Monday, 6 August 2012

இனி தான் ஆரம்பம்....(500 வது கவிதை)



மரத்துண்டுகள்!
ஓலை சுவடிகள்!

கல்வெட்டுகள்!
அழிந்த கட்டிடங்கள்!

சிற்பங்கள்!
சிதிலங்கள்!

இவைகள்-
அன்று-
சாதாரண நிகழ்வுகள்!

சாமானியனின்-
பதிவுகள்!

அவைகள்-
தீர்மானிப்பதே-
இன்றைய -
வரலாறுகள்!

இன்றைய -
நிகழ்வுதனை-
பதிகிறது-நம்முடைய
வலைப்பதிவுகள்!

இது-
நிர்மாணிப்பதே-
நாளைய-
வரலாறுகள்!

வாழ்ந்தவர்கள்-
எத்தனையோ!

மடிந்தவர்கள்-
எத்தனயோ!

நினைவு கூறபடுபவர்கள்-
எத்தனை பேரோ!?

உலகம்-
இலட்சியவாதிகளை-
இழக்கலாம்-
இலட்சியங்களை-
இழப்பதில்லை!

சிந்தனைவாதிகளை-
சீரழிக்கலாம்-
சிந்தனைகள்-
சீரழிவதில்லை!

எழுச்சியாளர்கள்-
இறக்கலாம்-
எழுச்சி-
மக்களை -
எழுப்பாமல் விடுவதில்லை!

"கருத்தை விதை"-என்ற
வார்தைதானாம்!

மருவி-
கவிதை-
என்றானதாம்!

கருத்தை விதைத்திருந்தால்-
நான் மனிதன்!

இல்லைஎன்றால்-
ஒரு அற்பன்!

என்றுமே -
நான்!

அற்பன் என்ற -
நிலையிலிருந்து-
மனிதனாக -
முயல்பவன்!



24 comments:

  1. வணக்கம் நண்பரே..
    முதலில் தங்களின் ஐந்நூறாவது கவிதைக்கு என்
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
    கருக்களை விதைத்து கவிபடைத்து
    கவியின் கருப்பொருளாய் வியாபித்திட
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் உங்களின் 500 வது படைப்புக்கு -

    தொடருங்கள் தொடர்வோம்.

    மனிதனாக எல்லோரும் முயற்சிக்க வேண்டும்

    ReplyDelete
  3. தன்னை அறிதல் ஞானம் என்கிறார்கள் ..........நீங்கள் ஞானியா சீனி ?

    ReplyDelete
    Replies
    1. saralaa!

      appadiyaa!?
      theriyavillai!

      ungal karuthukku mikka nantri!

      Delete
  4. ஐநூறாவது கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பா ... மேலும் மேலும் சிறப்பான கருத்துகளைப் பகிர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான கருத்தை அழகாக விதைத்துச் சென்ற கவிதை.
    வாழ்த்துக்கள் சீனி.

    ReplyDelete
  6. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா! 500 சாதாரனமில்லை! தொடர்ந்து தொய்வின்றி பயணிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. /// அற்பன் என்ற -
    நிலையிலிருந்து-
    மனிதனாக -
    முயல்பவன்! ///

    இது ஒன்றே போதுமே... பாராட்டுக்கள்...

    500 - க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. சிந்தனைவாதிகளை-
    சீரழிக்கலாம்-
    சிந்தனைகள்-
    சீரழிவதில்லை!

    எழுச்சியாளர்கள்-
    இறக்கலாம்-
    எழுச்சி-
    மக்களை -
    எழுப்பாமல் விடுவதில்லை!//கருத்தை அழகாகவிதைத்துச் சென்றது

    ReplyDelete
    Replies
    1. maalathi!

      ungal
      muthal
      varavukku mikka nantri!

      Delete
  9. 500 ஆவது மைல் கல்லுக்கு வாழ்த்துகள் சீனி.உங்கள் சமூகமொட்டிய பார்வை எப்போதுமே மனதிற்கு நிறைவுதான் !

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் நண்பரே.

    உலகம்-
    இலட்சியவாதிகளை-
    இழக்கலாம்-
    இலட்சியங்களை-
    இழப்பதில்லை!

    சிந்தனைவாதிகளை-
    சீரழிக்கலாம்-
    சிந்தனைகள்-
    சீரழிவதில்லை!

    எழுச்சியாளர்கள்-
    இறக்கலாம்-
    எழுச்சி-
    மக்களை -
    எழுப்பாமல் விடுவதில்லை!

    கவிதையில் மேலும் தொடர்ந்து எழுப்புங்கள் நண்பா.

    ReplyDelete
  11. 500 கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ! நீங்கள் மனிதனில் சாதனையாளர்தான்!

    ReplyDelete
  12. 500 வது கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete