Thursday, 8 November 2012

"இருந்தால்" என்ன.....!!?

ஆசை -
காட்டி!

நல்லவன்-
வேஷம்-
கட்டி!

மோகத்தை-
ஊட்டி!

ஆடி இருக்கலாம்-
கட்டில்!

இணையத்தில்-
நட்பு-
பாராட்டி!

மடங்கும்வரை-
மின்னஞ்சலால்-
விரட்டி!

சீரழித்து இருக்கலாம்-
மிரட்டி!

விசாரணை-என
அழைத்து-
கொண்டு!

விலங்குகளால்-
கட்டி-
விட்டு!

விடுவித்து-
இருக்கலாம்-
"விவகாரம்"-
முடித்து விட்டு!

அப்பாவிகளை-
சுட்டு விட்டு!

தீவிரவாதி-என
பட்டம் சூட்டி-
விட்டு!

"இதை"-
அப்புறபடுத்தி-
இருக்கலாம்-
அவ்விடத்தை-
விட்டு!

வறுமைக்கு-
பயந்து-
கொண்டு!

போயிருக்கலாம்-
"இங்கே"-
போட்டு விட்டு!

மனம் -
ஒத்து -
"வாழ்ந்து"-
விட்டு!

சலிப்பு -
தட்டியதும்-
பிரிந்து-
விட்டு!

தடையாக-
நினைத்து-
போயிருக்கலாம்-
இங்கே-
வீசி  விட்டு!

இப்படியாக-
எத்தனையோ-
காரணங்கள்-
இருக்கு!

அதனால்தானோ-
குழந்தைகளும்-
குப்பை தொட்டிகளிலும்-
காண கிடக்குது!?

ஒரே-
வித்தியாசம்!

மனிதனுக்கும்-
மிருகத்திற்கும்!

அது தான்-
இரக்கம்!

இரக்கம்-
இல்லாதவர்கள்!
"இருந்தால்"-
என்ன!?

இறந்தால்-
என்ன!?

அதற்காகத்தான்-
இயற்கை சீற்றங்களா-
என்ன!?

"தானே"-
தானா-
வரலாம்!

"நீலம்"-
நீளமா-
வரலாம்!

"சாண்டி"-
தாக்கிடலாம்!

"போண்டி"-
ஆக்கிடலாம்!

எதுவும்-
நிரந்தரம்-
இல்லை-
இவ்வுலகில்!

இரக்கம்-
இருக்கவேணாமா!?-
நம்-
மனதில்!!



16 comments:

  1. சீறிப்பாயும் சிந்தனையின் வேகம்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இரக்கமுள்ள வரிகளின் கோர்ப்பில்
    பாசமுள்ள கவிதை

    ReplyDelete
  3. தொட்டில்களா தொட்டிகள்? கவிஞர் கூறியது போல் கருணை மறந்தே வாழ்கின்றார்! கடவுளைத்தேடி அலைகின்றார் எனும் வரிகள் ஞாபகம் வந்தன!

    ReplyDelete
  4. யோசிக்க வேண்டிய கேள்விகள்... அருமை...

    ReplyDelete
  5. வாவ்.. அருமையான் கேள்வி.
    மனிதனின் வரம்பு மீறல்களே
    இயற்கை சீற்றங்களுக்கு
    முக்கிய காரணம் என்பதை
    அழுத்தமாக கூறியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. இரக்கம்-
    இருக்கவேணாமா!?-
    நம்-
    மனதில்!!

    நல்ல கேள்வி.

    ReplyDelete
  7. நல்ல கேள்வி....கண்டிப்பாக வேணும்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. சிறப்பான சிந்தனை வரிகள்! இரக்கம் இருக்க வேண்டாமா? நல்ல கேள்வி!

    ReplyDelete
  9. அருமையான் கேள்விக்கவிதை...

    ReplyDelete
  10. rajesvari!

    theriya paduththiaytharkku-
    mikka nantri!

    ReplyDelete