Tuesday 23 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (10)

"பட்டை"-
சரக்குக்கு-
தடை -
இங்கே!

"பாட்டில்"-
சரக்குக்கு-
தாராளம்-
இங்கே!

"பட்டை-"
உடலுக்கு-
நோயை -
தரும்!

"பாட்டில்"-
என்ன -
வலிமையா-
தரும்!!?


பாலும்-
பழமும்-
சாப்பிடுபவனுக்கே -
பல நோய்-
வருதுங்க...!!

பாழ போன-
"நாத்தத்தை-
குடிச்சா !?--
உடலுக்கு-
உறுதியாங்க..!!??

 மது தீமைகளின்-
தாய்-
நபி மொழி!

குடிச்சே -
தனக்கு தானே-
தோண்டி கொள்கிறார்கள்-
மரண குழி!

படுத்த படுக்கை-
ஆனான்!
பாவி-
மகன்!

அவன்தாங்க-
இனியவன்!
அப்பன்!

"நடமாட்டம்"-
இருந்தாலே-
இவன் குடும்பத்தை-
நாய் கூட-
நாடாது!

இனி-
எறும்பு கூட-
எட்டி பார்க்காது!

முதலிலாவது-
பழைய சோறு-
கிடைத்தது!

இப்போ-
அதுலயும்-
மண்ணு -
விழுந்து-
விட்டது!

யார் கூப்பிட்டது-
"குடிக்க "-என
சொல்லலாம்-
விற்பவர்கள்!

இவர்கள்-
பசியில் இருப்பவன் -
முன்-
ஊறுகாய் திறந்து காட்டி-
எச்சில் ஊற கூடாதுன்னு-
சொல்கிறவர்கள்!

ஒவ்வொருவருக்குள்ளும்-
இச்சைகள் எனும்-
மிருகம் -
இருக்கும்!

அது ஒவ்வொரு-
வினாடியும்-
"ருசி "பார்க்க-
காத்து கொண்டிருக்கும்!

"எல்லா பூனையும்-
சைவ பூனைதான்-
அதற்க்கு-
எலி கிடைக்கும் வரை!"-
இது-
நான் படித்ததில்
பிடித்த ஒன்று!

அதை பகிர்ந்துள்ளேன்-
இவ்வாததிற்கு-
பொருந்தும் என்று!

இனியவனுக்கு-
விழுந்த-
முதல் அடி!

படிப்பில்-
விழுந்தது-
இடி!

வாயிற்றுபாட்டுக்கே-
வழி இல்ல!

இளமை காலம்-
வந்ததோ-
இவனை-
இம்சித்து கொல்ல!

எதை-
தொட!

எதை-
விட!

வாழ்கை-
தாரமா!?

வாழ்வாதாரமா!?

(தொடரும்....)





19 comments:

  1. முடிவில் நல்ல கேள்வி...

    தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. baalan sako!

      thodarum anpirkiu mikka nantri!

      Delete
  2. மது பற்றிய அழகான கவிதை...

    முடிவில் நல்ல கேள்வியையும் விட்டுச் சென்றுள்ளீர்கள்...

    ReplyDelete
  3. விழிப்புணர்வுக்கவிதை .

    ReplyDelete
  4. இனியவன் என்ற கதாபாத்திரமூலம் ஒரு கவிதை தொடரில் பல சமூக அவலங்களை கோடிட்டு காட்டும் படைப்பு திறமைக்கு ஒரு பாராட்டு!

    ReplyDelete
    Replies
    1. maniyam sako!

      unmaithaan...

      ungalukku mikka nantri!

      Delete
  5. அருமையான தத்துவங்கள் நிறைந்த தொடர்.

    தொடருகிறேன்.

    ReplyDelete
  6. //"பட்டை-"
    உடலுக்கு-
    நோயை -
    தரும்!

    "பாட்டில்"-
    என்ன -
    வலிமையா-
    தரும்!!?//

    சரியான கேள்வி...

    ReplyDelete
  7. நீண்ட / சுவாரஸ்யமான தொடர்...
    தொடருகிறேன்...

    ReplyDelete
  8. இனியவன் அப்பா அறிமுகம் சூப்பர்.....
    முடிவில் வினாவும் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      mikka nantri karuthittamaikku....

      Delete
  9. சொல்ல மறந்துட்டேன் இண்ட்லி விட்ஜெட்டை நீக்கிவிடுங்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      mikka nantri !
      ungal thakavalukku-
      thappaana padam veliyaaki irunthathu..

      thakavalukku mikka nantri!

      Delete
  10. படித்ததில் பிடித்தது யோசிக்க வைத்தது!
    " வாழ்க்கை- தாரமா? வாழ்வாதாரமா" அருமை!
    தொடர்கிறேன்!

    ReplyDelete