வறுமையானவர்கள்!
செழுமையானவர்கள்!
பங்களாவாசிகள்!
பரதேசிகள்!
கல்விமான்கள்!
கல்லாதவர்கள்!
நியாயத்திற்காக -
செத்தவர்கள்!
நியாயத்தை-
சாகடித்தவர்கள்!
வள்ளல்கள்!
வழங்காதவர்கள்!
உத்தமர்கள்!
ஊதாரிகள்!
எழுதி -
எழுச்சி பெற-
செய்தவர்கள்!
எழுத்தில்-
விஷ அம்பை-
எய்தவர்கள்!
பொன்னானவர்கள்!
மண்ணா போனவர்கள்!
ஆண்ட மக்கள்!
அடிமை மக்கள்!
ரத்தம் பார்த்து-
துடித்தவர்கள்!
ரத்தம் பார்க்க-
துடிப்பவர்கள்!
பேச்சில் -
விளாசியவர்கள்!
"விளாசியதில்"-
மூச்சை நிறுத்தியவர்கள்!
மலை போல்-
நிமிர்ந்தவர்கள்!
மழை போல்-
விழுந்தவர்கள்!
பசிக்கு-
புசித்தவர்கள்!
புசிக்கவே-
சுவாசிக்கிறவர்கள்!
எத்தனை பேர்-
வரவு!
அத்தனை பேரும்-
செலவு!
"போனவர்கள்"-
வந்தவர்கள்!
"போக போகிறவர்கள்"-
"இருக்கிறவர்கள்"!
"வர போகிறவர்களும்"-
"போகிறவர்கள்"!
மண்ணிலிருக்கும்-
நீர் ஆவியாகிறது!
விண்ணிலிருந்து-
அதுவே-
மழையாகிறது!
இது ஒரு-
சுழற்சி முறை!
நல்லதும்-
கேட்டதும்-
தலை தூக்குவது-
உலகின் நிலை!
இன்று-
கருதிடபடுகிறார்கள்!
"இப்படிதான்"-
வாழனும் -என்பவர்கள்!
அறிவீனர்களாக!
"எப்படியோ"-
வாழ்ந்தால் சரி-என்பவர்கள்
அறிவாளிகளாக!
ஒண்ணுதான்-
நகர பேருந்தும்!
நம் வாழ்வும்!
"எங்கிருந்து புறப்பட்டோமோ"-
"அங்கேயே சேர்கிறோம்!"
பரிசோதனையாளர்-
சோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!
இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!
பரிசோதனையாளர்-
ReplyDeleteசோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!
இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!
அருமை அருமை
ஆனாலும் பயணச் சீட்டு வைத்திருப்போர்
மனச் சங்கடங்கள் இன்றி பயணிக்கிறோம்
இல்லாதவர்கள் இறங்குகிற வரையில்
பதட்டத்துடன்தான் பயணிக்கிறார்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ayya!
Deleteungal muthal varavukkum karuthukkum-
urchaaka moottalukkum mikka nantri-
ayya!
நாம் கவனிக்க மறந்த வாழ்வின் ஒரு பக்கத்தை மிக அழகாக பதிவுசெய்துள்ளீர்கள். மிக அருமை நண்பா! கவிதையின் இறுதி வரிகள் நச் நண்பா!
ReplyDeletemaniyam!
Deletemikka nantr!
sako!
மனித வாழ்வைப் பற்றி அழகாக கவிதை மூலம் சொல்லி விட்டீர்கள்..
ReplyDeleteபிடித்த வரிகள் :
/// "எங்கிருந்து புறப்பட்டோமோ"-
"அங்கேயே சேர்கிறோம்!" ///
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
sako !
Deletemikka nantri!
sako!
இறப்புக்கு பின்தான்-
ReplyDeleteதெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!
வாழ்வின் உண்மை நிலையை உணர்த்திப் போகும் வாிகள்.
sasi!
Deletemikka nantri!
வாழ்க்கை
ReplyDeleteகடைசி வரி சூப்பர்ங்க சீனி!
ReplyDelete>>>> இறப்புக்கு பின்தான்-
ReplyDeleteதெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று >>>>
சத்திய வாக்கு நண்பா.! கவிதை மிக அருமை! வார்த்தைகள் பிரயோகமும் வியப்பு!
suvadukal!
Deletemikka nantri!
sakotharaa..!
இறப்புக்கு பின்தான்-
ReplyDeleteதெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!
//
அழகு...
எனக்கு இப்பவே தெரியும் நண்பரே...சிலை வைக்க தயாரா? -:)
revari!
Deleteungal varavukku mikka nantri!
silai verayaa..!?
//பரிசோதனையாளர்-
ReplyDeleteசோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!
இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!//
சிறப்பான கவிதை... வாழ்த்துகள்.
nagaraj sir!
Deletemika nantri sir!
அழகு நண்பா.......
ReplyDeletekuruvi!
Deletenantri nanpaa!
இறப்புக்கு பின்தான்-
ReplyDeleteதெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!
தெரிய வேண்டியவருக்கு தெரியாது போகும் உண்மை...
satees!
Deletemikka nantri!
வாழ்ந்ததின் பலன்தான் நம் இறுதிக்காலத்தில்....அழகாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் சீனி !
ReplyDelete