Tuesday, 7 February 2012

கண்ணு கண்ணு..!

முல்லையானது-
முள்ளு -ஒன்னு!

கலங்கரை விளக்கானது -
தெரு விளக்கு-ஒன்னு!

கோபுர மானது-
குப்பை காடு -ஒன்னு!

குற்றால அருவியானது-
பொட்டல் காடு-ஒன்னு!

நன்நீரானது-
கடல் நீர் ஒன்னு!

நிக்காம பாடும்-
ரயிலானது-பாடாத
குயிலு-ஒன்னு!

லாபத்தில் ஓடும்-
தனியார் பேருந்தானது-
நஷ்டத்தில் ஓடிய அரசு
பேருந்து-ஒன்னு!

காவேரி ஆத்து தண்ணி-
வரும்-கால்வாயானது-!
சாக்கடை ஓடிய-
கால்வாய் ஒன்னு!

வண்ண படமானது-
கருப்பு வெள்ளையான-
படம் ஒன்னு!

கவிதை எழுதுது-
களி மண்ணு-ஒன்னு!

சொல்லத்தான் தெரியல-
எப்படின்னு!

இத்தனைக்கும் காரணம்-
கன்னிதான்னு!!

4 comments:

  1. நல்லா இருக்கு உங்கள் கவிதைகள் வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. nantri sakotharaa!

      ungaludaya aatharavukku
      melum neengal karuththu theriviththaal
      naan pirayojanamaana karuththukkal!
      tharalaam!

      ungal karuththukkalaiyum
      enakku pathiyungal!

      Delete
  2. காதல் என்று முடியுமென நினைத்தேன் .
    நீங்கள் கன்னி என முடித்து இருக்கிறீர்கள் .
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. Srawaani avarkale!
      ungal karuththukku-
      mikka nantri!

      varavukkum nantri!

      Delete