Friday, 6 July 2012

கருணையிலுமா கபடம்...!?



எத்தனையோ-
மாற்றம்-
உலகிலே!

எப்போதுதான்-
மாறுமோ-
அநீதிகளே!

கடுமையாக -
நடத்தபட்டார்கள் -
கைதிகள்!

நம் பார்வைக்கு-
சுதந்திர தியாகிகள்!

வெள்ளையர்களுக்கு-
அடிமைகள்!

"அவர்கள்"ஏற்றிய-
கொடும்சட்டங்களே!

இன்றும் -
நடை முறையிலே!

அது சரி!

என்ன வித்தியாசம்-
வெள்ளைகாரர்கள்-
அடக்கு முறைக்கும்!
இப்போது-
"இருப்பவர்களுக்கும்"!

அன்றைக்கு-
அரிக்கேன் விளக்கு-
போராட்டம்-
நடந்துச்சி!

இன்றைக்கு-
சிறை நிரப்பு போராட்டம்-
நடந்துச்சி!

இரண்டுக்கும்-
என்னய்யா வேறு காரணங்கள்-
சொல்லபட்டுச்சி!?

இன்று -
சிறு மாற்றம்!

"ஆட்சி"!
"கட்சி"!

மாறியதா-?
ஜனங்களின்-
அவல காட்சி!?

எரி பொருள்-
ஏறுதாம்-
எகிறுது தேசிய-
எதிர்க்கட்சி!

விலையை நிர்ணயிக்க-
பெட்ரோலிய நிறுவனங்களுக்கே-
அனுமதி கொடுத்தது-
மக்கா!
மறந்தா போச்சி!?

ஸ்விஸ் வங்கி -
கருப்பு பணத்தை-
கொண்டு வருவாங்களாம்!

"போட்டதெல்லாம்-"
யாருங்கய்யா!,?

சுப்பனும் -
குப்பனுமாய்யா!?

மாறி மாறி-
ஆட்சி பண்ணுவீங்க!

தேர்தல் நேரத்துல-
வீர வசனம்-
பேசுவீங்க!

மக்கள் வாயில-
மண்ணை அள்ளி போடுவீங்க!

எப்படியோ-
போங்க!

தலைவர்கள் பிறந்தநாள்-
பொது மன்னிப்பில்-
"பொதுவாக" நடந்துக்கங்க!

7 வருட சிறைவாசிகள்-
பொது மன்னிப்பில்-
இடம் பெறலாம்!

அதுலயும்-
ஏன் முரண்பாடாம்!

சிறப்பு சலுகை-
கேட்கவில்லை!

அச்சலுகையில்-
சிறுபான்மையினர்களுக்கு-
ஏன் இடம் இல்லை....!?


(அர்ப்பணம்; சிறைகைதிகளுக்காக போராடும்
நல்லுள்ளங்களுக்கு...)

10 comments:

  1. நல்ல கவிதை நண்பா

    ReplyDelete
  2. என்ன வித்தியாசம்-
    வெள்ளைகாரர்கள்-
    அடக்கு முறைக்கும்!
    இப்போது-
    "இருப்பவர்களுக்கும்"!

    சிந்திக்க வைக்கும் வரிகள்

    ReplyDelete
  3. //இன்று -
    சிறு மாற்றம்!

    "ஆட்சி"!
    "கட்சி"!//

    உண்மை தோழா

    ReplyDelete
  4. நல்ல கவிதை நண்பரே!

    ReplyDelete
  5. நல்லதொரு கவிதை ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  6. அர்ப்பணம்...வழிமொழிகிறேன் சகோ..

    ReplyDelete