மணற்வெளியில்-
புதைக்க இடம் -
பார்ப்பான்-
கொலைகாரன்!
மணலின் தரம் பார்ப்பான்-
பானை செய்யும்-
தோழன்!
நம் மீது-
ஆப்பிள் விழுந்திருந்தால்-
உணவாகி இருக்கும்!
நியுட்டன் மேல்-
விழுந்ததால்-
புவி ஈர்ப்பு அறிந்தது-
உலகம்!
பாறாங்கல்லே -
தெரிகிறது-
நம் கண்களுக்கு!
அதில் சிற்பம்-
தெரிகிறது-
சிற்பிக்கு!
புல்லில் பனியை-
ரசிப்பது-
ரசனை!
அதனை மிதித்து-
செல்பவன்-
மூடனே!
அழகை-
எழுத்தில் தருபவன்-
கவிஞன்!
அழகை "கெடுத்திட"-
நினைப்பவன்-
காமுகன்!
காந்தி கொலை மட்டும்-
தெரிந்தவன்-
சராசரி வாசகன்!
சுட்டானே கோட்சே-
அதன்" வேரை" தெரிந்தவன்-
உண்மை தெரிந்தவன்!
இயற்கை சீற்றத்தின்-
காரணம் தேடுபவன்-
விஞ்ஞானி!
"சீறிட"செய்தவனை-
நினைத்து அஞ்சுபவனே-
ஞானி !
உடலை வளர்ப்பவன்-
மனிதன்!
உயிரை வைத்திருப்பவன்-
இறைவன்!
"நடப்புகள்" எல்லாம்-
ஒன்றுதான்!
நடப்புகளை நாம்-
பார்ப்பதில்தான்-
வேறுபாடுதான்.....!!!
///சுட்டானே கோட்சே-
ReplyDeleteஅதன்" வேரை" தெரிந்தவன்-
உண்மை தெரிந்தவன்!///
செம செம!
suvadukal!
Deletemikka nantri!
ம்ம்ம்.......... அருமை
ReplyDeletesethali!
Deletemikka nantri!
எப்படித்தான் உங்களால் மட்டும் இப்படி சமுதாய சிந்தனையுடன் சிந்திக்க
ReplyDeleteமுடிகிறதோ எப்போதும் ..... அருமை சீனி !
[ இன்று என் வலைப் பக்கத்தில் ....
எந்திர உயிர்ப்பு !
http://sravanitamilkavithaigal.blogspot.in/ ]
sravani!
Deletemikka nantri!
அசத்திட்டீங்க நண்பரே....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி...
balan sako!
Deletemikka nantri!
“நடப்பதெல்லாம்“
ReplyDeleteசாதாரணமாகத்
தெரிகிறது எங்களுக்கு.
நடப்புகளின்
வேறுபாடுகள்
தெரிகிறது உங்களுக்கு.
கவிதை அருமைங்க சீனி.
அசத்தல் கவிதை......நண்பா...
ReplyDeletekuruvi!
Deletemika nantri!
//"நடப்புகள்" எல்லாம்-
ReplyDeleteஒன்றுதான்!
நடப்புகளை நாம்-
பார்ப்பதில்தான்-
வேறுபாடுதான்.....!!!//
சரியான பார்வை. பாராட்டுகள்.
nagan sir!
Deletemikka nantri sir!
நல்ல இருக்கு
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
ungal muthal varavukku mikka nantri!
Deleteபின்னிட்டீங்க போங்க - அருமையான கோர்வையான வார்த்தைகள் - நாட்டு நடப்பை சமூக சூழலை பிரிச்சி மேஞ்சிட்டீங்க
ReplyDeletemanasatchi!
Deletemikka makizhchi!
எல்லாம் எல்லாருக்குமே ஒன்றுதான்.பார்ப்பதிலும்,அதை பயன்படுத்துவதிலும்தான் வித்தியாசம் காண்கிறார்கள்.நல்லதொரு வெளிப்பாடு சீனி !
ReplyDelete