Wednesday, 20 June 2012

வீடு!



பறவைக்கு -
ஒரு கூடு!

விலங்குக்கு-
ஒரு காடு!

மனிதனுக்கு-
ஒரு வீடு!

அழியும்-
பட்டியலில்!

பறவைகள்!
விலங்குகள்!
மனிதர்கள்!

வேடிக்கை பார்க்குது-
பாதுகாக்க வேண்டிய-
நாடு!

இதை மறைத்துவிட்டு-
பொருளாதார வளர்ச்சின்னு-
பேசுவது-
வெட்ககேடு!
-----------------------------
மனைகள்-
இருந்தது-
மகிழ்ச்சியின் -
தொழிற்சாலையாக!

இப்போது-
அடித்துகொள்கிறார்கள்-
"அலை வரிசை"-
மாற்றுவதற்காக!

தொடர்களில் -
அழுவுபவார்கள்!-
காசை வாங்கி கொண்டு!

வீட்டுல உள்ளவங்க-
அழுவுறாங்க-
கேபிள் பணம்-
கட்டி கொண்டு!

போடுற நிகழ்ச்சியெல்லாம்-
கோடீஸ்வர நிகழ்ச்சி!

மக்களின் -
வாழ்வாதாரமோ-
அவலகாட்சி!
------------------------------
நேற்றைய அறிமுகங்கள்-
விருந்தினர் என்ற பேரில்-
நடு வீட்டிலே!

நாம் உலகிற்கு-
வர வழியானவள்-
செல்லமாய் வளர்த்தவள்-
செல்ல பிராணிக்கு-
அருகிலே!
--------------------------
கோடிகளை கொட்டி-
கட்டிய வீடானாலும்-
என்ன செய்ய முடியும்!

மழலையின் மொழி-
கேட்கவில்லை என்றால்-
பிச்சை பாத்திரம்-
ஆகி விடும்!
-------------------------
எத்தனை வேலையாட்கள்-
கவனித்தாலும்-
குழந்தைக்கு போதாது!

ஒரு தாயின் அன்புக்கு-
ஈடாகாது!
-----------------------------------


23 comments:

  1. கவிதையின் வரிகள் - நாட்டு நடப்பை விளாசுகிறது

    ReplyDelete
  2. வரிக்கு வரி உண்மை ததும்புகிறது உங்கள் கவிதையில். அருமை.

    ReplyDelete
  3. யதார்த்தத்தின் வெளிப்பாடு!

    ReplyDelete
  4. வீட்டுல உள்ளவங்க-
    அழுவுறாங்க-
    கேபிள் பணம்-
    கட்டி கொண்டு!

    போடுற நிகழ்ச்சியெல்லாம்-
    கோடீஸ்வர நிகழ்ச்சி!

    மக்களின் -
    வாழ்வாதாரமோ-
    அவலகாட்சி!//


    :(

    உண்மை

    ReplyDelete
  5. வரிகள் ரசிக்க வைத்தன நண்பரே.

    ReplyDelete
  6. ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தன நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. araouna!

      ungal iru pinnoottangalukkum-
      mikka nantri!

      Delete
  7. எத்தனை வேலையாட்கள்-
    கவனித்தாலும்-
    குழந்தைக்கு போதாது!

    ஒரு தாயின் அன்புக்கு-
    ஈடாகாது!
    ///////
    அனைத்தும் நிதர்சனம் அண்ணா! தற்பொழுது ஆண் பெண் இருவரும் வேலைக்குப்போகும் இந்த நவீன உலகத்தில் குழந்தை கவனிப்பும் நவீன மயமாகிவிட்டதண்ணா!என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. yuvaraani!

      ungal karuthukku mikka nantri!

      Delete
  8. தொடர்களில் -
    அழுவுபவார்கள்!-
    காசை வாங்கி கொண்டு!
    //ம்ம் ஆட்களையும் சேர்ந்து அழவைக்கும் நிலை!ம்ம் கவிதை ரசித்தேன் அண்ணா!

    ReplyDelete
  9. //மழலையின் மொழி-
    கேட்கவில்லை என்றால்-
    பிச்சை பாத்திரம்-
    ஆகி விடும்!//

    உள்ளுக்குள் வலிகிறது நண்பா

    சிறந்த வரிகள்

    ReplyDelete
  10. THANAPALAN!

    ungal varavukkum karuthukkum mikka nantri!

    aalosanaikkum nantrikala pala!

    ReplyDelete
  11. காடு நாடு வீடு கடந்து மனதில் நிற்கும் மற்றுமொரு கவிதை..

    ReplyDelete