Sunday, 22 July 2012

முடிந்தளவாவது.....



தின்ன முடியாமல்-
திணறுபவர்கள்-
ஒரு பக்கம்!

பசியால்-
பரிதவிப்பவர்கள்-
மறுபக்கம்!

ஆயிரம் கழிவறை கொண்ட-
மாடி உள்ள-பங்களா
சொந்தம் ஒருவனுக்கு!

ஆயிரம் பேருக்கு -
ஒரு கழிவறை வீதம்-
இல்லை-
பலபேருக்கு!

உடலில் உள்ள கொழுப்புதனை-
தின்னு கொள்ளும்-
பசியால் உடம்புகள்!

உயிரையே பசியினால்-
இழக்கும் -
எத்தனையோ உடல்கள்!

உலகமெல்லாம் காண-
முடிகிறது -
பிறந்த மண்ணை விட்டு-
விரண்டோடிய மக்களை!

ஆனாலும்-
நாகரிக உலகம் என-
சொல்லிட நமக்கும்-
வெட்கம் இல்லை!

எல்லா "சத்தும் " கூடி-
மாத்திரை போடும்-
ஒரு கூட்டம்!

எந்த ஊட்ட சத்தும்-
இல்லாமல்-
மடியும் இன்னொரு கூட்டம்!

மானம் மறைக்க -
ஆடை வாங்க -
பணம் இல்லாமல்-
எத்தனையோ-
பெண்கள்!

பணத்துக்காக ஆடை-
களையும்-
எத்தனையோ-
"கேவலங்கள்"!

விலங்குகளை-
காப்பாற்ற எத்தனை-
விழிப்புணர்வுகள்!?

மனிதனையும் -
காப்பாற்ற நம்மால் ஆனா-
உதவிகளை செய்யுங்கள்!

பெருமானார் மொழி-
படைப்புகளை நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!

"இருந்ததையெல்லாம்"-
தானம் செய்தார்கள்-
நம் முன்னோர்கள்!

"முடிந்தளவாவது"-
தானம் செய்யலாமே-
இன்று-
பூமியில் "இருப்பவர்கள்!"

15 comments:

  1. //ஆடை வாங்க -
    பணம் இல்லாமல்-
    எத்தனையோ-
    பெண்கள்!//

    பணம் இருந்து வாங்க மனம் இல்லாமல் இருக்கும் எத்தனையோ பெண்கள் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன் நண்பா

    ReplyDelete
  2. அருமையான கவிதை நண்பரே!

    ReplyDelete
  3. "இருந்ததையெல்லாம்"-
    தானம் செய்தார்கள்-
    நம் முன்னோர்கள்!

    "முடிந்தளவாவது"-
    தானம் செய்யலாமே-
    இன்று-
    பூமியில் "இருப்பவர்கள்!"

    உண்மை சொல்லும்
    வரிகள். உணர்ந்தால் நன்று.

    ReplyDelete
  4. ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கிறது...
    மனிதநேயம் எங்கே ? என்கிற கேள்வி எழுகிறது...
    பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...


    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  5. அழகான கவிதை உருக்கமான வரிகள்

    ReplyDelete
  6. "முடிந்தளவாவது"-
    தானம் செய்யலாமே-
    இன்று-
    பூமியில் "இருப்பவர்கள்!"

    நன்றாக உள்ளது நண்பரே.

    ReplyDelete
  7. //"முடிந்தளவாவது"-
    தானம் செய்யலாமே-
    இன்று-
    பூமியில் "இருப்பவர்கள்!"//

    செய்ய வேண்டும்..

    நல்ல கவிதை சீனி.

    ReplyDelete
  8. முடிந்தளவு நன்மை செய்தே வாழ்வோம் நல்லது குறைந்து கெட்டது கூடிக்கிடக்கும் இந்த உலகில் !

    ReplyDelete