Monday, 5 December 2011

என் நாட்ல.......

முக்கால் பாகம்-
தண்ணீர்!

ஒரு பாகம் தான்-
தரை!

இது தான்!-
உலகம்!

மூன்று பக்கம்-
கடல் அலை!

தலயில -
பனி மலை!

இது தான் -
என் தேசம்!

இல்லாத வளங்களில்லை-
என் நாட்ல!

இல்லாதவங்களும் -
அதிகம் உள்ளது -
என் நாட்ல!

அகிம்சை போதித்தவரும் -
உண்டு!

அகிம்சையை கொன்றவனும் -
கொடுமைக்கார கோட்சேயும்-
உண்டு!

ஆயுதம் வேண்டாம் -
என்றவருக்கு!

முடிவு கட்டி விட்டது-
துப்பாக்கி குண்டு!

நாட்டின் முதுகெழும்பு-
விவசாயம் என்றார் -
காந்தி-
அந்நாளில்!

அந்நிய செலவாணி-
பெயரில் களவாணிகளை-
தருவிப்பவர்கள்-
ஆளுகிறார்கள்-
இந்நாளில்!

எத்தனை மொழி-
எத்தனை இனம்-
அதனால்தான் -
என் நாட்டுக்கு!

துணை கண்டம்-
என்ற பேர் -
இருக்கு!

வந்தாரை வாழ வை-என்ற
தத்துவமும் உண்டு!

பக்கத்து மாநிலத்துக்கு-
தண்ணி தராத -
கேவலமும் உண்டு!

அடச்சி வச்ச -
அரிசியை -
எலி தின்னுது-
ஏழைக்கு எடுத்து கொடு-
என்றது -
நீதி மன்றம்!

உன் வேலையை பாரு -
என்கிறது!-
நாடாளு மன்றம்!

பெண்களை-
 புனிதமா -
பேசுவாங்க!

மணிக்கு ஒரு கற்பழிப்பு-
நடக்குதுங்க!

பொருளாதாரம் உயர்தாம்-
சதவிகித கணக்குல!

இட ஒதுக்கீடு கொடுக்க -
மாட்டேன்கிறார்கள்-
சதவிகித அடிப்படையில!

உலக யுத்தம் -
நடக்கையில !-
அணிசேரா கொள்கை -
கொண்டது -
என் நாடு!

இப்போதோ -
அந்நிய கொள்கையை -நிறைவேற்றுவதுதான்-
என் நாடு!

ஹசரத் மகலும்-
ஜான்சி ராணியும்-
ஆட்சியில் இருந்து -
நாட்டுக்காக போராடி-
உயிரையே இழந்தாங்க!

ஆட்சியில உள்ளவங்களோ -
வழக்கு விசாரணையவே -
இழுத்து அடிக்கிறாங்க!

வெள்ளையன் -
வருகைக்கு முன்னால்-
நாட்டில் மன்னராட்சி!

அவன் வந்த பின் -
நடந்தது -
அடிமை ஆட்சி!

ஹைதர் அலியும்-
கட்டபொம்மனும்-
போராடியது-
வீர வரலாறு!

இப்ப ஆளுரவங்களை-
ஒத்த வரியில சொல்லிடலாம்-
''படா பேஜாரு''!

இனி ஆட்சியையும்-
மாறனும்!

மக்கள் அவலகாட்சியும்-
மாறனும்!

அதற்கு-
மக்களும்-
மாறனும்!

நல்லவர்கள் கையில்-
 ஆட்சி வரணும்!

No comments:

Post a Comment