Sunday, 6 May 2012

என்ன ஆக போகுது... !?

தேடி வந்த-
தேவதையை-
தேவை இல்லை-என
ஒதுக்கி விட்டு-

அவள் கல்யாண-
செய்தியை கேள்வி பட்டு-
மனதின் ஓரம்-
கலங்குவதால்!

"பின்னி" எடுத்தான்-
போதையில் -
பின்னிகிடந்தவனை-
நண்பன்!

தடுத்து-
திட்டி அனுப்பினேன்-
அடித்த என் நண்பனை!

அடித்ததின் காரணம்-
என் தாயை அடிக்க -
போனதே-
காரணம்!

என் தோழனை-
நினைத்து கவலை படுவதால்!

கடல் தாண்டி-
போகனுமா!?
என- நினைக்கும்போது!

கவலை இல்லாம -
சொந்தங்கள் இருப்பதை-
கண்டபோது!

கடுப்புதான்-
கூடியது-
கை அசைத்து வழி அனுப்பியபோது!

அசைத்த கைகள்-
கண்ணீரை துடித்ததை-
கவனித்தபோது!

தவறை எண்ணி -
தவிப்பதால்!

கேவலமாக-
பார்த்தேன்-
புருஷனை கேவலாமா-
பேசியவளை!

அறிந்தேன்-
அதை விட-
கேவலமா புருஷன்-
நடப்பை!

இப்பொழுது-நான்
தலை குனிவதால்!

எத்தனை முறைதான்-
"படு"வது!

எத்தனை முறைதான்-
தெளிவது!

இன்றைய பொழுது-
கேள்வியை தருது!

அடுத்த நொடிபோழுது-
பதிலோட வருது!

வினா-
விடை-
விரவி கிடப்பதுதான்-
வாழ்வா!?

பதில் கிடைக்கும்வரை-
பொறுமை இழப்பாதால்தான்-
மனிதர்களிடையே-
பிளவா!?

மண்ணுல அடங்குற
வாழ்வு இது!

கொஞ்சம் பொறுப்பதால்-
என்ன ஆக போகுது!?-
குறைந்து போக-
போகுது!?

17 comments:

  1. //மண்ணுல அடங்குற
    வாழ்வு இது!//

    நூற்றுக்கு நூறு உண்மை, அணைத்து வரிகளும் கவிதையாக எழுந்து நிற்கும் பொழுது அருமை

    ReplyDelete
  2. seenu!

    ungal udanadi varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  3. அறிந்தேன்-
    அதை விட-
    கேவலமா புருஷன்-
    நடப்பை!// ம்ம் வாழ்க்கை மாற்றங்கள் பல வந்து போகும் உணர்வு மிக்க கவிதை சீனி!

    பின்னூட்டம் போட உங்களின் வலைக்கு வீட்டுக்கு வரும் நள்ளிரவுகள் வரை காத்திருக்க வேண்டி இருக்கு !ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. thani maram!

      ungal karuthukkum aatharavukkum-
      mikka nantri!

      enna seyya !
      ungalathu siramathirkku-
      mannikkavum!

      Delete
  4. நல்ல வரிகள்...நல்ல கவிதை..:) அப்புறம் புதுசா இருக்கு ஹெடர் எல்லாம்..:)

    ReplyDelete
    Replies
    1. sittu kuruvi!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      vadivamaiththathu nanpar-
      sadhak avarkal!

      Delete
    2. 'சீனி'யின் சுவையான ருசி சிட்டுக்குருவிக்கும் தெரிந்துவிட்டதே. நன்றி.

      Delete
  5. //மண்ணுல அடங்குற
    வாழ்வு இது!

    கொஞ்சம் பொறுப்பதால்-
    என்ன ஆக போகுது!?-
    குறைந்து போக-//

    மிக அருமையாய் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ibramsha!

      ungal varavukkum karuthukum-
      mikka nantri!

      Delete
  6. //கொஞ்சம் பொறுப்பதால்-
    என்ன ஆக போகுது!?-
    குறைந்து போக-
    போகுது!? //

    ஆமாம் என்ன ஆக போகுது...

    ReplyDelete
    Replies
    1. manasaatchi!

      ungal varavaal
      -mikka makizhchi!

      Delete
  7. அருமையான கவிதை வரிகள் நாளுக்கு நாள் புது புது விஷயங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Asarath!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  8. படுவதும் தெளிவதும்தானே வாழ்க்கை.அருமை சீனி

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      karuthukkum mika nantri!

      Delete
  9. பொறுமை இழந்த மனிதர்கள்தான் நிறைய இப்போ.ஒரு நிமிடப் பொறுமையில் எத்தனை சந்தோஷம் கிடைக்கும் !

    ReplyDelete
  10. hemaa!

    ungal varavukkum karuthukkum-
    mikka nantri!

    ReplyDelete