Sunday, 23 October 2011

விடாத கருப்பு!




நெருக்கம் அதிகம்-
இருளுக்கும்-
 எனக்கும்!

விளக்காக வந்தாள்-
என் வாழ்வின் -
இருளுக்கு!

என் கருப்பு முகத்துல -
தெரிஞ்சது-
வெளுப்பான சிரிப்பு -
இருந்தது!

இருட்டாதா?என -
மனம் ஏங்கும்!

அப்போ தானே -
தண்ணி எடுக்க வருவா -
ஊர் கிணத்துக்கு !

இருளும் நானும் -
ஒண்ணுதான்!

இரண்டுக்கும் -
நிறம்-
கருப்புதான்!

ஊரே விரும்பும் -
அழகு பெண்ணவள்!

என்னையவா?கட்டிக்க -
விரும்புவா -
அவள்!?

காரணங்களாக -
இருக்கலாம்!

என்னிடம் உள்ள -
நிறமோ!
இல்லாத பணமோ!?

கருப்பு தாவாணி கட்டி -
வரும்போதெல்லாம்-
என் மனதில் சிலிர்ப்பு!

ஆடையாக என்னையே -
கட்டி கொண்டதாக -
நினைப்பு!

இலவசமே ஆனாலும்-
வண்ண தொலை காட்சி -
வேணாமே!

கருப்பு -வெள்ளை -
போதுமே!

கருப்பு நானாக -
வெள்ளை அவளாக !

கடலில் சேர்ந்த -
ஆத்து தண்ணிய பிரிக்க -
முடியாது!

கருப்பான என்னிடம் -
ஒரு-
இனிப்பான காதல் இருந்தது-
யாருக்கும் தெரியாது!

இரவு வேளையில் -
எனக்கு-
வேலை!

காயங்கள் தரும் -
அவளது நினைவை!

அண்ணாந்து பார்ப்பேன்-
வானில் நிலவை !

வைக்கோல் பொம்மையை -
காட்டியதால் -
மனுஷன் பாலை கறக்க-
இடம் தரும் -பசு!

நிலவை பார்த்த பின் -
அவளது முகத்தை பார்த்ததாக -
அமைதி கொள்ளுது-
மனசு!

No comments:

Post a Comment