Friday 23 September 2011

ஒரு கண்ணீர் கதை......!



ஓய்வுக்கு-
 செல்கிறது -
சூரியன் -
மஞ்சளாக!

மடியில்-
 கிடந்தாள்-
மங்கை-
 அவள் -
கெஞ்சலாக!

கவலைகளை -
கரைக்கும் -
இடம் -
கடற்கரைகள்!

கவலையுடன் -
இருந்தது -
இரு கிளிகள்!

நிறுத்தினாள் -
அழுகையை!

பார்த்தாள் -
அவனது முகத்தை!

தீர்க்கமாக-
 பார்த்தாள் -
தீர்வு கண்டிட -
துடித்தாள்!

கூட்டி கொண்டு போ!-இல்லையினா
கொன்னுட்டு போ!-
என்றாள்!

பதிலை-
 எதிர்பார்த்தாள்-
பதிலாக- மௌனமே-
 கிடைத்தது!

நேரம்-
 கடந்தது !
அவளது-
அழுகை -
தொடர்ந்தது!

புரிந்து கொள்ள -
மாட்டாயா?-
கேட்டான் -
சலிப்புடன்!

சொல்லென்றாள்-'
சுள்ளென்ற "-
கோபத்துடன்!

முடியாதென்றான் -
இறுகிய-
 முகத்துடன் !

நேரங்காலம் -
தெரியாமல் -
சுற்றினான் -
காதலை சொல்ல!

தலையில் -
அடி பட்ட -
கோழியை போல!-
தலை சுற்ற வைத்தான் -
மெல்ல மெல்ல !

அவனையே -
கட்டி கொள்ளவா ?!-
கேட்டாள் கேள்வியுடன்!

எவனையும் -
கட்டி கொள் -
என்னை தவிர !-
முடித்தான் -
பதிலுடன்!

கடல்தான் -
பொங்கும்-
பௌர்ணமி-
 நிலவில்!

கோபத்தில் -
பொங்கினாள்-
கரையில் -
நிலவு இவள்!

நீ!
ஆம்பளையினு -
சொல்லிடாதே!
இனி-
காதல் பேசி -
எவ வாழ்கையும் -
கெடுத்திடாதே!

வாதத்திற்கு -
முடிவு கட்டினாள்!
திரும்பி பார்க்காமல் -
நடை யை கட்டினாள்!

வெறித்து பார்த்தான்--
அவள்-
மறையும் வரை!

வெறுத்து போய் -
பார்த்தான் -
கடலை கண்ணு கெட்டும் -
தூரம் வரை!

வெளியேற வழி -இல்லையென்றால்-
அணையை உடைக்கும் -
வெள்ளம் போல!

முற்றும் துறந்தவன் -என 
சொல்லி கொண்டு-
முழுசா தொறந்து கொண்டு -அலையும்-
போலி துறவிகளை -
போல!

அடக்கிய வேதனைகள் -
எல்லாம்-
கன்னத்தில் வடிந்தது -
கண்ணீர் களாக!

கத்தினான்-
கதறினான் -
கனவு கோட்டைகள் -
கலைந்ததால்.....!

அழுகையின் -
ஊடே-
அலை பேசி -
அலறியது!

சொன்னான்-
எல்லாம் முடிந்தது -என
மறுமுனையில்-
 நண்பன்!

!ம்ம்ம்...!என்று -
சொன்னான்-
அலை பேசியை -
அணைத்தான்!

நினைத்து-
 வருந்தினான்-
தன் நிலையை!

எண்ணி இருந்தான்-
நேற்று வரை!
காதலியோடு வாழலாம் -
காலம் வரை!

இருந்தது திட்டம் -
பறந்து விட !
தன் காதலியோடு -
ஓடி விட!

தகவல் அவனுக்கு -
வந்தது இடியென!

தங்கை-
 ஓடி விட்டாள்-
ஏதோ ஒரு -
'தடியனோடு!

பெத்தவங்கள -
மறந்துட்டு -
ஓடுரவுங்க!

மறக்காம -
எழுதி வச்சிட்டு -
போவாங்க -
கடிதம் ஒன்னு!

கிராமங்களில் -
சொல்வதுண்டு-
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு!

இங்கே!
துண்டு சீட்டு-
 கடிதத்தால்-
ஒரு குடும்பமே -
தற்கொலை பண்ணி -
செத்து போச்சி!

ஒரு காதல் வாழ-
ஒரு குடும்பம்-
 சாகனுமா!?

ஒரு புள்ளியில் -
ஆரம்பிக்கும் -
எழுத்தை போல!

தன் குடும்பம்-
" போனது போல-"
இன்னொரு குடும்பம் போகனுமா!?

மாற்றம்-
 ஒண்ணுதான் -
மாறாதது!

இன்றைய சம்பவம் -
நாளைய சம்பவத்தை -
மாற்றியது!

முடியாது என்ற -
வார்த்தையில் -
முடித்து கொண்டான் -
தன்-
காதலை !

குற்ற பதிவு இல்லாமல்-
மருத்துவ மனையில் -
-அனுமதிக்க மாட்டார்
மருத்துவர் கூட!

எந்த பதிவும்-
 இல்லாமல் கூட -
காப்பாற்ற முயற்சிப்பார்-
ஆம்புலன்ஸ் -
ஓட்டுனருக்கு -
மனிதாபி மானம் கூட!

ஓட்டுனரின் -
மன நிலை தான்-
இவனுக்கு கூட!

அதனாலே -
ஒதுக்கினான் -
தன் -
காதலை கூட!

நொந்து -
செத்தவர்களின் -
உடலை குத்தி -
கிழிப்பார்கள் -
பிரேத பரிசோதனை -என்ற
பெயரில்!

ஆறுதல் வார்த்தை -
சொல்வதாக -
குத்தி கிழிப்பார்கள் -
இவனை-
உறவு முறை -
என்ற பெயரில்!

நடந்ததுக்காக -
அவர்கள் -
பிணமானார்கள்!
நடந்தவைகளுக்காக -
இவன்
நடமாடும் -
பிணமானான்!

வெற்றிகரமான -
கணவன் - மனைவி
உறவுக்கு பின்னால் -
ஒரு-
காதல் இருக்கும்!

தோல்வி அடைந்த-
 ஒவ்வொரு -
காதலுக்கு பின்னால்-
ஒரு 'கண்ணீர்'கதை-
இருக்கும்!

நேற்று நடந்த-
கதையை-
என் காதில் -
சொன்னது
கடற்கரை காத்து!

வேதனை-
 தாளாமல் -
ஊருக்கே-
 சொல்லி விட்டது -
என்னுடைய எழுத்து!!

No comments:

Post a Comment