Friday, 10 February 2012

கூடா நம்பிக்கை..

நல்லதாம் முழிச்சா-
நரி முகத்துல !

நாய வளர்க்காம-
நரியை வளர்க்க-
 வேண்டியதுதானே-
வீட்ல!

உருப்புடாதாம்-
ஆமை புகுந்த-
வீடு!

மீனவர்கள் உருப்படுராங்களே-
ஆமை கிடக்கும்-
கடல்ல புகுந்து-
மீன்களை பிடித்து!

சொல்றான்-
ராகு காலம்-
ஏழரை இருந்து-
எட்டரை!


கிழக்காலே போனால்-
பிடிக்குமாம்-
"ஏழரை!

கேட்டவன் -
மணியை பார்த்து -
ஆரம்பிக்காம இருப்பான்-
வேலையை!

சொன்னவன்-
கிழக்காலே போய்க்கிட்டு-
இருப்பான்-
தொடர-
அவன் தொழிலை!

காரியம் -
கைகூடாதாம்-
போனால்-
மூணு பேரு!

வெற்றிகரமா நிலவுக்கு-
முதல்ல போயிட்டு வந்தாங்க -
மூணு பேரு!

சொல்றான்-
செல்வம் கொட்டுமாம்-
ராசி கல் போட்டால்!

சொல்றவன் -
வாயடைத்த் போவான்!
நீ எந்த-
கோடீஸ்வரன் பட்டியலில்-
இருக்கிறாய் என கேட்டால்!


மோசம் போக வேண்டாம்-
இவர்கள் பேச்சை நம்பி!

செய்வோம்-
செய்யும் வேலையை-
விரும்பி!

உலகம் ஒரு நாள்-
பார்க்கும் -
நம்மை திரும்பி!

6 comments:

  1. எங்கள் முன்னோர்களின் சில சிந்தனைகளை விஞ்ஞான ரீதியாக சரியென்று முன்வைத்தாலும்,மனசு சுத்தமா நம்பிக்கையோட எதையும் எந்த நேரத்திலயும் செய்யலாம்.நல்லதே நடக்கும் !

    ReplyDelete
    Replies
    1. hemaa !
      ungal nampikaiyai
      naan ontrum solla mudiyaathu!

      nallathu seyyavo -
      velaiyai thodangavo-
      neram paarththu konde irunthaal-
      velai thaamatham thaane aakum!
      ungal udanadi varavukkum-
      karuththukkum!
      mikka nantri!

      Delete
  2. மூட நம்பிக்கைகளை வேரறுக்க அழகான ஒரு பதிவை பகிர்ந்திருகீன்கள் நன்றி தோழரே!

    ReplyDelete
    Replies
    1. puttiya thentral!

      ungal varavukkum-
      karuththukkum
      nantri!

      Delete
  3. I shared award with u given by RAMANI Sir!
    Please visit dewdropsofdreams.blogspot.com

    ReplyDelete
  4. Sakothari yuwaraani thamizharasan!

    viruthu thanthamaikku-
    mikka nantri!

    ungalathu viruthinai etru kolkiren!

    ungalathu ezhuththu pani thidara vaZhthukiren!

    ReplyDelete