Saturday, 4 August 2012

போராட்டமாம் போராட்டம்.....



"அகிம்சை" பிறந்த-
மாநிலம்!

"இம்சை"ஆளும்-
செந்நிலம்!

மிருக வேட்டைக்கு-
எத்தனையோ தண்டனைகள்!

மனித வேட்டைக்கு பின்னும்-
மௌனிக்கும்-
நீதிமன்றங்கள்!

இதில்-
மத நல்லிணக்க-
உண்ணாவிரத நாடகங்கள்!

ஒரு "ஆகாசவாணி"-
ஊழலுக்கு எதிரா-
யாத்திரை கிளம்பினாரு!

லாவகமா-
கர்நாடக பாதையை-
மறந்துட்டாரு!

அதிகாரிகளால்-
சூறையாட பட்ட-
இருளால சமூக-
சகோதரிகள்!

தண்டனை-
அபராதமாக-
ஐம்பதாயிரம்-
ரூபாய்கள்!

நடிகை பாலியல் தொந்தரவுக்கு-
உள்ளானதுக்கு-
வீடு முற்றுகை-
போராட்டமாம்!

இப்பெண்களின் நிலையை-
ஏன் மறந்தார்களாமாம்!

சுதந்திரம் கொண்டாடமாட்டார்கள்-
சிறுபான்மையினர்கள்-என
ஓலமிடும் ஒரு கூட்டம்!

வகுக்கப்டுது-
சுதந்திர தின அணி வகுப்பை-
தடுக்க போடும்-
திட்டம்!

ஒரு பக்கம்-
கொண்டாடலை -என
கூப்பாடு!

மறுபக்கம்-
கொண்டாட விடாம-
தடுக்கும் நிலைப்பாடு!

இம்மக்கள் -
என்ன செய்ய வேண்டும்-என்பது
இவர்களின் நிலைப்பாடு!?

முஸ்லிம் நாடுகள்-
விளையாட்டு போட்டிகளில்-
பெண்களை அனுமதிப்பதில்லை-என
பொய் குற்றச்சாட்டு!

அப்போட்டிகளில்-
ஒழுங்கான ஆடையுடன்-
கலந்து கொள்ள அனுமதிக்கிறது-
அந்நாடு!

ஒழுங்கான ஆடை-
பழமை வாதமாம்!

ஆடையை குறைக்க சொல்லி-
மார்பை காட்டி கொண்டு-
போராட்டமாம்!

ஓ!

அறிவு ஜீவுகளே!

ஆதிமனிதன்-
நிர்வாணமாக அலைந்தான்!

பின்புதான்-
நாகரீகமாக-
ஆடைதனை அணிந்தான்!

இன்னொரு போராட்டம்-
நடத்தலாம்!

எல்லோரும்-
சோறு சாப்பிடுகிறார்கள்-
என!

அதனை எதிர்த்து-
மலத்தை சாப்பிடுவோம்-
என...!!!



24 comments:

  1. சலாம்...
    நெத்தியடி கவிதை...அருமை...

    ReplyDelete
  2. முடிவில் சாட்டை அடி... நன்றி...

    ReplyDelete
  3. நண்பா கடைசியில் நெத்தியடி அடித்துவிட்டீர்களே......
    நல்லதொரு ஆதங்கம்

    ReplyDelete
  4. நச்சென்று முடித்துவிட்டீர்கள் சீனி! கலக்கல் கவிதை!

    ReplyDelete
  5. முடிவு அருமை நண்பா

    ReplyDelete
  6. காத்திரமான வரிகள் நண்பரே..
    என்ன சொல்லியும் புரியாததுபோல நடிப்பவர்கள்..
    உணர்வை மறத்தவர்கள்..

    ReplyDelete
  7. போராட்டமா போராட்டம் - ஆதங்கம் வரிகளில் சூடாகா....

    ReplyDelete
  8. கனமான கருத்தும் எழுத்தும் சீனி.

    ReplyDelete
  9. ஆதங்கமான போராட்டம்.

    ReplyDelete
  10. சரியான சாட்டையடி நண்பா.அருமை.தெிலும் இந்த முடிவு மிக அற்புதம்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.


    எனக்கொரு பதில்!!!!!

    ReplyDelete
  11. இரத்தம் வர சாட்டையடி...அப்பாடி...இவ்ளோ கோவம் சமூகத்தில.என்ன செய்யலாம் சீனி நாகரீகமாம் !

    ReplyDelete
  12. தங்களது ஆதங்கம் குறையாமல் தழுவுகிறது தங்கள் வரிகள்! நல்ல மாற்றங்களை நோக்கி காத்திருப்போம் அண்ணா!

    ReplyDelete