Monday, 19 September 2011

பேசிய தாஜ் மகால்....!

வானில்-
 ஒரு பௌர்ணமி!
தேயும் -
வளரும்!

பூமியில் ஒரு-
 பௌர்ணமி!
தேயாது -
வளராது!

எத்தனையோ பேர் -
காதலை-
சமாதி ஆக்கும் போது-
சமாதியை காதல் -சின்னமாக்கினான்-
ஷாஜகான்!

சுற்றி சுற்றி -
பார்க்கிறார்கள் !
அத்தனை -
அழகு வாய்ந்த-
கட்டடம் !நான்!

உலக அதிசியத்தில் -
முதலிடம்-
நான்!

நான் பேசுகிறேன் -
இல்லை-
கதறுகிறேன்!


ஓ!
முஸ்லிம் சமூகமே!
இந்தியாவை-
 எண்ணூறு ஆண்டு-
ஆண்டோம் என்று -
பிதற்றும்-
பித்தர்களே!


இனி -
எப்போது ஆளுவோம்-
என்பதை -
சிந்தியுங்களேன்!

பாபர் பள்ளியை -
பாழாக்கினார்கள் !
மக்கள் நம்பி -
இருந்தது-
நீதி மன்றங்களை !-
தீர்ப்பை -
வழங்கினார்கள்-
நீதி பதிகள் !

அந்தோ !பரிதாபம் !
நீதி தான் இல்லை-
பாதி கூட!

காந்தியே!
நாட்டுக்காக -
போராடினாய் !
புகைப்படத்தில் -
காட்சி அளிக்கிறே,-
ஒரே ஒரு -
துண்டுடன்!

உன்னை சுட -
ஆள் அனுப்பிய-
சாவகர் -
கோட் சூட்டுடன்!

திரும்பாத -
கணக்கெல்லாம்
காந்தி கணக்காம்!
காந்தி கணக்கை-
 முடித்த கும்பல் -
இப்போ நாட்டின் -
கணக்கை முடிக்க-
ஆட்சி வேண்டுமாம்!

சமூகமே!
செங்கோட்டையும் ,
ஆக்ராவையும் ஆண்ட-
சமூகம் நீங்கள்!

இன்று அடிமை
சமூகமும் நீங்கள்!

நயவஞ்சக -
நாடோடிகள்-
நாடு பிடிக்கும் போது-
நாட்டை நல் வழி படுத்திய-
நீங்கள் -ஏன் எழுந்து-
நிற்க கூடாது!?

காந்தியை சுட்டவனும்-
இந்திராவை கொன்னவனும்-
ராஜுவை சல்லடை -
ஆகியவனும்
இதில்-
 எவன் உள்ளான்
முஸ்லிம் !?

அப்பாவிகள் !
ஏமாளிகள் !
ஓட்டுக்கு மட்டும் உதவும் -
உதவாக்கரைகள் !
இட ஒதுக்கீடே -
கிடைக்காத-
இழிச்ச வாயர்கள் !
பட்டங்கள்-
 போதாதென்று-
அரசு தரும் -
இலவச பட்டம்
தீவிர வாதிகள்!?

சத்திய வான்களே!
வெரட்டினால் ஓடும் -
நீங்கள்-
வெள்ளாடு கூட்டமா!

அநீதியை-
 கண்டு தான் -
சிம்ம கூட்டம்-
சும்மா இருக்குமா!?

சுற்றி பார்கிறார்கள் -
என்னை!
வெறித்து பார்க்கிறேன்
நான் -வானை!

காலையில் கதிரவன்
இரவில் நிலவும் -
இவர்களின் பிள்ளைகள்-
நட்சத்திரங்கள்!

விண்மீன்கள் -
ஒன்று இணைந்தால்-
விண்ணையும் தாண்டும் -
ஒளி-
கிடைத்திடுமே!

சத்திய வான்கள் ஒன்று -இணைந்தால்-
சத்தியம் ஜெயிப்பது-
சாத்தியமே!

இதோ!
தெற்கில் -
தெரிகிறது ஒளி!

என் நாட்டிற்கு -
இந்த கதியா?
நாம் பூமிக்கு -
சுமையாக-
இருப்பது முறையா!?

மாற்றம் -
கிடைக்கும் வரை
மன்றாட புறப்பட்டது -
சோசியல் தேமக்ட்ரடி-
பார்டி ஆப் இந்தியா!!!

இப்போதும் நான் -
கண்ணீர் வடிக்கிறேன் -
கவலையால் -அல்ல
ஆனந்தத்தால்.....!

No comments:

Post a Comment