Friday 2 March 2012

இரவு!

உகந்தது-
"தப்பு" பண்ணுறவங்களுக்கு!

என்ன பட்டம் -
கொடுக்கலாம்-
பகலையே-
இருளாக்கியவர்களுக்கு!?
--------------------------------
நாட்டுக்கு -
சுதந்திரம் கிடைத்தது-
அடிபட்டு- மிதிபட்டு!

சுதந்திர நாட்டுல-
இலவசமா கிடைக்குது -
மின் வெட்டு!
----------------------------
தவறா பயன்படுத்தினால்-
"ஷாக்" அடித்ததால்-
சொன்னாங்க-
சம்சாரம்-
அது ஒரு-
மின்சாரம்!

செயல்படாமல்-
இருப்பதால்-இனி
சொல்லலாம்!-
மின்சாரம்-
அது ஒரு-
அரசாங்கம்!
------------------------
விடியும்-
இரவு!

விடியாதா-?
என் மக்களின் -
வாழ்வு!
---------------------
மர்மம் நிறைந்தது-
இரவும்-
என்கொவ்ன்டரும்!
--------------------------
விடியாமல் இருக்காது-
இரவு!
தராமல்-
இருக்காது- வெற்றியை
முயற்சி!
-------------------------
என்னவளின் மௌனத்திற்கு-
விடை தேடுகிறேன்-
"பெரிய" அறிவாளி-போல!

வீட்டுல தொலைச்ச-
பொருளை!-
வீடு இருட்டா இருப்பதால்-
தெரு விளக்கில்-
தேடும் -
முல்லாவை போல!
--------------------------
தேவை இல்லாதவளாக-
தெரிவாள்-பகலுக்கு!

தேவதையாக தெரிவாள்-
இரவுக்கு!

மனைவி-
சில கணவர்களின்-
பார்வைக்கு!
---------------------
இரவு!
உலகின் போர்வை!

போர்த்தி படுத்தாலும்-
அவள் நினைவு-
விட்டு விலக-மறுக்குது
மனதை!
------------------------------
இரவின் நிசப்தம்-
இரயிலின்-
சப்தமும்-
நீ !-என்னுடன்
இருந்தால்!

இடி சப்தம்-
இதய துடிப்பும்-
நீ!-என்னை
பிரிந்தால்!
------------------------

6 comments:

  1. ayayooooooooooooooo meee intha kavithai padikkalaaaaaaaaaaaaaaaaaaaaaaaa....


    paarkkaveillai appuram enguttu padikkaaaaaaaaaaaaaaaaaaaaa..

    meeeeeeeeeeeeeeeeee escapeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

    ReplyDelete
    Replies
    1. kalai;

      ellorum padichaalum-
      karuthu podaama povaanga!

      neengathaan-
      padikkaamale-
      comments podureenga!

      vanthathukku nantri!

      Delete
  2. தவறா பயன்படுத்தினால்-
    "ஷாக்" அடித்ததால்-
    சொன்னாங்க-
    சம்சாரம்-
    அது ஒரு-
    மின்சாரம்!

    செயல்படாமல்-
    இருப்பதால்-இனி
    சொல்லலாம்!-
    மின்சாரம்-
    அது ஒரு-
    அரசாங்கம்!//

    அசத்தலான வரிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ayyaa ramani varkale!

      ungal varavukkum-
      urchaaka moottalukkum-
      mikka nantrikal ayyaa!

      Delete
  3. பகல் சிலசமயம் கொடுமைபோல இரவும் சந்தோஷம்தான் சிலசமயத்தில் மட்டும்.அழகான இரவின் வரிகள் !

    ReplyDelete