Thursday 26 July 2012

வெட்டனும்......"



தேடல்-
தொடங்கியது!

சில-
கிராமங்கள்-
அடங்கியது!

சிலர்-
முறைத்தனர்!

பலர்-
வரவேற்றனர்!

பெயர்கள்-
கேட்கப்பட்டது!

உடல் அளவுகள்-
எடுக்கப்பட்டது!

தேதிகள்-
குறிக்கப்பட்டது!

அந்நாளும்-
நெருங்கியது!

"ஆட்களை"-
வாகனம்-
இறக்கியது!

புது ஆடைகள்-
அணிந்தனர்!

முகங்கள்-
மலர்ந்தனர்!

காணப்பட்டனர்-
ஒட்டிய தேகத்துடன்!
அதிக வாட்டத்துடன்!

ஆம்-
அவர்கள்-
ஏழைகள்!

"அழைத்தவர்களும்"-
இல்லை-
செல்வமிக்கவர்கள்!

பசியை அறியாதவன் அதன் -
பரிதவிப்பை அறியமாட்டான்!

வஞ்சகம் கொண்ட நெஞ்சன்-
வாஞ்சையுடன் நடக்க மாட்டான்!

தொடங்கியது-
ஊர்வலம்!

முடிவுற்றத்கு-
பள்ளிவளாகம்!

ஒவ்வொரு பெயராக-
வாசிக்கப்பட்டது!

வந்த சிறவர்கள் மனம்-
சந்தோஷ பட்டது!

பெயருள்ள சிறுவன்-
அழைத்து செல்லப்பட்டான்!

அழுது கொண்டே-
திரும்பி வந்தான்!

காரணம்-
விருத்தசேனம்(சுன்னத்)-
செய்யபட்டான்!

வந்தவர்கள்!
அழைத்தவர்கள்!
உள்ளூர் சொந்தங்கள்!

அன்போட பகிர்ந்து கொண்டு-
அரவணைப்பாக-
விருந்துண்டார்கள்!

நேரம்-
கடந்தது!

வாகனம்-
வந்தது!

சிரித்து வந்த-
பாலகன்கள் அழுது கொண்டு!

தாயோட ஒட்டி கொண்டு!

தகப்பன்மார்கள்-
வந்த கண்ணீரை -
மறைக்க முடியாமல்!

நானும் நண்பர்களோட-
வந்து சென்ற உறவுகளை-
மறக்க முடியாமல்!

பிறப்பதற்கு முன்-
தந்தையை இழந்தார்!

பிறந்து பின்னாட்களில்-
தாயை இழந்தார்!

"மறைவதற்கு" முன்-
உலகம் மறையுவரை-
மனித மனங்களை-
வென்றார்!

ஏழையாக-
வாழ்ந்தார்!

எழைகளுடனேயே-
வாழ்ந்தார்!

அவர் அரியணைகளில்-
அமர்ந்திடவில்லை!

அமர்ந்த இடங்களெல்லாம்-
அரியணையாகியது!
முஹம்மது மேத்தா(கவிஞர் மு.மேத்தா)
சொன்னார்!

அவர்தான்-
மலையளவு பகை கொண்டவர்களிடையே-
மனிதத்தை வளர்த்த-
நபிகள் பெருமானார்!

என்னருமை!
சொந்தங்களே!

ஏழைகளும்-
நம் மனித உறவுகளே!

குறைந்த பட்சம்-
ஒரு ஏழைக்காவது-
உதவுங்களேன்....!




22 comments:

  1. ////குறைந்த பட்சம்-
    ஒரு ஏழைக்காவது-
    உதவுங்களேன்///

    முடித்தவிதம் அருமை நண்பா!

    ReplyDelete
  2. ஏழைகளும்-
    நம் மனித உறவுகளே!

    குறைந்த பட்சம்-
    ஒரு ஏழைக்காவது-
    உதவுங்களேன்....//

    உயர்ந்த சிந்தனையை ஊட்டிப்போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை நண்பரே... வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்லஅதாரு சிந்தனை.அதுவும் இன்று காலரத்திற்கு தேவையான சிந்தனை.வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை + கருத்துக்கள். நன்றி...

    ReplyDelete
  6. ////குறைந்த பட்சம்-
    ஒரு ஏழைக்காவது-
    உதவுங்களேன்///
    >>
    பணம் படைத்தவர்களுக்கு மனமில்லை. மனம் படைத்தவர்களுக்கு பணமில்லை

    ReplyDelete
  7. உயர்ந்த சிந்தனை...நல்ல பதிவு...

    ReplyDelete
  8. நல்ல சிந்தனை... சீனி அவர்களே!

    ReplyDelete
  9. //ஏழைகளும்-
    நம் மனித உறவுகளே!//

    அருமை கருத்துக்கள் நண்பா
    சிந்தனை உமக்கு மட்டும் சிறை படாமல் வருவது சிறப்பு

    ReplyDelete
  10. கருத்துக் களஞ்சியமாய்..
    மனித மாண்புகளை உசுப்பி விடுங்கள்
    என்று கோரிக்கை வைக்கும் அத்தனை
    வரிகளும் அருமை நண்பரே...

    ReplyDelete
  11. அருமையா வரிகள் ரசித்தேன் - உதவுங்கள் முடிந்த வரையில்.....உன்னால் இயன்ற வரை

    ReplyDelete
  12. நண்பா பிரமிப்பு.........பிரமித்தேன்
    இன்னும் சொல்லலாம்

    ReplyDelete