ஆட்சி இருந்ததால்-
ஆடிடவில்லை!
அது எனது-
சொத்தும் இல்ல!
இறைவன் எனக்கு-
போட்ட பிச்சை -
அதுவே!
தன் இச்சைக்கு பயன்படுத்தினால்-
கேவலம் அதுவே!
உடைத்தெறிந்தேன்-
உயிரை காக்க!-
"உடன் கட்டை" ஏறுதல்
முறையை!
தடுக்க துணிந்தேன்-
பெண்கள் சட்டை போட-
மறுத்த-
தீண்டாமையை!
அதனால்தானோ-
எனக்கு சூட்டுகிறார்கள்-
மதவெறியன் என்ற-
பெயரை!
அரசுக்கு வருமானம்-
கொட்டும் என்றார்கள்-
பிரதானிகள்-
மது விற்றால்!
முற்றாக மறுத்தேன்-
காரணம்-
மக்கள் அலங்கோலமாகி விடுவார்கள்-
மது விற்றால்!
அசிங்கங்கள்-
அந்நியனுக்கு-
கப்பம் கட்டி கொண்டு-
அண்டி வாழ்ந்தார்கள்!
அடி பணிய மறுத்து-
சின்னா பின்ன மாக்கபட்டவன்-
நாங்கள்!
அதனால்தான்-
என்னை அநியாயக்காரன்-
என்கிறீர்கள்!?
எதிரிகள் படையை கண்டு-
அஞ்சிட வில்லை!
நயவஞ்சக நரிகள்-
தள்ளியது என்னை-
படு குழியிலே!
அடிமைத்தனத்துக்கு எதிராகவும்-
என் தேசத்திற்காகவும்-
சல்லடையாக்க பட்டேன்!
அப்படி என் உயிர் -
போனதில் மகிழ்ச்சியுற்றேன்!
கொடுத்தாலும்-
வாங்கினாலும்-
இன்பம்-
முத்தத்தில்!
வென்றாலும்-
வீழ்ந்தாலும்-
இன்பம்-
போராட்ட களத்தில்!
இன்று நான்-
வருந்துகிறேன்!-
ஒரே உயிர் இருந்ததை-
எண்ணி!
இன்னொரு உயிர்-
எனக்கு இருந்திருந்தால்-
போராடி இருப்பேன்-
நாட்டி நிலையை எண்ணி!
இப்படிதான்-
உறுமி கொண்டிருப்பான்!
மைசூர் புலி-
தீரன் திப்பு சுல்தான்!
சிறப்பான கருத்துள்ள கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
suresh!
Deletemikka nantri!
வீரமிகு வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteமாவீரன் திப்பு சுல்தானை அழகுப்படுதிய உங்கள் வரிகளுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteayesha!
Deletemikka nantri!
அருமையான வீரதீர வரிகள். //நாட்டி நிலையை எண்ணி! // (நாட்டின் நிலையை எண்ணி!) கூறுங்கள் நண்பரே
ReplyDeleteஒவ்வொரு வீரனுக்குள்ளம் இருக்கும்
ReplyDeleteஉண்மையான துடிப்புதான் அது.
உங்களுக்குள் கவிதையாகி
வெளியாகி உள்ளது நண்பரே.
வாழ்த்துக்கள்.
arouna !
Deletemikka nantri!
கருத்துக்கள் நிறைந்தது நண்பா
ReplyDeleteஅழகான ஆக்ரோசமான குமுறல்.எமக்கானதைக் கேட்டோம் ‘தீவிரவாதிகள்’என்றார்களே !
ReplyDeleteurimai kettaal-
Deleteintru "antha"pattam-
ilavasam pola.....
ungal varavukku mikka nantri!
நல்ல கவிதை நண்பா!
ReplyDeletesuvadukal!
Deletemikka nantri!
ஆதங்க வரிகள் அழுத்தமாய் மனதில் அமர்ந்தன .
ReplyDeletesasi!
Deletemikka nantri!