Saturday, 25 August 2012

வரவேற்கிறேன்.....



காற்றினால்-
ஒன்று சேர்கிறது-
மேகங்கள்!

வலையினுள் -
சேர்ந்து-
உணவாகிறது-
மீன்கள்!

தாகம் தீர்ந்திட-
தண்ணீர் சேர்த்து தருகிறது-
ஊற்றுகள்!

ஆவணங்கள் சேர்ந்ததே-
''வரலாறுகள்''!

பல மனங்கள்-
ஒன்றுமையா இருப்பதே-
''கிராமங்கள்''!

''கிறுக்கல்களை''-
சீர்செய்தால்-
நேர் கோடுகள்!

கனிமங்களின்-
கூடாரமே-
''சுரங்கங்கள்!''

அது போலதான்-
இன்று மாநாடு நடத்தும்-
தமிழ் பதிவர்கள்!

வலை பதிவு -
சொந்தங்களே!
ஒரு நாள் நம் -
எழுத்துக்களால்-
ஏற்படும்-
மாற்றங்கள்!

நாம் நன்றாக -
அறிகிறோம்!-
உலகில் சமநீதியற்ற-
நிலைதனை!

அனைத்து தரப்பட்ட-
மக்களுக்கும் -
சம நிலை கிடைத்திட-
பயன்படுத்துவோம்-நம்
எழுத்தினை!

இன்று-
சங்கமிக்கும்-
நாம்!

என்றும்-
மக்களின் ஒற்றுமைதனை -
கருதி எழுதுவோம்!

வாழ்த்து கிறேன்-
இம்மாநாட்டை -
வரவேற்கிறேன்!

இன்றைய -
அறிமுகங்கள்-
கலந்துள்ளார்கள்-
கவிதையினுள்ளே!

ஆம்-!அவர்கள்
சிப்பிக்குள் உள்ள -
முத்துக்களே!

சொந்தங்களே!
போதுமே-
நீண்ட கால -
இடைவேளை!

தொடர்ந்து நீங்கள்-(அறிமுகங்கள்)
எழுதிடணும் -
என்பதே -என்
ஆவலே!

எவ்வளவு பிரகாசம் உள்ள-
தீபம் ஆனாலும்-
தூண்டிட வேண்டும்-
விரல்களே!

வாய்ப்பு தந்த-
சீனா அவர்களே!

பின்னூட்டம் தந்து-
பின் தொடர்ந்த -
உறவுகளே!

உங்கள் அனைவருக்கும்-
மிக மிக நன்றிகளே!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!

இதனை அழுத்தவும்!

15 comments:

  1. நானும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    முத்தான வரிகள்.

    // எவ்வளவு பிரகாசம் உள்ள-
    தீபம் ஆனாலும்-
    தூண்டிட வேண்டும்-
    விரல்களே! // கண்டிப்பாக

    தூண்டிட விரல்களாக-தங்களை போன்றவர்கள் என்னை போன்றவர்களை ஊக்கவிப்பது. பகிர்ந்தமைக்கு நன்றி
    தொடருங்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை நண்பா!

    ReplyDelete
  3. அழகிய கவிதை. வலைச்சரத்தில் ஒரு வாரம் அருமையாகப் பணியாற்றிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete
  4. சிறப்பான கவிதை! நன்றி!
    இன்று என் தளத்தில்
    பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
    கோப்பை வென்ற இளம் இந்தியா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

    ReplyDelete
  5. வலைச்சரத்தின் ஆசிரியப் பணியை சிறப்பாக நிறைவேற்றிய தோழர் சீனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்ல கவிதை


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. நல்ல கவிதை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியர்பணியைச் சிறப்பாக முடித்த சந்தோஷத்தோடு கவிதைகள் தொடங்கியாச்சா சீனி.வாழ்த்துகள் !

    ReplyDelete
  9. மன்னிக்கவும் அண்ணா! சில வேலைகளால் என்னால் தங்களது வலைச்சர பதிவுகளை தொடர முடியவில்லை அண்ணா! மன்னிக்கவும்! மேலும் இன்றே தாங்கள் என்னை அறிமுகப்படுத்திய பதிவினை பார்க்க முடிந்தது! அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete