Thursday 8 March 2012

தாராளமும்/பஞ்சமும்

தாராளம்!-
பிரமாண்ட படங்கள்!
பஞ்சம்-
நடிகை ஆடைக்கு!

தாராளம்-
நீதி மன்றங்கள்!
பஞ்சம்-
நீதிக்கு!


தாராளம்-
பொருளாதார வளர்ச்சி-!
பஞ்சம்-
ஒரு வாய் கஞ்சி-
ஏழைக்கு!

தாராளம்-
அதிக பேச்சு!
பஞ்சம்-
செயல் பாட்டுக்கு!

தாராளம்-
நன்னெறி புத்தகங்கள்!
பஞ்சம்-
நீதி நெறியுடன் வாழ்பவர்க்கு!

தாராளம்-
மக்கள் தொகை!
பஞ்சம்-
கருணை நெஞ்சத்துக்கு!

தாராளம்-
அன்னையர்-
தந்தையர்-தினங்கள்!
பஞ்சம்-
பெற்றோரை தன்னுடன்-
வைத்து கொள்ளும்-
மகன்களுக்கு!


தாராளம்-
தலைவர்கள் பிறந்தநாள்கள்!
பஞ்சம்-
அவர்கள் சொன்ன நல்லதை-
செய்பவர்களுக்கு!

தாராளம்-
ஆடை அலங்கார நிகழ்சிகள்!
பஞ்சம்-
உடலை மறைக்கும்-
உடைகளுக்கு!

தாராளம்-
ஊடகங்கள்!
பஞ்சம்-
உண்மை சொல்லும்-
ஊடகங்களுக்கு!

6 comments:

  1. romba super seenu...
    kalakkal...

    unga kavithai vadivil nalla munnettram theriyuthu..vazththukkal

    ReplyDelete
    Replies
    1. kalai;

      ungal varavukkum-
      karuthukkum-
      urchaaka moottalukkum-
      mikka nantri!

      Delete
  2. தொடர் சிந்தனையை தொடர்ந்து படித்து
    வெகுவாக ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!

      ungaludaya varavukkum-
      urchaaka moottalukkum
      mikka nantri!

      Delete
  3. உங்கள் சிந்தனைகளுக்கு அளவேயில்லாமல் தொடர்கிறது.அசத்தல்.எது தாராளம்.எதுக்குப் பஞ்சம்....!

    ReplyDelete
    Replies
    1. Hemaa !

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete