Wednesday 10 October 2012

நான் என்ன செய்வேன்...!!?? (2)

 பொழுது-
அடையும்-
நேரம்!

பள்ளி-
கதவுகள்-
திறக்கும்-
நேரம்!

மனதை-
அள்ளும்-
மாலை-
நேரம்!

பள்ளி விட்டதும்-
மாணவர்கள்-
பறந்தார்கள்-
சிட்டாக!

இனியவனோ-
சென்றான்-
எதையோ-
இழந்தவனாக!

அவனின்-
கவலை-
அறியும்!

கண்மாயும்-
பிளந்து கிடக்கும்-
கரம்பையும்!

அவன் காலின்-
தளர்வில்-
"அவைகளுக்கு-"
புரியும்!

காலாற-
நடந்தான்!

பாரம் கொஞ்சம்-
குறைந்ததாக-
நினைத்தான்!

ஊரில் யாரும்-
சொந்தமில்லை-என்று
சொல்வதற்கில்லை!

"இல்லாதவனை" யாரும்-
சொந்தம் கொண்டாட-
விரும்புவதில்லை!

பல உள்ளது-
இளமையில்-
கொடுமை!

இவனுக்கோ-
சொந்தங்களின்-
ஏளன பார்வை!

வீட்டின் அருகே-
வந்தான்!

வேதனைதான்-
மிச்சம்-என்று
தெரிந்ததுதான்!

தாய் இருந்தாள்-
ஒடிசலான-
தேகம்!

உயிர் ஒட்டி -
இருப்பதே-
அதிசயம்!

குழந்தை காலத்தில்-
பாசத்தை-
பாலாக புகட்டியவள்!

காலமெல்லாம்-
நம் கண்ணில்-
கண்ணீரை பார்க்க-
பிடிக்காதவள்!

நீர் ஊற்று தேடி-
மண்ணை-
 பிளக்கிறார்கள்!

தானாக ஊறும்-
தாய் பாலை-
கொடுப்பதை-
தவிர்க்கிறார்கள்!

அதற்க்கு-
நவீன யுவதிகள்-
நாகரீகம் -என்று
பிதற்றுகின்றார்கள்!

தாய்பால்-
கொடுப்பதால்-
மார்பு புற்று வருவது-
குறைவு என்பதை-
ஏனோ-
மறந்தார்கள்!?

அது சரி-
ஊர் வம்பு-
நமக்கெதற்கு!?

சொல்லவேண்டிய-
கதை மிச்சம்-
இருக்கு!

வீட்டில்-
தாயும்-
தனயனும்!

தெரு முனையில்-
நாயின் சப்தமும்!

கூடவே-
இவர்களை "இம்சிக்கவரும்"-
சப்தமும்!

(தொடரும்...)






17 comments:

  1. மிக அருமை...
    வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது


    தினபதிவு திரட்டி

    ReplyDelete
    Replies
    1. thina pathivu!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete
  2. சிந்திக்க வைத்தது தொடருங்கள்.

    ReplyDelete
  3. கவிதைக் கதையில் கருத்துக்கள் மின்னுகின்றன.
    தொடருங்கள்.

    ReplyDelete
  4. அதற்க்கு-
    நவீன யுவதிகள்-
    நாகரீகம் -என்று
    பிதற்றுகின்றார்கள்!
    //ம்ம் சிந்திக்க வைக்கும் பலரை அருமையான கவிதை சகோ!

    ReplyDelete
  5. நல்ல வரிகள் சகோ... நவீன நடைமுறையில் பெண்கள் தாய்பாலை தன் குழந்தைக்கு கொடுக்க தயங்குவது வருத்தமான விடயம்.

    ReplyDelete
  6. நல்லது
    தொடருங்கள்

    ReplyDelete
  7. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete
    Replies
    1. mohan p!

      mikka nantri!

      ungal blogger id theriyapaduththavum!

      Delete
  8. அருமை அண்ணா!மாறி வரும் காலம் தாய்மையையும் விட்டு வைக்கவில்லை! மேலும் இனியவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கிறது தொடர்ச்சியாகவே படிக்கிறேன்!

    ReplyDelete