என்ன?-
என்றோ!
ஏன்?-
என்றோ!
நலமா ?-
என்றோ!
கேட்காத-
"தெரிந்தவர்கள்"-
எத்தனையோ!
வாடா!-
என்றும்!
வாடாதே-
என்றும்!
"வாழ்ந்து"காட்டுடா-
என்றும்!
இருக்கிறார்கள்-
வாஞ்சையுடன்-
அழைத்தவர்களும்!
அள்ளி கொண்ட-
கைகளும் உண்டு
"தள்ளி" விட்ட-
கைங்கரியமும்-
உண்டு!
ஏக்க பார்வைகளும்-
உண்டு!
ஏளன பார்வைகளும்-
உண்டு!
முடிவெடுத்தேன்-
அணைத்தவர்களை-
அரவணைத்திடவும்!
ஒதுக்கியவர்களை-
ஒதுக்கிடவும்!
ஒரே வழி-
வாழ்வில்-
முன்னேறி விடனும்!
ஒதுக்கியவர்களுடன்-
உண்மையாய் நடந்து கொண்டாள்-
அன்னை!
மனம் ஒத்துகொள்ளாமல்-
வாட்டும்-
என்னை!
அன்னை மனம்-
நோக கூடாதென்று-
விழுங்கி கொண்டேன்-
கோபம்தனை!
இணைத்து கொள்வேன்-
"அவர்களின்"-
விசேசங்களில் -
என்னை!
பிறகுதான்-
அறிந்தேன்-
உண்மைதனை!
இரு மான்கள்-
தாகித்த நிலையில்!
ஒரு மானின்-
தாகம் தீர்க்கும் அளவே-
தண்ணீர்-
நீர் நிலையில்!
முதலில்-
ஒரு மான்-
குடித்தது!
பிறகு-
மறுமான்-
குடித்தது!
அதிசயம்-
தண்ணீர் குறையாமல்-
இருந்தது!
ஆம்-
இரண்டும்-
குடிக்காமல்-
குடிப்பதுபோல்-
நடித்திருக்கிறது!
அதுபோலவே-
நானும்-
என் தாயும்!
தாய் மனதை-
நானும்!
என் மனதை-
தாயும்!
நோக செய்திடாதற்கு-
"பொறுத்து" -
போய் இருக்கிறோம்!
அதனால் தானோ-
உறவுகளை வெறுக்காமல்-
இன்னும் பயணிக்கிறோம்.....!!!
நெகிழ்ச்சி!
ReplyDeleteayya!
Deleteudanadi varavikkum-
thaangal karuthukkum mikka nantri!
உறவுகளும் சில நட்புகளும் வரவினைப்
ReplyDeleteபொறுத்தே அமைகிறது இக்காலத்தில்.பொதுவில்
பொறுப்போம். பொங்கி எழுவோம் அணை மீறும் போது.
நாம் படைத்த , நம்மைப் படைத்த , அதனைப் படைத்த
உறவினை மட்டும் என்றும் எக்காரணம் கொண்டும்
பிரியோம். தங்களுக்கு இடையில் உள்ள
புரிதல் நெகிழ்தல் சீனி !
அருமையான கவிதை. தொடருங்கள்
ReplyDeleteஉண்மை
ReplyDeleteஇதுதான்
வாழ்க்கை
mana saatchi!
Deletemikka makizhchi!
குற்றம் கண்டால்
ReplyDeleteசுற்றம் இல்லை“
விட்டுக்கொடுப்பதே வாழ்தல் என்பது உங்களின் “முடிவெடுத்தேனி“ல் புரிகிறது நண்பரே.
அருமையான கவிதை நண்பரே!
ReplyDeleteஇது போல் வேண்டும் மன உறுதி...
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு...
மிக்க நன்றி நண்பரே...
balan sir!
Deletemikka nantri sir !
சூப்பர் கவிதை நண்பா.......
ReplyDeleteமான்களின் சம்பவம் நெகிழச் செய்கிறது
sittu kuruvi!
Deletemikka nantri!
இன்றைய நிலையில்
ReplyDeleteஅனைவருக்கும் இருக்கவேண்டிய
மனோ நிலையை மிக அழகாகச் சொல்லிப்ப்கிறீர்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ayya!
Deletemikka
nantri!
ayyaa!
மானின் கதை சொல்லி அம்மாவின் உறவோடு இணைத்து மனதை நெகிழவைத்துவிட்டீர்கள் சீனி !
ReplyDeletemikka nantri maa!
Delete