Sunday, 21 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (8)

 "நெருப்பு"-
இறுக்கமாக-
முகத்தை வைத்து -
கொண்டான்!

உருக்கமாக-
பேச -
ஆரம்பித்தான்!

மாப்ள!

உன்னை -
விரும்புதுடா-
அந்த -
"புள்ள"!

முன்னேயே-
சொல்லனும்னு-
நினைச்சேன்-
உன்கிட்ட!

நீதான்-
எப்பவுமே-
இருந்தாய்-
முறைசிகிட்டே!

இனியவன்-
"ஏதோ"-
பேச-
எத்தனித்தான்!

வெள்ளையன்-
"பேசி முடிச்சிக்கிறேன்-"
என்ற -அர்த்தத்தில்-
கையமர்த்தினான்!

எப்படி!?-
எனக்கு-
தெரியும்னு-
நினைக்கிறியா!?

எல்லாத்தையும்-
சொல்லுறேன்-
கொஞ்சம்-
பொறுக்குரியா!?

கயல் விழியும்-
சோபி கண்ணும்-
சினேகிதிகள்!

சோபி கண்ணும்-
நானும்-
காதலர்கள்!

என்னவளிடம்-
உன்னவள் -
சொல்லியிருக்கிறாள்-
உன் மேல் கொண்ட -
காதலை!

என் மூலம்-
செய்தி அனுப்பி-
எதிர் பார்க்குது-
உன் பதிலை!

உன் விருப்பத்தை-
"அது" கிட்ட-
சொல்லிடு!

இல்லையினா-
என் மூலமாவது-
சொல்லி விடு!

கோடை மழையாக-
"கொட்டி" விட்டு-
சென்று-
விட்டான்!

இனியவன்-
கொட்டும் பனியிலும்-
வியர்ப்பதாக-
உணர்ந்தான்!

காதலானது-
காட்டு தீ-
போன்றது!

பரவாமல்-
இருந்தால்-
நல்லது!

காதலானது-
அருவி-
 போன்றது!

விழுந்தாலும்-
அழகாக-
காட்சி-
தருவது!

காதலானது-
தீப்பெட்டி-
போன்றது!

"உரசாமல்-"
பயன்படாது!

காதலானது-
மெழுகுவர்த்தி-
போன்றது!

"கண்ணீரையும்"-
தன்னுடன்-
வைத்து கொண்டு-
ஒளி தருவது!

காதலானது-
பள்ளி கூடம்-
போன்றது!

தமிழ் தாய் -
வாழ்த்தும்-(ஆரம்பம்)
தேசிய கீதமும்-(முடிவு)
உள்ளது!

காதலானது-
தேர்தல்-
வாக்குறுதி-
போன்றது!

வாய் கிழிய-
வசனம்-
பேசுவது-
கடைசி வரை-
ஏமாற்றுவது!

இனியவன்-
என்ன தர-
போகிறது!?

"பின் தொடர்ந்தால்"-
உங்களுக்கும்-
தெரிய போகிறது!

(தொடரும்....)






16 comments:

  1. காதலுக்கு எவ்வளவு அர்த்தம் சொல்லுகிறீர்கள்
    அருமையான கவிதை
    சோபிக் கண்ணு எங்கயோ கேட்டதாக ஞாபகம்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. காதலானது-
    மெழுகுவர்த்தி-
    போன்றது!

    "கண்ணீரையும்"-
    தன்னுடன்-
    வைத்து கொண்டு-
    ஒளி தருவது!
    // ஆகா! தொடருங்கள்!//
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. sheshadri sako!


      ungal karuthukku mikka nantri!

      Delete
  3. நல்ல வரிகள்... அருமை...

    தொடராமல் இருப்போமா..?

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. baalan sako!

      thodarum anpukku-
      mikka nantri!

      Delete
  4. தொடர்கவிதைக்கு வாழ்த்துக்கள்! சிறப்பான துவக்கம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கவிதை நல்லா இருக்கு...பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. //என்ன தர-
    போகிறது!?//

    காத்திருக்கிறோம் நண்பரே!

    ReplyDelete
  7. காதலானது-
    தேர்தல்-
    வாக்குறுதி-
    போன்றது!

    வாய் கிழிய-
    வசனம்-
    பேசுவது-
    கடைசி வரை-
    ஏமாற்றுவது!

    நன்றாக செல்கிறது.
    தொடருகிறேன்.

    ReplyDelete
  8. காதலானது-
    தேர்தல்-
    வாக்குறுதி-
    போன்றது!


    காதல் தேர்தல் வாக்குறுதி என்பதை ஏற்க்க மறுக்கிறது மணம்...

    ReplyDelete
    Replies
    1. punnakai!

      ungal varavirkku mikka nantri!

      karuthirkku kaaranam sollirunthaal-
      pathi poda ilakuvaa irunthirukkum....

      Delete
  9. காதலின் அர்த்தங்கள் யாவும் அருமை அண்ணா! அனைத்து பதிவுகளையும் தாமதமாக படித்தாலும் உடனுக்குடனாக இந்த தொடர் பதிவுகளை படிக்க அத்தனை ஆர்வமாக இருக்கிறது! இனியவன் என்ன தான் ஆனான் என்று பார்த்துவிட்டு வருகிறேன் அண்ணா! அவனுக்கும் காதல் ஒட்டிகொண்டதா????

    ReplyDelete