வாழ்க்கை-
கருவறையில்-
துவங்கி-
கல்லறையில் -
முடிவது தானே-!?
கருவறையே-
கல்லறையாய்-
ஆனதேனோ...!?
உருவம் -
அடைகிறதே-
உயிரணு -
ஒன்னு!
அதை -
'அழிச்சிட'-
அதிகாரம் -
எவன் தந்தான்னு-
சொல்லு!?
பொண்டாட்டியை -
உயிரோடு -
கொல்கிறாய்-
கருக்கலைப்பால்!
பொம்பள புள்ள -
பொறந்தாலும் -
ஊத்துறே-
கள்ளி பால்!
எதை -
விதைக்கிறாயோ-!
அதை தானே -
அறுப்பே!?
எங்களை -
கொன்று -
புதைக்கிறார்களே-
எதை-
'புடுங்க!'?
அன்பின் சீனை - ஆதங்கம் புரிகிறது - பெண் சிசுக் கொலைகள் தடுக்கப் படுகின்றன - இருப்பினும் நடது கொண்டு தான் இருக்கின்றன. கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் சீனா!
Deleteஉடனடி வரவிற்கும் -
கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!
அன்புள்ள சீனி..
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது..
பெண்குழந்தை பிறந்தால் பீடை என்று
பெற்ற தகப்பனே உயிருடன் புதைத்த
அந்த அறியாமைக் காலத்தில்
பெண்குழந்தையின் பிறப்பை 'நற்செய்தி'
என்று அழுத்தமாக கூறிய அருள்மறை வசனம்
நினைவுக்கு வருகிறது.
குழந்தைகள் இறைவனின் வாழ்த்து மடல்கள் என்றார் 'கவிக்கோ'
அந்த மடல்களைக் கருவிலேயே கசக்கிப் பிழிகின்ற
கயவர்கள் கண்டிக்கப்படவேண்டும்
தண்டிக்கப்படவேண்டும்
asarath!
Deleteungal azhakiya karuthukku mikka nantri!