Wednesday 28 March 2012

கிழிஞ்சல்கள்!

எத்தனை -
கூர்மை-
பாவையின் பார்வைக்கு!

கீறலை உண்டாக்கி-
விட்டதே-
 பாறையான-
எனக்கு!
----------------------------

புது ஆடை-
கனவாக இருக்கும்!

"மறைக்க" வேண்டிய-
இடத்தில் கிழிந்தே-
இருக்கும்!

"ஊக்க"படுத்த-
மறந்தவர்கள்-
மத்தியிலும்!

"ஊக்கு"-மறைப்பதை
மறைத்து-
மானம் காக்கும்!
---------------------
மனம் ஏங்கும்-
பண்டிகை நாளுக்காக!

கிழியாத ஆடை-
கிடைக்கும் -
என்பதற்காக!
----------------------
"வரையிலும்"-
"போகையிலும்"-
போர்த்துவது-
கிழித்த துணியை!

இடையில-
ஏனடா?-
அழிச்சாட்டிய வாழ்கை!?
-------------------------
போரில்-
உண்மைகளை-
கிழித்து எரிகிறது-
பொய்கள்!

கற்புகளை சூரையாடுது-
வேட்டை நாய்கள்!

ஓநாய்களிடம்-
வெள்ளாடுகள்-
எதிர்பார்க்கலாமா?-
நியாயங்கள்!
-----------------------
கிழிக்கப்பட்ட-
வயிறுகள்!

எரிக்கப்பட்ட-
கருக்கள்!

எத்தனை-
கலவரங்கள்!

மௌனம் காக்குது-
நீதி மன்றங்கள்!
--------------------------
வாள்களால்-
மனித உடல்கள்-
கிழிக்க பட்டது-
ஆக்கிரமிப்பு -
போராம்!

துப்பாக்கிகள்-
உடல்களை சல்லடையாக்குவது-
"அன்பான" போரா?

அது என்ன-?
அறியாமை காலம்!

இது என்ன-,
அறியுடமை காலம்!
-----------------------

துண்டு -
இடுப்புக்கு!

கம்பு-
கைக்கு!

நெஞ்சு கிழிந்தது-
தோட்டாவுக்கு!

"காந்தி"களுக்கு-
இடம் இல்லை-
மண்ணிலே!

"கொட்செக்களுக்கு"-
பஞ்சம் இல்ல-
நாட்டிலே!
----------------------
தைத்து போடும்-
உடைகளை-
ஏழை அபலைகள்!

"கிழித்தே"போடுவது-
இன்று -
நாகரிக அவலங்கள்!
--------------------------

14 comments:

  1. வாழ்வின் அவலங்களை, உலகின் அநியாயங்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது இந்தக் கவிதை.

    ReplyDelete
  2. நானும் ஃபாலோவர் ஆகிக் கொண்டேன். படைப்புகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. nizam!
      ungal muthal varavukkum-
      follower aanathukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. கடைசி நாகரீகம் கிழித்த வரிகள்.அருமை சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  4. #தைத்து போடும்-
    உடைகளை-
    ஏழை அபலைகள்!

    "கிழித்தே"போடுவது-
    இன்று -
    நாகரிக அவலங்கள்!#

    சும்மா நச்சுன்னு இருக்கு

    ReplyDelete
    Replies
    1. haja;
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. //"கிழித்தே"போடுவது-
    இன்று -
    நாகரிக அவலங்கள்!//
    அருமை

    ReplyDelete
    Replies
    1. chennai piththan ayya!

      ungal varavukkum -
      karuthukum mikka nantri!

      Delete
  6. மனம் ஏங்கும்-
    பண்டிகை நாளுக்காக!

    கிழியாத ஆடை-
    கிடைக்கும் -
    என்பதற்காக!//வறுமையின் ஏக்கம் ...

    ReplyDelete
    Replies
    1. sasikalaa!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  7. ம்ம் இன்றுதான் தங்களின் தளத்தையும் பார்க்கிறேன்
    ரொம்ப லேட்டு மன்னிக்கவும்

    இரண்டு இரண்டு வரிகளில் கருத்துரை இடுவீர்கள் கவிதை இட்டதை இன்று தான் பார்க்கிறேன் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. hyder ali;

      ungal muthal-
      varavukkum karuthukkum
      mikka nantri!

      Delete
  8. seenu eppothm polave super

    ReplyDelete