Sunday, 11 November 2012

நம்மை நாமே அறிவோமா....!!

அனுப்பினோம்-
விண்வெளிக்கு-
விண்கலம்!

அமைத்தோம்-
பூமிக்குள்-
சுரங்கம்!

அடக்கினோம்-
ஆயிரம் பேர்-
பலம் கொண்ட-
யானையை!

அடைத்தோம்-
வீரத்திற்கு-
பேர் போன-
புலியை!

எத்தனையோ-
சாகசங்கள்-
செய்துள்ளான்-
மனிதன்!

அத்தனையிலும்-
இன்னும்-
எத்தனையோ-
புதிர்களை-
வைத்துள்ளான்-
இறைவன்!

இறப்புக்கு பின்-
காரணம்-
சொல்கிறோம்!

இயற்க்கை -
சீற்றத்திற்கு பின்-
காரணம்-
தேடுகிறோம்!

எல்லாவற்றுக்கும்-
காரணம்-
நடந்த பிறகு-
தேடும்-
நாம்!

"நடத்துபவனை-"
பார்த்தால்தான்-
நம்புவேன்-
என்கிறோம்!

ஒரு துளி நீரை-
கடலின் நீர்-
எனலாம்!

முழு கடலும்-
இந்த ஒரு-
துளிதானும்-
சொல்லலாம்!!?

நேற்றைய-
கண்டுபிடிப்பை-
இன்றைய-
கண்டுபிடிப்பு-
மிஞ்சுகிறது!

இன்றையதை-
நாளையது-
மிஞ்ச முயல்கிறது!

அதே போல்தான்-
விஞ்ஞானம்!-
நேற்று உள்ளதை-
இன்றுள்ளது-
மறுக்கிறது!

அல்லது-
கூடுதலாக-
ஒன்றை-
சொல்கிறது!

வியப்பாக-
உள்ளது-
விஞ்ஞானிகள்-
சொல்வது!

"விஞ்ஞான முயற்சி-
முற்று பெறுவதில்லை-
இன்னொரு -
தொடக்கத்தை-
தாராமல்-
போவதில்லை-"
என்பது!

விஞ்ஞானம்-
வரவேற்க்கதக்கது!

விஞ்ஞானம்-
மட்டுமே-
முடிவும்-
ஆகாது!

"தன்னை-
அறிந்தவன்-
தன் -
இறைவனை -
அறிவான்!-"
நபிகள்-
பெருமானார்!

சொந்தங்களே!
நம்மை -
அறிந்தோமா!?-

இறைவனை-
அறிந்திடதான்-
சிந்திப்போமா!?




17 comments:

  1. நமக்கான தேடல்களிலும்
    நமது செயல்களுக்கான
    காரண காரியத்திலும்
    முனைப்பு காட்டும் நாம்
    மறந்து போகும்
    நாம் யார் என்ற
    செய்தியை
    அருமையா சொல்லியிருகீங்க
    நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. maken sako!

      mikka nantri sako!

      vaazhthukkal...

      Delete
  2. முதலில் நம்மை தான் அறிய வேண்டும் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. balan sako!

      mikka nantri!

      divaali vaazhthukkal...

      Delete
  3. கவிதை மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ!

      Delete
    2. raji!

      ungalukkum vaazhthukkal!

      mikka nantri!

      Delete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. அருமையான சிந்தனை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. suresh!

      mikka nantri!

      ungalukkum vaazhthukkal!

      Delete
  7. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் நண்பா...

    ReplyDelete
  8. //"தன்னை-
    அறிந்தவன்-
    தன் -
    இறைவனை -
    அறிவான்!-"
    நபிகள்-
    பெருமானார்!
    //

    நம்மை அறிந்து கொள்வது தான் கஷ்டம் இல்லையா! சிறப்பான கவிதை....

    ReplyDelete