Saturday, 17 March 2012

செருப்பு!

நகைகளை விட-
செருப்புக்கு ஆபத்து-
கல்யாண வீட்ல!
-----------------------
"பேச்சிக்கு" கூட-
செருப்பு பிஞ்சிடும் -என
சொல்வதில்லை- 
பெண்கள்!

கவலையில் -
செருப்புதைக்கும்-
தொழிலாளர்கள்!
--------------------------------
வருத்த கோரிக்கை-
வைப்பது- 
பிஞ்ச செருப்புகள்!

அட்டூழிய -
அரசியல்வாதி மேல் வீசி - 
என்னை -
கேவலபடுத்தாதீர்கள்!
--------------------------------
ஆடு செத்தாலும்-
பதில் சொல்லணும்-என
பயந்த "அதிபர்"எங்கே!!

கொலைகளை வேடிக்கை-
பார்த்தும்!
செருப்படி படுவதையும்-
அங்கீகாரமாக-எண்ணும்
அரசியல்வாதிகள்-
எங்கே!!?
--------------------------
செருப்பு நாட்டை-
ஆண்டதாக-
சொல்றாங்க!

செருப்பு தைக்கும்-
தொழிலாளியை-
"தாழ்த்தபட்டவனுன்னு"-
சொல்வது-
ஏங்க!?
--------------------------
பரிதாபத்துக்குரியது-
நடந்து தேஞ்ச-
செருப்பும்!

திரும்பியே பார்க்காதவளை-
நினைத்து வருந்தும்-
என் மனசும்!
--------------------------
நீ!
இரக்கம்  இல்லாதவளடி-
மறைத்து கொள்கிறாய்-
சேலைக்குள்!-
உன் முகத்தை!

உன் கால் செருப்பு-
எட்டி பார்க்குதடி-
என் முகத்தை!
------------------------
வீட்டு வாசலில்-
கிடக்குது-
 உன் செருப்பு!

உள்ளே நீ இருப்பதையும்-
தெரிய படுத்தும்!

மனசுக்கும் கொஞ்சம்-
ஆறுதல் கொடுக்கும்!
------------------------

தவிர்க்க வேண்டியது-
வாங்கியவனையே-
கடிக்கும் காலணியையும்!

வாட்டி எடுக்கும்-
அவளது நினைவையும்!
------------------------

6 comments:

  1. எல்லாம் இருந்தாலும் கடைசிதான் எனக்கு கொஞ்சம் நகைச்சுவையோடு பிடிச்சுது சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal varavukku-
      karuthukku nantrkal!

      Delete
  2. அருமை அருமை
    வல்லவன் கையில் புல்லும் ஆயுதம் போல்
    எழுத்து வசப்பட்டவருக்கு காதலிவீட்டு வாசலில் கிடக்கும்
    செருப்பு கூட அழகிய கவிதையை அள்ளித் தண்டு போகிறதே
    மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Ramani ayya!

    ungal vaazhthukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  4. மிகவும் அழகான அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.
    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Gopala kirushnan ayya!

      ungaludaya muthal varavukkum-
      karuthukkum mikka nantri!
      ayya!

      Delete