Wednesday, 7 November 2012

யார் வகுத்தது....!!?

யார்-
உசத்தி!

இதனால்தான்-
கலவர தீ!

குரு பூஜைகள்!

சாமானியனுக்கும்-
விழும்-
பூசைகள்!

கொண்டாடபடுது-
ஜெயந்தியாய்!

எரிகிறது-
ஏழைகள்-
வயிறெல்லாம்-
ஜெகஜோதியாய்!

சிறுபான்மை!
பெரும்பான்மை!

ஏன் இந்த-
மனப்பான்மை!

உயர்ந்தவன்!
தாழ்ந்தவன்!

இதை-
எவன்-
வகுத்தவன்!

ஒவ்வொன்றும்-
மனித-
உயிர்!

ஓட ஓட-
வெட்டுவது-
எதற்கு-
இந்த-
துயர்!?

இனம்-
மதம்-
மொழி!

அது-
அவரவர்களின்-
வழி!

கருத்துகளை-
சொல்வதில்-
தவறில்லை!

கழுத்தறுத்து-
கொல்வதில்-
நியாயமில்லை!

ஒவ்வொருவரின்-
பிறப்பும்-
ஒரே-
மாதிரி!

அவர்கள்-
நடத்தையால்-
ஆகிறார்கள்-
முன் மாதிரி!

தலைவர்கள்-
பிறந்தநாள்-
கொண்டாடுவதில்-
அவரவர்-
இஷ்டம்!

கொடுக்கனுமா-
மற்றவர்களுக்கும்-
கஷ்டம்!?

தலைர்கள்-
தேசத்துக்காக-
உழைத்தவர்கள்!

மனமாச்சரியங்களை-
மறந்தார்கள்!

ரத்தபந்தங்களை-
கூட-
துறந்தவர்கள்!

இன்றைய-
தலைமுறைகளால்-
சாதி-
மதம் -என்ற -
வட்டத்திற்குள்-
சிக்கி கொண்டவர்கள்!

உன்னால்-
என்னால்-
முடிந்தால்-
ஒரு உயிர்-
வாழவாவது-
உதவுவோம்!

முடியாதென்றால்-
தொந்தரவு-
செய்யாமலாவது-
ஒதுங்குவோம்!

"ஒரு ஆத்மாவை-
வாழ செய்பவன்-
உலகில் உள்ள-
அத்தனை பேர்களையும்-
வாழ வைத்தவனாவான்..."-
இது இறைவாக்கு!

மனதை -
தொட்டு கொள்வோம்-
எப்படி உள்ளது-
நம் போக்கு..!!





14 comments:

  1. காலத்துக்கு ஏற்ற கவிதை நண்பா..

    இன்றைய வலைச்சரத்தில் தங்கள் இந்தப் பதிவை நன்றியோடு தேர்ந்தெடுத்திருக்கிறேன்..

    ReplyDelete
  2. அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

    நன்றி.

    ReplyDelete
  3. நடக்கும் உண்மைகள்...

    உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
  4. சிறப்புற்ற படைப்பு! தொடருங்கள்!

    ReplyDelete
  5. ஒவ்வொருவரின்-
    பிறப்பும்-
    ஒரே-
    மாதிரி!

    அவர்கள்-
    நடத்தையால்-
    ஆகிறார்கள்-
    முன் மாதிரி!

    Good ...

    ReplyDelete
  6. நிஜத்தை சொல்லும் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. யோசிக்க வைக்கும் வரிகள்!

    ReplyDelete
  8. மிக நல்ல வரிகளும், கருத்துகளும்.
    இனிய நல்வாழ்த்து. சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. kovai kavi!

      ungal muthal varavukku mikka nantri!

      Delete