Thursday, 19 July 2012

நீங்க ஆளுங்க....!!போராட்டமாக-
தெரிந்தது-
தாய் மொழிக்கு!

பெரும் போராட்டமானது-
பிணை கிடைக்க-
மகள் "மொழிக்கு"!

கருணையில கூட-
விடுவிக்கல-
சிறுபான்மை கைதிகளை!

ஏறெடுத்து கூட-
பார்க்கல -அவர்கள்
கண்ணீர்களை!

"திகாரின்" முன்னால்-
காண முடிந்தது-
கலங்கிய கண்களை!

நாட்டு மக்களே-
குடும்பம்-
என்றவர்கள்!

குடும்பத்துக்கே-
நாடு-
என்றானார்கள்!

ஆட்சியோ-
இல்லையோ-
போயிடுவாங்க-
கொட நாடு!

மின்சாரம்-
இல்லாமலும்!

விலைவாசி-
உயர்வாலும்!

தமிழ் நாடே-
நீ!-
வாடு!

படித்த மக்கள் வேலை-
டாஸ் மாக் கடையிலே!

படிக்காதவர்கள்-
நிறுவகிக்கிரார்கள்-
கல்லூரிகளை!

"அவர்கள்" விற்றதை-
அரசு -
விக்கிறது!

அரசு-
நடத்தியதை-
"அவர்கள்"நடத்துகிறார்கள்!

கம்பீரத்துடன்-
கடன் பெறலாம்-
மாணவர்கள்!

சொல்கிறார்கள்-
அதிகாரத்தில்-
உள்ளவர்கள்!

வட்டிக்கு மேல-
வட்டியை போட்டு-
மாணவன் வாழ்வையும்-
சூனியமாக்கிடுவார்கள்!

வலிய வலிய-
கடன் கொடுத்த-
ஐரோப்பா நிலை-
என்னாச்சி!?

பொருளாதார-
மந்ததுல-
விழுந்தாச்சி!

நம்ம நாட்டு கதி-
என்னாகும்-
அண்ணாச்சி!?

கொடுக்குற மாதிரி-
கொடுப்பீங்க!

பிடுங்குற மாதிரி-
பிடுங்குவீங்க!

அதுல ஒரு-
உதாரணம்!

விவசாய கடன்-
தள்ளு படி!

ஏன் விவசாயிகள்-
தற்கொலைகள் தெரியவில்லையே-
நின்றபடி!?

மக்கள் நாங்க-
அதெல்லாம்-
மறந்துருவோம்ங்க!

நீங்களே!
"மாறி மாறி-
ஆளுங்க!!


38 comments:

 1. நாட்டில் நடக்கும் கொடுமைகளை அப்படியே கவிதை மூலம் கொண்டு வந்துள்ளீர்கள்... முடிவில் நல்ல பஞ்ச்...

  ReplyDelete
 2. அரசியல் விளையாட்டுக்களை அம்பலப்படுத்தும் கவி நண்பா தொடருங்கள்

  ReplyDelete
 3. மக்கள் நாங்க-
  அதெல்லாம்-
  மறந்துருவோம்ங்க!

  நீங்களே!
  "மாறி மாறி-
  ஆளுங்க!!

  ஆதங்க வரிகள் சுடவே செய்தன.

  ReplyDelete
 4. //கம்பீரத்துடன்-
  கடன் பெறலாம்-
  மாணவர்கள்!// ஆம் அய்யா அந்த வழியை நான் அனுபவித்து உள்ளேன்

  //நீங்களே!
  "மாறி மாறி-
  ஆளுங்க!!//
  வேற வழி.... அருமை நண்பா

  ReplyDelete
  Replies
  1. seenu!

   mikka nantri !
   sakotharaa!

   Delete
 5. செருப்படி சகோ...கருணா க்கு ஒரு காட்டமான கவிதை வேண்டுகிறேன்...தொடருங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. satheesh!

   ungal varavukku mikka nantri!
   neenga sonnathai niraivetra mudiyumaa ....?
   theriyala...

   Delete
 6. “அவங்களே
  மாறி மாறி
  ஆளட்டும்...“

  கவிஞர்கள்
  பாடிக்கொண்டே
  இருக்கட்டும்... (வேறு என்ன செய்ய முடியும்)

  ReplyDelete
  Replies
  1. arouna!

   mikka nantri!

   maarum nam nilai!

   Delete
 7. சாட்டையடி வரிகள் சொந்தமே!!வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. athisaya!

   ungalmuthal varavukku mikka nantri!

   Delete
 8. தினமும் எப்படித்தான் உங்களால் இப்படி அருமையான கவிதையை படைக்க முடிகிறதோ?

  ReplyDelete
  Replies
  1. suvadukal!

   neengal tharum aatharavu thaan!
   mikka nantri!

   Delete
 9. நாட்டு நடப்பு, கொடுமை அப்பட்டமாக உங்களின் வரிகளில்....ஆதங்கம் புரியுது

  ReplyDelete
 10. நாட்டு நடப்பு இப்படித்தான் கேவலமாக.... உங்கள் வரிகளில் உள்ள ஆதங்கம் புரியுது சீனி....

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  ReplyDelete
  Replies
  1. naga raj!

   ungalukku mikka nantri!

   Delete
 11. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் தொடரும் குடும்ப அரசியல் சீனி...மாற்ற யாராவது துணிந்து முயற்சிக்கவேண்டும் !

  ReplyDelete
  Replies
  1. sako!

   maarum!
   maatram ontre-
   maaraathathu!

   Delete
 12. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete
  Replies
  1. thakaval sonnamaikkum-
   ungalathu anpum ennai-
   viynthida vaikkirathu!


   mikka nantri sakotharaa!

   Delete
 13. இன்றைய அரசியலும் மக்களின் அவலங்களும் அழாகாக கூறியுள்ளீர்கள்... அருமை. என் வலைக்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

  ReplyDelete
  Replies
  1. aysha ungal muthal varavukku mikka nantri!

   Delete
 14. வலைச்சரம் மூலம் தங்கள் கவிதை வாசிக்கும்
  வாய்ப்புக் கிடைத்ததை இட்டு மகிழ்கிறேன் .
  மிக அழகாக ஆதங்கத்தோடு வரைந்த கவிதை அருமை!..
  தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. ungal muthal varavukku
   mikka nantri ayyaa!

   Delete
 15. அன்பின் சீனி

  ஆதங்கமும் வருத்தமும் புரிகிறது ...... அரசியலில் இயல்பாக நடக்கும் செயல்கள் - ஒன்றும் சொல்வதற்கில்லை.

  "அவர்கள்" விற்றதை-
  அரசு -
  விக்கிறது!

  அரசு-
  நடத்தியதை-
  "அவர்கள்"நடத்துகிறார்கள்!

  அருமை அருமை - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் சீனி - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. படித்த மக்கள் வேலை-
  டாஸ் மாக் கடையிலே!
  படிக்காதவர்கள்-
  நிறுவகிக்கிரார்கள்-
  கல்லூரிகளை!""

  என்ன அற்ப்புதமான வார்த்தைகள்

  ReplyDelete
  Replies
  1. muthal varavukku mikka nantri!

   sekar!

   Delete
 17. நாட்டு நடப்பை நையாண்டியோடு சொன்ன விதம் அருமை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
  http://thalirssb.blogspot.in/2012/08/4.html
  டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

  வலைச்சரம் மூலம் என் முதல் வருகை!

  ReplyDelete
 18. பல அர்த்தங்கள் சொல்லி போகிறது கவிதை.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. வலைச்சரம் மூலம் என் முதல் வருகை ...

  ///வலிய வலிய-
  கடன் கொடுத்த-
  ஐரோப்பா நிலை-
  என்னாச்சி!?///

  சாட்டையடி கேள்வி ...!!!
  அருமையான பதிவு ...!

  ReplyDelete
  Replies
  1. sarasvathi!

   ungal muthal varavukku mikka nantri!

   Delete