Sunday, 28 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(25)

"வரகா  "-அவர்களின்
வீட்டிற்கு சென்றார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
நடந்தவற்றை சொன்னார்கள்!

"வரகா"-
பதில் சொன்னார்கள்!

வந்தவர்-
வானவர் ஜிப்ரீல்-
ஆவார்!

மூசா (அலை)-
அவர்களை-
சந்தித்ததும்-
அவரே ஆவார்!

உங்களை-
 ஊரை விட்டு-
மக்கள் வெளியேற்றுவார்கள்!-
வரகா சொன்னார்கள்!

"என்னை நேசிக்கும்-
இம்மக்கள் -
என்னை -
வெளியேற்றுவார்களா !?-
கேட்டார்கள்!

வரகா-
ஆமோதித்தார்கள்!

இளைஞனாக -
நான் -
அப்போது இருந்தால் -
உங்களுக்கு-
உதவுவேனே..!-என
அங்கலாய்த்தார்கள்!

சில காலத்திலேயே-
வரகா மரணித்துவிட்டார்கள்!

இறை செய்தி(வஹ்யி)-
வர தாமதமானது!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
மனமோ-
எதிர்பார்த்தது!

மலைக்கு மேல்-
செல்வார்கள்!

விழுந்திட-
முனைவார்கள்!

ஜிப்ரீல்(அலை)-
நீங்கள் இறை தூதர்தான்-என
சொல்லி மறைவார்கள்!

நபிகளார் -
திரும்பிடுவார்கள்!

ஒரு முறை-
நபிகளாரை-
கூப்பிடும்-
சப்தம்!

நபிகளார்-(முஹம்மது-ஸல்)
பார்கிறார்கள்-
சுற்றும் முற்றும்!

அண்ணாந்து-
பார்க்கிறார்கள்!

மேலே-
ஜிப்ரீல்(அலை)-ஐ
பார்க்கிறார்கள்!

நடுக்கத்தில்-
கதீஜா (ரலி)-அவர்களிடம்
போர்த்திட சொல்கிறார்கள்!

குளிர்ந்த நீரை-
ஊற்ற சொல்கிறார்கள்!

அப்போது-
இறைவசனங்கள்-
அருளப்பட்டது!

அது-
இப்படியாக-
இருந்தது!

"போர்வை போர்த்திகொண்டிருப்போரே..!
எழுவீராக!

மனிதர்களுக்கு -
அச்சமூட்டி எச்சரிப்பீராக.....!"(74:1-5)

இனி-
உறக்கம் கொள்ள-
வேலையில்லை!

இறைவனின் பணி-
படுத்து உறங்க இல்லை!

லட்சியபாதை!
சத்தியப்பாதை!

புறப்பட்டார்கள்-
மக்களை -
நன்மையின் பக்கம்-
அழைக்க!

மக்களோ-
ஆயத்தம் ஆனார்கள்-
கொடுமைகளை-
இழைக்க!

(தொடரும்...)

// இறை செய்தி வந்த வகைகள்;
உண்மையான  கனவு.
நபி (ஸல்) உள்ளத்தில் இறைசெய்தியை போட்டு விடுவது.
ஆடவர் உருவில் வானவர் தெரியபடுத்துவது.//

/நீளம் கருதி சுருக்கி கொண்டேன்//





5 comments:

  1. சுருக்கினாலும் நல்ல விளக்கம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. நல்ல விளக்கம்.... தொடருங்கள்......

    ReplyDelete
  3. அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. கவிதை வடிவில் சுருக்கிச் சொல்வதே ஒரு சிறப்பு.தொடருங்கள் சீனி !

    ReplyDelete
  5. சுருக்கமாக சொல்லிச் சென்றாலும்
    குழப்பமில்லை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete