பார்த்து-
பார்த்து!
பேசி-
பேசி!
பழகி-
பழகி!
தெருவுல போறவங்க-
பழகுறத-
பார்க்க-
பார்க்க!
புறம் பேச-
பேச!
"இவர்கள்"-
பேசியதும்-
முடியல!
பழகியதும்-
முடிக்கல!
"எல்லை"எதுதானும்-
தெரியல!
இரவிலும்-
கை பேசி!
விடிந்து-
இருட்டும் -
வரைக்கும்-
கை பேசி!
ஏற்றிய பணமும்-
தீர்ந்தது-
பேசி பேசி!
இருட்டு-
பகலாகியது!
பகல் இன்னும்-
பிரகாசம் ஆகியது!
நேரமும் காலமும்-
பாழாகியது!
செய்யும் காரியங்களை-
தள்ளி போடுபவன்-
மனிதனே!
கால நேரத்தோட-
செய்வது-
இயற்கையே!
உதிர்ந்த-
இலைகள்!
முளைபிக்க ஆரம்பித்தது-
கிளைகள்!
நாட்கள்-
நகர்ந்தது!
காலங்கள்-
கடந்தது!
அதே-
பூங்காவும்!
அதே-
காய்களும்-
கனிகளும்!
மாறாத-
மரங்கள்!
மாறிய-
மனிதர்கள்!
சந்திப்பு-
எதிர்பாராதது!
சந்தித்தது-
"அந்த"இருவர்!
அதே-
ஜோடி!
செல்கிறார்கள்-
கண்டுகொள்ளாதபடி!
அப்பெண்-
அவள் மணாளனுடன்!
அவன்-
அவனது மணாளியுடன்!
நின்றே இருந்த-
மரங்கள்!
கோபத்தில் கொட்டிய-
சில வார்த்தைகள்!
ஓ!
மானுடமே!
உண்மையை விளங்கிடனும்-
உன் மனமே!
ஷாஜகான்-
மனைவி பதினாலாவது-
பிரசவத்தில்-இறந்தாள்!
அவன் உள்ளம்-
வெதும்பியது -
பிரிந்ததால்-
பிரியத்தால்!
அங்கே -
அவன் கொண்ட-
நேசம் உண்மை!
தேசத்தின் மீது -
வைத்த பாசம்-
உண்மை!
எழுப்பினான்-
நேசத்தை-
கட்டிடமாக!
மண்ணில் நிலவொளியின்-
வண்ணமாக!
மன்னன் கொண்டது-
உண்மை காதல்!
இன்றோ-
"பெரும்பாலோர்"கொள்வது-
"பச்சையான" ஊடல்!
உங்கள்-
"ஆசையான"-
விருப்பத்திற்கு!
ஏன் இழுக்குறீர்கள்-
"அந்த தம்பதிகள் போல்"-
நாம் என பேசி-
வம்பிற்கு!?
உண்மையான சில வார்த்தைகளை அழகாக கோர்த்துள்ளிர்கள் நண்பரே.....
ReplyDeletekuruvi!
Deleteungal varavukkum karuthukkum
mikka nantri!
அதே-
ReplyDeleteஜோடி!
செல்கிறார்கள்-
கண்டுகொள்ளாதபடி!
அப்பெண்-
அவள் மணாளனுடன்!
அவன்-
அவனது மணாளியுடன்!
நின்றே இருந்த-
மரங்கள்!
யதார்த்தம் சொல்லும் வரிகள் கோர்வை அழகு.
sasikala!
Deleteungal varavukum karuthukkum mikka nantri!
அழகு தமிழில் அருமை கவிதை!
ReplyDeletesuvadukal!
Deletemikka nantri!
காதல் பலருக்கு நேரங்கடத்தி. உதவுகிறது ஒலிஅலைக்கடத்தி. தவறுகள் உணரப்படுகின்றன காலங்கடத்தி. என்ன செய்வது? அன்பைக் கடத்தவேண்டிய இடங்களில் எல்லாம் ஆசைதான் கடந்துபோகிறது. அழகானக் கவிதைக்குப் பாராட்டுகள் சீனி.
ReplyDeletegeetha!
Deleteungaludaya azhakiya vaarthaikalukku-
mikka nantri!
தற்போதைய காலத்திய காதலின் நிலையை அழகாக சாடியிருக்கிறீர்கள்! அவலங்களுக்கு தீர்வென்னவோ?
ReplyDeletemaniyan!
Deleteungal varavukku mikka nantri!
ஏன் இழுக்குறீர்கள்-
ReplyDelete"அந்த தம்பதிகள் போல்"-
நாம் என பேசி-
வம்பிற்கு!?//
கொஞ்சம் தலை சுத்தி வந்து சேர்ந்தேன்...
முத்தாய்ப்பு...
revari!
Deleteungal muthal varavukkum-
karuthukkum mikka nantri!
கட்டாயம் ஒப்பிட முடியாதுதான்..ஏனென்றால் மும்தாஜ் அவரின் முதல் மனைவியும் அல்ல...முதல் காதலியும் அல்ல.இருந்த மனைவியரில் சிறந்தவள் என கூறலாமா? மற்ற படி கவிதை வழக்கம்போல...அருமை.
ReplyDeletesatees!
Deletemikka nantri !
காதலொடு கவிதை....மூச்சு வாங்குது.இனி ஒழுங்கா வந்திடுவன் என்றுதான் நினைக்கிறன் சீனி !
ReplyDeletehemaa!
Deletemoththamaaka pinnoottam alli vazhangiya ungalukku-
mikika mikka nantri!