத்தது எல்லாம்-
பிள்ளையா!?

உன் வயிதுலதான்-
ஒரு கரு வளரலையோ!?

முன்னமே அந்த -
நல்லவர்கள்-
பிறந்து விட்டார்களோ!?

விதைகள் -
வளரும்வரை-
தேவை-
வேலிகள்!

வளர்ந்த-
விதைகள்!
வேலிகளை-
ஒதுக்குவதா-
முறைகள் !?

தொலை பேசியில்
பேசுகையிலே

உனக்கு -
கேளாமலோ !

எனக்கு
புரியாமலோ !

கலங்கி உள்ளேன்!
மனம் புழுங்கி உள்ளேன்!

விலைவாசி ஏத்தி
'வாக்கரிசி ' போட்டாங்க!

இதை சாதனை என -
விளம்பரம் போடுறாங்க!

விளம்பரத்துக்கு செலவு-
இருபத்தஞ்சி கோடியில!

மக்களோ -
பிச்சை எடுக்குற -
நிலையில!

நீயோ-
கற்களை-
கட்டிடங்கள் ஆக்கினாய்!

அதன் நிழலில் -
கூட இளைப்பாற-
மறுக்கிறாய்!

உனக்கு நான்-
என்ன கைம்மாறு-
செஞ்சு இருப்பேன்!?

உன் காதுல-
'அலுக்கதா'தொங்கி -
இருந்தா சந்தோசம்-
அடைந்து இருப்பேன்!

அலுக்கத்து- காதுல தொங்கும் வளையம்!

[இந்த கவிதை ஆச்சா கமிதா அவர்களுக்கும்-
உலகில் உள்ள பாட்டிமார்களுக்கும் அர்ப்பணம்]

13 comments:

  1. இந்த கவிதை ஆச்சா கமிதா அவர்களுக்கும்-
    உலகில் உள்ள பாட்டிமார்களுக்கும் அர்ப்பணம்]///


    நண்பா நல்ல சிந்தனை

    ReplyDelete
  2. அப்புறமா...வாக்கரிசி என்பதன் பொருள் எனக்குத்தெரியாது..எல்லோரும் சொல்லும் வாய்க்கரிசிதான் இதுவா..?:)

    ReplyDelete
    Replies
    1. nanpaa!elloeum sollum vaaykkarisithaan!

      Delete
  3. அரசியல் தூக்கள் கவிதை! விளம்பரக் காசை ஏழைகளுக்கு கொடுத்தாலே புண்ணியம் வாக்கும் கிடைக்குமே!ம்ம்ம்

    ReplyDelete
  4. உணர்வு மேலோங்க
    அழகிய உணர்சிக் கவிதை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. maken sir!

      ungal karuthukku mikka nantri!

      Delete
  5. இன்று பிரான்ஸ் ல் அன்னையர் தினம்.வரிகள் பொருத்தமாக இருக்கிறது !

    ReplyDelete
  6. என் பாட்டியை நினைவுபடுத்தியது - நன்றி

    ReplyDelete
    Replies
    1. நிலவண்பன்!

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  7. “விலைவாசி ஏத்தி
    'வாக்கரிசி ' போட்டாங்க!“

    அருமையான வார்த்தைக் கோர்வை.
    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. arouna!

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete