Tuesday, 21 August 2012

படித்தவர்கள்!



வண்ணம் மட்டும்-
இருந்தால்-
பூக்களா!?

பெயருக்கு பின்னால்-
பட்டங்கள் மட்டும் -
இருந்துவிட்டால்-
படித்தவர்களா!?

அநேகமான -
பட்டங்கள் உலகில்-
உண்டு!

மனிதாபிமானங்கள்-
தேடவேண்டிய நிலை-
உலகில் இன்று!

ஒருவரை-
 கண்டால்-
பாதி தெரிகிறான்!

பேச ஆரம்பித்தவுடன்-
மீதம் தெரிகிறான்!

அரசன் ஒருவன்-
கனவு கண்டான்!

அனைத்து பல்லும்-
விழுந்து விட்டு-
ஒரு பல் இருக்கும்-
காட்சியை கண்டான்!

கனவின் பலன் அறிய-
சபை கூட்டப்பட்டது!

காரணம்-
சொல்லப்பட்டது!

அதிகமானவர்கள்-
சொன்னார்கள்!

உனக்கு முன்னாலேயே-
உன்குடும்பம் -
இறந்து விடும் -
என்றார்கள்!

அனைவரும்-
தண்டனைகள் பெற்றார்கள்!

கடைசியாக ஒருவர்-
வந்தார்!

அவரும்-
அதைதான்-
சொன்னார்!

பொன்னும் பொருளும்-
பெற்றார்!

அது எப்படிங்க!
இப்படிதாங்க!

இதை அமுங்குங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!

20 comments:

  1. நல்ல வரிகள்...

    மிகவும் பிடித்த வரிகள் :

    /// ஒருவரை-
    கண்டால்-
    பாதி தெரிகிறான்!

    பேச ஆரம்பித்தவுடன்-
    மீதம் தெரிகிறான்! ///

    வலைச்சரம் செல்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //படித்தவர்கள்!
    சிறந்தவர்கள்!

    சொல்வதிலும்-
    அற்புதமானவர்கள்!

    நல்ல விஷயத்தை-
    பகிர்வார்கள்!

    கெட்டதை கண்டால்-
    வெறுப்பார்கள்!

    இவர்களே எனக்கு-
    படித்தவர்கள்!

    மிக பிடித்தவர்கள்!

    அதுதான்-
    இன்றைய முத்துக்கள்!//

    அருமையான உண்மையான உணர்வுகள், அவற்றைச் சொல்லியவிதமும் அருமை.

    தங்களுக்கும், அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  3. நல்ல கருத்து... படித்தவர் படித்தவர்கள் போல நடப்பது இல்லை, படிப்பு என்பது அறிவை வளர்பதற்கு என்று பலர் நினைப்பது இல்லை...

    ReplyDelete
  4. கவிதையில் கதை! அருமை!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
  5. ஒருவரை-
    கண்டால்-
    பாதி தெரிகிறான்!

    பேச ஆரம்பித்தவுடன்-
    மீதம் தெரிகிறான்!


    உண்மை உண்மை..!!
    அருமைங்க நண்பரே.

    ReplyDelete
  6. அருமையான கவிதை. கவிதை வடிவில் கதை.

    அழகாய் கூறிவுள்ளீர்கள்.

    தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete
  7. இன்றைய உலகில்-
    ஆழமான கருத்துக்களுக்கு-
    பஞ்சம்!
    ///////////

    அழகான அர்த்தமுள்ள வரிகள் இவை எனக்குப் பிடித்தவை நண்பா

    ReplyDelete
  8. அழகான கவிதை வலைப்பதிவில் பதிவிட்டவைகளை விட ஆசிரியர் பொருப்பின் பின் கவிதைகளில் மாற்றம் தெரிகிறது நண்பரே

    ReplyDelete
  9. நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் சீனி.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      neeeeeeee.........nda idaivelikku pin-
      varukaiyum karuthittamaikkum-
      mikka nantri!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete