வார்த்தை-
சிலது-
வெல்லும்!
சிலது-
கொல்லும்!
வஞ்சி !~
உந்தன்-
மௌனமோ-என்னுள்
பிரளயமே-
உண்டு-பண்ணும்!
-------------------------------
ஆர்பரிக்கும்-
கடலலை!
கேட்கிறது-
சில வார்த்தைகளை!
உன்னை பார்க்க-
விருப்பம் இல்லை!
காரணம்-உன்னுடன்-
உன் நிழல் வரவில்லை!
பூவை தாங்காத-
தண்டா!?
நீ!
மட்டும் வரலாமோ?-
தண்டமா!?
-----------------------------
வார்த்தை-
சொல்லும் வரை-
செல்லா காசு!
சொல்லிய பின்னே-
செலவான காசு!
------------------------------------
பூக்களை-
ரசித்து இருக்கிறேன்!
புல்லின் மேல்-
படுத்தும்-
இருக்கிறேன்!
மா கவிகளின்-
வார்த்தைகளான-
கவிதைகளை-
படித்தும் -இருக்கிறேன்!
மழலைகளின்-
மொக்கை வாய்-
சிரிப்புக்கு முன்னால்-
மறந்து நிக்கிறேன்!
------------------------------------
நாம் -
வாய் பேசிட -
சில ஆண்டுகள் -
தாமதம் ஆனதால்-
வாடியவர்கள்-நம்
'நலன் விரும்பிகள்'!
இன்றோ நாம்-
'வாய் கூசாமல்'-
பேசிடும் பேச்சால்-
வாடுகிறார்கள்-
அதே-உறவுகள்!
மனிதர்கள்-
இந்த ஈன தனமான-
நன்றி கெட்ட-
செயலை புரிகிறார்கள்!
'நன்றி கெட்ட நாயே'-என
நன்றி உள்ள பிராணியை -
திட்டுகிறார்கள்!
----------------------------------
அருமையான கவிதை.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை.
இன்று அப்படித்தானே நடக்கிறது
'கால்நடை' என்கிறான்
உண்மையில் காலால் நடப்பது மனிதன்தான். அவை காலாலும் கையாலும் நடக்கின்றன.
ஆனால் அவைகளுக்குள்ள பெயரை மனிதனுக்கு சூட்டி அழைக்கிறான் டே நாயே.. டே கழுதை.. என்று.
அசரத்!
Deleteஉங்களுடைய ஆழமான ஆதரவுக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
உங்கள் கவிதைத் திறனை எண்ணி வியக்கிறேன். வார்த்தைப் பிரயோகம் அருமை
ReplyDeleteSEENU!
Deleteஉங்களுடைய ஆழமான ஆதரவுக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
ம் அருமை
ReplyDeleteSEYTHALI!
Deleteஉங்களுடைய ஆழமான ஆதரவுக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
///////மனிதர்கள்-
ReplyDeleteஇந்த ஈன தனமான-
நன்றி கெட்ட-
செயலை புரிகிறார்கள்!
'நன்றி கெட்ட நாயே'-என
நன்றி உள்ள பிராணியை -
திட்டுகிறார்கள்!/////
அருமையான நான் ரசித்த வரிகள், வார்த்தைகள் உபயோகம் வியக்க வைக்கிறது ..!
சுவடுகள்!
Deleteஉங்கள் அன்புக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
நல்ல கவிதை ஆரம்ப வரிகளே அமர்க்களம்...
ReplyDelete//
வார்த்தை-
சிலது-
வெல்லும்!
சிலது-
கொல்லும்!//
kuruvi!
Deleteஉங்கள் அன்புக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
இன்றோ நாம்-
ReplyDelete'வாய் கூசாமல்'-
பேசிடும் பேச்சால்-
வாடுகிறார்கள்-
அதே-உறவுகள்!// உண்மையை சொல்லிப் போகும் வரிகள் .
சசிகலா!
Deleteஉங்கள் அன்புக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
மேலும் உங்கள் பிளாக்கர் பெயரை தெரியபடுத்தவும்!
சில நாட்களாக-
எனக்கு -பின் தொடர முடியவில்லை !
அட...
ReplyDeleteஅழகா சொன்னீங்க... வரிகள் நச்சுன்னு இருக்கு....
வாழ்த்துக்கள் சீனி
mana saatchi!
Deleteஉங்கள் அன்புக்கும்-
அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
ஆம் நண்பரே,
ReplyDeleteவார்த்தைகள் ஓர் வரம்,
பயன்படுத்தும் விதத்தில்
அதன் பயனைப் பெறலாம்..
அழகுக் கவிதை...
மகேன் சார்!
Deleteஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
வார்த்தை-
ReplyDeleteசிலது-
வெல்லும்!
சிலது-
கொல்லும்!“
உண்மைதாங்க சீனி.
நல்ல நல்ல கருத்து. பாராட்டுக்கள்.
arouna!
Deleteஉங்கள் கருத்துக்கும் -
வரவுக்கும் மிக்க நன்றி!a!
வார்த்தை-
ReplyDeleteசொல்லும் வரை-
செல்லா காசு!
சொல்லிய பின்னே-
செலவான காசு!
அருமையான வார்த்தைகள் சகோ...உங்கள் கவிதைகளை ஒரு ராகமாக நான் படிக்கும் போது (எதுகை மோனை???) சில இடங்களில் தடை படுகிறது.ஏனென்றால் அப்படி ஒரு கோர்வையான ராகங்கள் இன்னும் இனிப்பை தரும்.சற்று செதுக்கல்கள் அவசியமோ என்று தோன்றுகிறது.அதிக பிரசங்கிதனத்திர்க்குமன்னிக்கவும்.இணைந்திருப்போம்.நாளைக்கு என்ன தலைப்பில்?
சதீஷ் !
Deleteமுதலில் நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள்!
உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாததால்,
[எதுகை ,மோனை]உண்மையில் எனக்கு அதை பற்றிய-
விளக்கமோ ,அனுபவமோ இல்லை எனலாம்.
வருங்காலங்களில் அதை பற்றிய விளக்கங்கள் -
கிடைத்தால் ,முயற்சிக்கிறேன்!
நான் எனது எண்ணங்களையும்-
சிந்தனைகளையுமே -பதிகிறேன்!
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ஐய்யோ என்ன சகோ...பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லிட்டு...உங்களுக்கு எழுத்துக்களும் எண்ணங்களும் கற்பனைகளும் தினம் தினம் எப்படி புதுசு புதுசா வருதுன்னு நிறைய நேரம் யோசிச்சிருக்கேன். உங்களிடம் உரிமையாய் ஒரு கோரிக்கை....இந்த டூயட் படத்துல "சித்தத்தினால் கொண்ட யுத்தத்தினால்" இந்த மாதிரி ஒரு அடுக்குமொழி(???எதுகை,மோனை???)கவிதை வேண்டும்.தலைப்பு காதல் தவிர எது வேண்டுமானாலும்...நன்றி சகோ.
ReplyDeleteசதீஷ்!
Deleteஅப்படியா!
முயற்சிக்கிறேன்!
எல்லாமே சூப்பர் அண்ணா! நலம் விரும்பிகள் சிலர் ஆதரவின்றி தஞ்சம் கொள்ள தவிக்கையில் வலிக்கிறது அண்ணா! வார்த்தைகள் அருமை!
ReplyDeleteயுவராணி!
Deleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!