Monday, 13 August 2012

அழகாம் அழகு.....



கொட்டி கிடக்கும்-
விண் மீன்களே!

ஒத்தையாய் இருக்கும்-
வெண்ணிலவே!

இதுதான்-
விண்வெளியே!

சுற்றி கட்டி இருக்கும்-
நீள் குழல் விளக்கு!


சுற்றியவாறு இருக்கும்-
சிறு சிறு விளக்கு!

இருவகையும் உண்டு-
விசேசங்களுக்கு!

வறண்டு கிடக்கும்-
நிலங்களும் உண்டு!

வாட்டி கொல்லும்-
பனி பிரதேசங்களும்-
உண்டு!

இவ்விரண்டிலும்-
உயிர் வாழ்வதுண்டு!

கழுத்து வலிக்கும் அளவுக்கு-
உயர்ந்துள்ள -
மலைகளும் உண்டு!

வயிற்றில் புளியை-
கரைத்திடும்-
பாதாள பள்ளங்களும்-
உண்டு!

இதனை பார்த்து-
லயித்திடும்-
மனங்களும் உண்டு!

காலில் சொறி உள்ளதால்-
மயிலின் அழகு-
குறைந்ததா..!?

குயில் கருப்பு என்பதால்-
குரல்தான்-
கசந்ததா...!?

மானின் மேல் உள்ள-
புள்ளியால்-வனப்புக்கு-
கொள்ளியானதா...!?

ஒவ்வொன்றும்-
மாறுபட்ட அழகுதானே!?

மாசுபட்டதாக-
நமக்கு தெரியவில்லைதானே!?

மனித பிறவியே!

தோலின் நிறம்தான்-
அழகா!?

அழகு சாதனா பொருட்களினால்-
மெருகேரிடுவது
அழகா!?

இல்லவே !
இல்லை -
இதில் அழகு!

உண்மை-
அழகு!

மொழிந்திடும்-
வார்த்தையிலும்!

நடந்திடும்-
நடத்தையிலும்!



18 comments:

  1. கவிதை வரிகளும் அழகோ அழகு...

    அருமையாக முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. //மொழிந்திடும்-
    வார்த்தையிலும்!

    நடந்திடும்-
    நடத்தையிலும்!//

    உண்மையான அழகை ஆணித்தரமாக அழகாக சொன்னீர்கள்

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும்-
    மாறுபட்ட அழகுதானே!?

    அழகான கவிதை !

    ReplyDelete
  4. என் மனம் அழகு என நடிப்பு என்ற ஒப்பனை
    இடுகிறான் ஓர் ஆண் .
    ஆனால் ஒரு பெண்ணோ....தோலிற்கு 'மட்டும்'
    ஒப்பனை சாதன பொருட்கள் இடுகிறாள்
    யாருக்காக ? தன் நம்பிக்கைக்கும் தன் ஆணிற்காகவும் தானே !
    மிதமான ஒப்பனை ஒருவர்க்கு பலவிதத்திலும் தேவை சீனி .
    ஒப்புக் கொள்ளுங்கள் ஒப்பில்லா உவமைக் கவிஞ்சரே ...

    ReplyDelete
    Replies
    1. mithamaana oppanai -
      nichayam thevai!

      maatru karuthillai!

      alavukku minjuvathe kasdam!

      ungal karuthukku mikka nantri!

      Delete
  5. ///
    உண்மை-
    அழகு!

    மொழிந்திடும்-
    வார்த்தையிலும்!

    நடந்திடும்-
    நடத்தையிலும்!
    //

    அருமை நண்பா!

    ReplyDelete
  6. மனித பிறவியே!

    தோலின் நிறம்தான்-
    அழகா!?

    சவுக்கடி வார்த்தைகள் ஆனாலும் திருந்த மாட்டார்கள்.

    ReplyDelete
  7. அது அது அதன் அதன் இயல்போட அத்தனையும் அழகு மனம் மாறும் மனிதனைத் தவிர !

    ReplyDelete
  8. அழகாம் அழகு.....

    என்ன அலட்சியமான தலைப்பு!!
    எந்தக் குழந்தையும் என் தாய் அழகியில்லை என்று சொன்னதில்லை.

    என் இனிய தோழி ஹேமா சொன்னது போல மனம்மாறும் மனிதனைத் தவிர அனைத்தும் அழகு. (சூப்பர் ஹேமா)

    நண்பரே... உங்கள் கவிதை அழகான அர்த்தம் உள்ளதுங்க.

    (நண்பரே... நான் தான் ”அருணா“ அன்றாடும் நான் உங்களின் வலைக்குள்ளும் நீங்கள் என் வலைக்குள்ளும் வந்து படித்து கருத்திடுகிறோம்...!! உங்களுக்கு என்னைத் தெரியவில்லை என்று நாடோடி ஐயாவிடம் விசாரித்தது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். அதனால் இதற்கு தண்டனையாக இனி நீங்கள் எனக்கு கருத்திடும் பொழுது “அருணா“ என்றே என் பெயர் சொல்லி கருத்திடவேண்டும். நன்றி நண்பரே)

    ReplyDelete
    Replies
    1. arunaa sako!

      pinnoottam anuppiya pinthaan thavarai unarnthen!

      mannikkavum!

      karuthittathukku mikka nantri!

      Delete
    2. எனக்கொரு பாராட்டா இங்க.....சந்தோஷம் அருணா !

      Delete
  9. கவிஞரே, உங்களுடைய கவிதைகள் அழகோ அழகு. அருமையான வரிகள். தொடருங்கள்

    ReplyDelete
  10. 65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பரே

    ReplyDelete
  11. தங்களது வார்த்தைகளில் வலுத்திருக்கிறது அழகு! தாங்கள் குறிப்பிட்ட அழகின் அர்த்தம் அருமை அண்ணா!

    ReplyDelete