Saturday 13 October 2012

நான் என்ன செய்வேன்...!!?(4)

வெளியே -
"கச்சேரி"-
ஆரம்பித்தது!

உள்ளே-
இனியவனை-
தாயின் குரல்-
சாப்பிட -
அழைத்தது!

பழைய சோறு-
சூடாக்கியும்!

கூனி ஆனம்-(குழம்பு)
சுண்டவைத்தும்!

தேனாய் இனித்தது-
தொண்டை வழி-
இறங்கியதும்!

"பர்க்கரும்"-
"பீசாவும்"-
கிடைக்கும் காலம்!

ஆனாலும்!

கிடைக்கவில்லை-
எந்த  ருசியும்!

தாய்-
உணவு-
பாந்தமானது!

நாகரீக -
உணவு-
பந்தாவானது!

சாப்பிட வரலியா!?-
கணவனை-
அழைத்தாள்-
உள்ளே இருந்து!

சாப்பிடனுமா!?-
இவன் -
வெளியே இருந்து!

கேள்வி-
பதில்-
சரியா!?-
தெரியவில்லை!

"எடக்கான"-
பதில்-
மறுப்பதற்கில்லை!

இதற்க்கு-
கைதட்டல்-
கிடைக்கவில்லை!

ஏனென்றால்-
"நடந்த "இடம்-
சட்டமன்றம்-
இல்லை!

வந்தார்-
பரிமாறப்பட்டது-
அதே-
சோறு!

கடுப்பானாரு-
மைனரு!

தட்டை வீசியதில்-
கரையானது-
சுவரு!

சட்டியில் உள்ளதுதானே-
அகப்பையில்-
வரும்!

இவன் உழைத்த-
பணத்தை-
வீட்டில் கொடுத்தால்தானே-
உணவாகும்!

கட்டியவளிடம்-
காட்ட தேவை இல்லை-
கோபத்தை!

காட்ட வேண்டியது-
காசுக்கு -
"கட்டிங் "-
 கொடுத்தவனிடத்தே!

"என்னடி-
நாய் சாப்பிடுமா!?-"என
குதித்தான்!

அதனால்தான்-
உனக்கு வைத்தேன்-என்று
சொல்லி இருப்பாள் !

இவள்-
"சீரியல் " பார்ப்பவளாக-
இருந்திருந்தால் !!

ஏனோ-
அநியாத்திற்கு-
நல்லவளாக -
இருந்தாள்!

அதனால்தான்-
பொறுமையாக-
இருந்தாள்!

பொறுமைக்கும்-
எல்லை உண்டு-என்பதை
இவன் மறந்தான்!

அதனாலேயே-
தகாத வார்த்தையை-
தொடர்ந்தான்!

மப்பில் பேசிய-
வார்த்தை -
"கப்படித்து-"
வீட்டை நிறைத்தது!

பிறகு-
தெருவே-
நாறியது!

இனியவனின்-
கண்ணீரால்-
குளித்தது-
தலையணை!

அன்பானவர்களே-
தேவையா!?-
எத்தனையோ பேர்-
கண்ணீருக்கு-
காரணமான-
மது விற்பனை..!!?

(தொடரும்...)





12 comments:

  1. தாய்-
    உணவு-
    பாந்தமானது!

    நாகரீக -
    உணவு-
    பந்தாவானது!


    Nice...

    ReplyDelete
    Replies
    1. rajesvari!

      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  2. எதுகை மோனை நின்று விளையாடுகிறதோ.....
    தொடருங்கள் நண்பா

    ReplyDelete
  3. அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சீனி..
    உண்மையிலே சொல்றேன்..
    இப்பவெல்லாம்
    உங்கள் கவிதைகள்ல
    அனல் பறக்குது..
    ம்.. ம்.. எங்கோ போயிட்டிருக்கீங்க
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungal karuthukku mikka nantri!

      iraivan nam seyalai porunthi kolvaanaaka...

      aameen!

      Delete
  5. நான் என்ன சொல்வேன்...?

    தொடருங்கள்...
    தொடருகிறேன்.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு...இன்னும் தொடர்வதற்கு என் வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. போட்டுத் தாக்குங்க...

    தொடருகிறேன்...

    ReplyDelete
  8. பல வீட்டில் நடக்கிற கொடுமை அண்ணா! அதனால் விளைவது எத்தனை விபரீதங்கள்! சுயநினைவின்றி மற்றவர்கள் நலத்தையும் நினைக்காது என்ன வாழ்க்கை இது???

    தொடர்கிறேன்!

    ReplyDelete