Thursday, 2 February 2012

சுதந்திரம்,,,

துன்பப்பட்டு!
துயரப்பட்டு!

கஷ்டப்பட்டு!
நஷ்டப்பட்டு!

தாலிகள் பல-
அறுக்கப்பட்டு!

மூளிகளாக என் தாய் மார்கள்-
ஆக்கப்பட்டு!

கழுவ மரத்தில் -
தூக்கிலிட பட்டு!

தூக்கிலிடப்பட்டும்-
கண்ட துண்டமாக-
வெட்ட பட்டு!

சிறைகளில் -
அடைக்கப்பட்டு!

சீரழிவாக வாழ்வு-
ஆக்கப்பட்டு!

"கண்ணியாமனவர்கள்"-
கண்ணீருக்கே சொந்தாமாக்கபட்டு!

இவ்வாறெல்லாம் தியாகம்-
செய்த தியாகிகளை-
மறந்து விட்டு!

ஆட்சிக்கு வந்ததுமே-
ஊழல் செய்து கொண்டு!

ஆட்சி மாறியதும்-
கைது செய்யப்பட்டு!

கேள்வி கேட்கவே!-
லஞ்சம் வாங்க பட்டு!

நாடாளுமன்றதிலேயே-
லஞ்ச பணம் கொட்ட பட்டு!

அச்செயலால் நாட்டுக்கே -
தலை குனிவு ஏற்பட்டு!

இதுல ஒழல் ஒழிப்பதாக-
நாடக ரத யாத்திரை-
நடத்துக்கிட்டு!

குத்தாட்ட நடிகையின்-
பேட்டியை டி.வி யில் பார்த்துகிட்டு!

பசியில சாவுற குழந்தைகளை-
மறந்து விட்டு!

ஹீரோ கட் அவுட்டுக்கு-
பாலபிசேகம்-பண்ணிக்கிட்டு!

விடுமுறை நாளென்று-
போதையை போட்டுக்கிட்டு!

நாயிக்கு போட்டியா-
தெருவுல உருண்டுகிட்டு!

தியாகிகளே நீங்கள்-
"போய்" விட்டீர்கள்-
அர்பணிப்புகள் செய்து விட்டு!

நாங்க சுதந்திர தினத்தை-
கொண்டாடுகிறோம்-
இந்த செய்கைகளால்-
"கேவல" படித்தி கிட்டு!

2 comments:

  1. அருமை சீனி !
    புண்பட்டு போனது நெஞ்சம் !
    என் செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. Swaraani avarkale!
      orunaal nam makkal-
      maaruvaarkal!

      ungal karuththukku!
      mikka nantri!

      Delete