Wednesday 29 August 2012

ஆம்பிள்ளையென்றால்....



பெண்ணே!
ஆணின் வாழ்வுக்கு-
அர்த்தம் தருகிறாள்!


பாவாடை தாவணியில்-
இருந்தவள்!

புடவைக்கு-
மாறிடுவாள்!

பட்டாம் பூச்சியாக-
சிறகடித்தவள்!

குடும்ப பொறுப்பால்-
தன் சிறகை-
சுருக்கி கொள்வாள்!

சாலையோர -
சோலையானவள்!

சொந்தங்களுக்காக-
சோலையிலே-
சாலையாவாள்!

ஸ்திரத்தன்மை-
கட்டிடங்களுக்கு-
அஸ்திவாரம்!

உறவினர்களுக்கு-
சம்சாரம்!

கடைக்கண் பார்வை கூட-
அடுத்தவன் மீது-
விழ கூடாது -
என்பது -
ஆண்கள் புத்தி!

ஆண்களே!-i
என்றாவது எண்ணியுள்ளோமா-
நம்ம" யோக்கியதை-"
பற்றி!?

கற்பு என்பது-
பெண்ணுக்கு -
மட்டுமல்ல!

ஆண்களுக்கு-
அது விதி விலக்கல்ல!

பெண்ணென்றால்-
அடிமை அல்ல!

அப்படி நினைத்தால்-
அவன் ஆம்பிள்ளை-
இல்லை!

ஒற்றை-
 உடன்படிக்கையால்!

"மற்றதையெல்லாம்-"
ஒதுக்கி விட்டு-
வந்தாள்!

நம்பி வந்தவனும்-
முற்கள் செடிஎன்றால்-
அவள் என்னாவாள்!!


"உங்களில் யார்-
சிறந்தவர் என்றால்!
உங்கள் மனைவியர்களில்-
சிறந்தவராவார்-என்றுள்ளது
நபி மொழி இப்படி!

சொந்தங்களே-
நம் நடந்து கொள்வது-
எப்படி....!!???




z

23 comments:

  1. //பெண்ணென்றால்-
    அடிமை அல்ல!

    அப்படி நினைத்தால்-
    அவன் ஆம்பிள்ளை-
    இல்லை!//

    சிறப்பான வரிகள்.

    தொடர்ந்து கவிதையில் அசத்தறீங்க சீனி.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. /// "மற்றதையெல்லாம்-"
    ஒதுக்கி விட்டு-
    வந்தாள் !

    நம்பி வந்தவனும்-
    முற்கள் செடிஎன்றால்-
    அவள் என்னாவாள் !! ///

    பல பேர் அறிந்து கொள்ள வேண்டும்...

    எந்தளவு தாயை நேசிக்கிறானோ, துணைவியை அவ்வாறு நேசிப்பதில்லையே ஏன்...? அவர்களும் தாய் தானே...

    நன்றி சார்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள கவிதை !
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. பெண்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகிறது ...

    சாலையோர -
    சோலையானவள்!

    சொந்தங்களுக்காக-
    சோலையிலே-
    சாலையாவாள்!

    ////////////////////

    அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  5. //
    பெண்ணே!
    ஆணின் வாழ்வுக்கு-
    அர்த்தம் தருகிறாள்!
    //

    செமையான துவக்கம், ஜீவனுள்ள வரிகள் நண்பா!

    ReplyDelete
  6. சும்மா
    நச்னு
    இருக்கு

    ReplyDelete
  7. கற்பு என்பது-
    பெண்ணுக்கு -
    மட்டுமல்ல!

    ஆண்களுக்கு-
    அது விதி விலக்கல்ல!

    பெண்ணென்றால்-
    அடிமை அல்ல!

    அப்படி நினைத்தால்-
    அவன் ஆம்பிள்ளை-
    இல்லை!

    அடடா... எல்லா வரிகளுமே ரசிக்க வைக்கிறது நண்பரே.

    ReplyDelete
  8. ஆண்களுக்கும் கற்பு உண்டு! உண்மைதான்! நல்லதொரு படைப்பு!

    இன்று என் தளத்தில்
    குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

    ReplyDelete
  9. அனைத்து வரிகளும் அருமை. அர்த்தமுள்ள வார்த்தைகள். சிறப்பான கவிதை நண்பரே. தொடருங்கள்.

    ReplyDelete
  10. பெண்களை உணர்ந்து மதிப்பளித்த கவிதையாகவே நினைக்கிறேன் இக்கவிதையை.நன்றி சீனி !

    ReplyDelete
  11. முதலில் நன்றி சகோ பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த வரிகளுக்கு.

    ReplyDelete
  12. நல்ல கருத்துள்ள அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  13. முதலில் எனது நன்றிகள் அண்ணா! ரசிக்க வைத்த வரிகள், பெண்களின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தது போல் மிக அருமை அண்ணா!

    ReplyDelete