Wednesday 17 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (6)

வாலிபம்-
உழுது போட்ட-
விளை நிலம்!

எண்ணங்கள் எனும்-
விதைகளை-
விதைக்கும்-
காலம்!

எண்ணிட-
வேண்டும்!

விதைப்பது-
விதைகளையா!?-
விஷங்களையா!?-
எதை ஊன்றுகிறது-
இன்றைய சமூகம்!

என்றைக்கும்-
நம் -
தமிழகம்!

கட்டுண்டு கிடப்பது-
திரைப்படம்!

"நடிப்பவர்கள்"-
பின்னாலேயே-
போனதால்!

நாடும்-
பின்னோக்கி-
போகிறதா!?

தொலை காட்சி-
அறிவியல்-
வளர்ச்சி!

கோள் மூட்டி-
குடும்பங்களை-
பிரிக்கிறதே-
"தொடர் காட்சி"!?

பெண்ணென்றால்-
மதிக்கணும்-
மனித மனம்!

மணிக்கொரு வீதம்-
கற்பழிப்பு நடக்குதே-
என்ன ஒரு-
கேவலம்!?

ஈவ் டீசிங்-
காரணம் -
ஆடை குறைப்பு-
காவல் துறை-
அறிவிப்பு!

அது-
"உரிமை"-என
இன்னொருபக்கம்-
கொந்தளிப்பு!

ஆபாசம்-
ஆபாசம்!

எங்கும்-
எதிலும்-
ஆபாசம்!

விளம்பரங்களிலும்-
தொடர்வது-
அலங்கோலம்!

முகச்சவரம்-
"குறிப்பிட்ட "கத்தி-
பயன்படுத்தினாலும்!

"குறிப்பிட்ட"பற்பசை-
பயன்படுத்தினாலும்!

"குறிப்பிட்ட"-
இரு சக்கர வாகனம்-(பைக்)
ஓட்டினாலும்!

மயங்குவது-
என்னவோ-
ஒரு பெண்ணாம்!

ஏன் பெண்ணென்றால்-
போக பொருளாக-
பார்வையாம்!?

அன்று-
பயிர்களுக்கு இடையே-
"களைகள்"!

இன்று-
களைகளுக்கு இடையே-
பயிர்கள்!

அன்று-
வளமான சிந்தனைக்கு-
இடையே-
அவலமான சிந்தனைகள்!

இன்று-
"அவலங்கள்"-
இடையே-
"வளங்கள்"!

இனியவன்!

இனி-
என்ன-!?
அவன்!

பயிரா!?
களையா!?

வளமா!?
அவலமா!?

(தொடரும்.....)








15 comments:

  1. விதைப்பது-
    விதைகளையா!?-
    விஷங்களையா!?-
    எதை ஊன்றுகிறது-
    இன்றைய சமூகம்!// சிந்திக்க வைக்கும் பதிவு!

    அற்புதம்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. sesh sako!

      karuthuttamaikku mikka nantri!

      Delete
  2. எத்தனை எத்தனை சம்பவங்களின் சிந்தனை...!

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. நீளமான பயணமா இருக்கும் போல....தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. satheesh sako!

      aamaam anne!

      vanthamaikku mikka nantri!

      Delete
  4. அழகாக இருக்கிறது நண்பா தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. kuruvi sako!

      karuthu ittamaikku-
      mikka nantri!

      Delete
  5. மிக மிக சரியாக சொன்னீர்கள்.....அனைத்து வரிகளிலும் உண்மை இருக்கிறது....எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்

    //அன்று-
    பயிர்களுக்கு இடையே-
    "களைகள்"!

    இன்று-
    களைகளுக்கு இடையே-
    பயிர்கள்!//

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. ஆஹா... இன்று அற்புதமான வரிகள்.
    விரும்பி வாசித்தேன்.
    தொடருங்கள்... தொடருகிறேன்.

    ReplyDelete
  7. வாவ்...தொடருங்கள்...தொடர்கிறேன்...

    ReplyDelete
  8. விரைந்து நானும் அடுத்த பதிவிற்கு செல்கிறேன்!

    ReplyDelete