Wednesday, 8 August 2012

எல்லா புகழும் இறைவனுக்கே....(4)


எங்கெங்கோ உள்ள-
நீரெல்லாம் ஆவியாகி-
மேகத்தில் சங்கமிக்கிறது!

எங்கெங்கோ மலர்ந்துள்ள-
மலர்களுக்கிடையே-
வண்டுகள் மூலம்-
மகசூல் ஏற்படுகிறது!

எங்கெங்கோ தரித்திட்ட-
உயிர்கள் -திருமணத்தில்
இணைகிறது!

எங்கெங்கோ உள்ள-
பூக்களின் தேனை உண்டு-
தேனீக்கள் தேனடை தருகிறது!

எங்கெங்கோ உள்ள -
பறவைகள் -
பருவகாலங்களில் சரணாலயம்-
சேர்க்கிறது!

எங்கெங்கோ -
திரிக்கப்பட்ட திரியும்-
பிழியப்பட்ட எண்ணையும்-
தீபத்தில் ஒன்றிணைகிறது!

எது எங்கே உருவாக்கபடுது-
எங்கே அது சேர்கிறது-என்பதை
'ஒருவன்'தீர்மானிக்கிறான்!

'அவனே'-
ஒரே எண்ணங்களில் மனிதர்கள்-
பயணிக்கிரார்களோ-
அவர்களையும் ஒன்று சேர்க்கிறான்!

என்னருமை -
வலைபதிவு சொந்தங்களே!

நம்மை ஒன்று சேர்த்தது-
ஒரே எண்ணங்களும்!-
ஒரே எழுத்துக்களே!

சிலர்-
பின்னூட்டம் தருவதுண்டு!

சிலர்-
விளக்கங்கள் தருவதுண்டு!

சிலர்-
விருதுகளும் தருவதுண்டு!

அய்யா!
வை, கோபால கிருஷ்ணன் தந்தார்கள்-
விருது எனக்கொன்று!
அவர்களுக்கு மனதார -
நன்றிகள் -
எனக்குள் உண்டு!

நான் பகிரும் -
பதிவாளர்கள் இரண்டு!

௧ .நாடகம் ,வரலாறு,ஆன்மிகம், கவிதை-
பன்முகம் கொண்ட சதக் அவர்கள்!

௨.பதினாறு வயதிலேயே எழுதிட முனைந்த -
'அர்ஷத் காஜா'அவர்கள்!

நாம்-
மனிதத்தை நேசிப்போம்!
மனிதர்களாக வாழ்வோம்!


23 comments:

  1. ************* உண்மைதான் . எங்கெங்கோ பிறந்த நாம்
    ஒத்த எண்ணங்களால் வலைப்பூவில் இணைந்ததும் ஓர் அதிசயம் தானே ....
    வாழ்த்துக்களுடன் ஸ்ரவாணி ************** !

    ReplyDelete
  2. உண்மை தான் அண்ணா! வெவ்வேறு தேசத்தில் இருப்பவர்களையும் ஒன்றினைக்கிறதே இந்த பதிவுலகம்! கவிதையா சொல்லி கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  3. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  5. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  6. நம்மை ஒன்று சேர்த்தது-
    ஒரே எண்ணங்களும்!-
    ஒரே எழுத்துக்களே!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.

    தங்களிடமிருந்து விருது பெற்றுள்ள மற்ற பதிவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. rasan!

      ungal muthal varavukku mikka nantri!

      Delete
  9. வாழ்த்துக்கள் நண்பா கவிதையும் சூப்பர்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் கலக்குங்க கலக்குங்க ....என்னை மாறி எழுதிட்டு இருந்தீங்க இப்போலாம் தேரிட்டிங்கோ..ரொம்ப சூப்பர் ஆ எழுதுறிங்க ....


    கலக்குங்க ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வணக்கம் சொந்தமே!!!முதலில் விருதிற்காய் எனது வாழ்த்துக்கள்.தாங்கள் சொன்னது போல...யாரோ யார் யாரோ இங்கு ஒன்றாகி இனமானது பதிவுலகு தந்த வரம் தானே!!!!வாழ்துக்கள் இக்கவிக்காய்!

    ReplyDelete
  12. மிக்க நன்றி சீனி..
    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    எனும் செம்மொழிக் கேற்ப
    நீங்கள் பெற்ற விருதை எங்களுக்கும் பகிர்ந்த
    உங்கள் அன்புக்கு அளவே இல்லை.
    நீங்கள் மேலும் மேலும் எழுதி விருதுக்கு மேல் விருது வாங்கிக் குவிக்க நாங்கள் மனதாற
    வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  13. ரம்ழான் சமயத்தின் அழகான விருது வாங்கியிருக்கீங்க சீனி.என் அன்பு வாழ்த்துகள்.உங்கள் கவிதைகளின் ஆழத்திற்கு இன்னும் இன்னும் விருதுகள் கிடைக்கும் !

    ReplyDelete