Friday, 26 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (12)

"கயல் விழி!

இது-
இனியவனின்-
மொழி!

அன்புள்ள!
பாசமுள்ள!-என
ஆரம்பிக்கவில்ல!

காரணம்-
ஒரு வார்த்தையில்-
உன்னை அடக்கிட-
எனக்கு-
விருப்பமில்ல!

எனக்கு-
தெரிந்து-
என்னை நேசித்த-
ஒரு உயிர்-
என் தாய்!

எனக்கு-
தெரியாமல்-
நேசித்தவள்-
நீயாகத்தான்-
இருந்தாய்!

என் தாய்-
கண்ணீருக்கு-
சொந்தகாரி!

நீயோ-
சிரித்த-
முகத்துக்காரி!

"குடியால்-"
கெட்டது-
எத்தனையோ-
குடும்பங்கள்!

அதில்-
என்னைப்போல்-
எத்தனையோ-
இளைஞர்களின் -
எதிர்காலங்கள்!

"இருக்கிறவன்"-
குடித்தால்-
"அலுப்பு"-
என்கிறான்!

"இல்லாதவன்-"
குடித்தால்-
"கொழுப்பு"-
என்கிறான்!

எவன்-
"குடித்தாலும்-
அது-
மலம்தான்!

இதை-
ஏன்-
மறந்தான்!

"நான் என்ன-
செய்வேன்..!!?"

ஏன்-
கேவல சொற்களுக்கு-
நான்-
உள்ளானேன்!

என்னை-
பார்த்து-
திரும்பியவர்கள்!

ஒரு நாள்-
என்னை-
"அண்ணாந்து"-
பார்ப்பார்கள்!

சார்லி சாப்ளின்-
உலகையே-
சிரிக்கவைக்கவில்லையா!?

"என்னை -
அழவைத்த-
உலகை -
சிரிக்கவைக்காமல்-
விடமாட்டேன்-என
அவர் -
சொன்னவரில்லையா!?

இன்றைய -
தலைமுறைக்கு-
இலவச கல்வி-
கொடுத்தவர்-
காமராசர்-
இல்லையா!?

அவர்-
"படிக்காத-"
மேதையில்லையா!?

நம் தேசத்திற்கு-
உமருடைய ஆட்சி-
வேண்டும்-என்று
காந்தி -
சொன்னாரில்லையா!?

அந்த-
உமர்(ரலி..)அவர்கள்-
தந்தையால்-
"ஆடு மேய்க்க கூட-
லாயக்கில்லாதவன்-"என
திட்டுவாங்கியவரில்லையா!?

வையகம்-
சாக்கடைகளையும்-
கண்டதுண்டு!

சாதித்தவர்களையும்-
சுமந்ததுண்டு!

ஒரு-
நாள் நானும்-
வாழ்ந்து காட்டுவேன்-என
நம்பிக்கை -
எனக்குண்டு!

வரும் காலம்-
எந்தாய்-
கண்ணீர் துடைப்பேன்!

முடியுமான -
அளவு-
மற்றவர்களின்-
துயர் துடைப்பேன்!

காலம்-
கனிந்தால்-
உன் கரம்-
பிடிப்பேன்!

காலமெல்லாம்-
காத்திரு -என்று
சொல்லமாட்டேன்!

வேறொருவருடன்-
மணவாழ்க்கை-என்றாலும்
மனமார-
வாழ்த்துவேன்!

எனது -
பயணம்-
வெகு தூரம்!

எனக்காக-
நீ!
"வாடினால்"-
அது-
பெரும்பாவம்..!!

இவண்-
இனியவன்!

ஏனோ-
அவளை பற்றிய-
எழுத்தில்-
ஈரம்!

இவளது-
கண்ணீரால்-
மேலும்-
ஈரமானது-
கடிதம்!

-----முற்றும்---------------

(குறிப்பு-இக்கவிதை தொடர் பன்னிரெண்டும்-
மதுவின் தீமைகளை சொல்லும்-
மனித உரிமை ஆர்வலர்களுக்கு-
அர்ப்பணம்/
உங்களுக்கு பிடித்து இருந்தால்-
சமூக தளங்களில் இணைத்து கொள்ளுங்கள்)




14 comments:

  1. /// எவன்-
    "குடித்தாலும்-
    அது-
    மலம் தான்...! ///

    இந்த ஒரு வரியே போதும். இந்த தொடரைப்பற்றி சொல்ல...

    வாழ்த்துக்கள் நண்பரே... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. baalan sako..!!

      ungalin thodarntha anpirkku-
      mikka mikka nantri!

      Delete
  2. சிறப்பான கவிதை. மது பற்றிய உங்கள் கருத்துகள் அருமை - ‘எவன் குடித்தாலும் அது மலம் தான்!’ - அப்பட்டமான உண்மை. புரிந்து கொள்ள வேண்டுமே....

    சிறப்பான இத் தொடர் கவிதைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. nagaraj sako...!!

      ungal azhakiya pinnoottathirkku-
      mikka
      nantri sako!

      Delete
  3. சூப்பர். மதுவின் கொடுமை அழகாக சொல்லி சென்றது உங்க கவிதை...,பேஸ்புக்குல பகிர்ந்துக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. raaji !

      mikka nantri!

      thaaraalamaaka pakirungal...

      Delete
  4. குடியை மலம் என்று சொல்லி இருப்பது அதன் பாதிப்புகளை பிரதிபலிப்பதாக உள்ளது. நன்றி சீனி.

    ReplyDelete
    Replies
    1. thentral!

      ungal varukaikku -
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  5. அருமையாக முடித்துள்ளிர்கள்
    நல்ல செய்திகளைத் தாங்கியது பன்னிரண்டும்

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      thodarnthu vantha anpirkku-
      mikka nantri!

      Delete
  6. thozhir kalam...

    ithanai patriya visayangal enakku-
    theriyaathu!

    athanaal
    thaan entha oottu pattaiyum en thalaththil-
    illa ...

    mannikkavum!

    ReplyDelete
  7. சமுதாயப் பொறுப்புள்ள அழகான கவிதை. தொடரட்டும் இந்த வலம்

    ReplyDelete
  8. மிக அருமை அண்ணா! பாதி படிக்கையிலேயே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது! இனியவன் தப்பித்தான் என்று!
    மதுவினால் கண்ணீரில் தஞ்சம் கொண்ட குடும்பங்கள் ஏராளம் அண்ணா! இதை நானும் பல குடும்பங்களில் கண்டிருக்கிறேன்! இதன் விளைவுகள் விடிவது இனியவனை போன்று குடிப்பவர்களின் குழந்தைகள் மீது தான்!

    ReplyDelete