Monday, 24 March 2014

பிறந்த பூமி !(32)

''தண்டனையை சொல்லியதற்கு நன்றி!

நான் வலம் வரமாட்டேன் மன்னிப்பு என்ற சொல்லை சுற்றி!

மன்னிப்பு கேட்க வைக்கலாம் என்று மட்டும் எண்ணிடாதீர்கள்!

அதன் மூலம் சுதந்திர போராட்டத்தை அவமானப்படுத்தலாம் என மனப்பால் குடிக்காதீர்!

நீதிபதிகள் தண்டனை வழங்கத்தான் வந்துள்ளீர்கள்!

ஆதலால்தான் உண்மையை கேட்ககூட தயங்குகிறீர்கள்!

இத்தாலியர் மூவரும்!
அரேபியர் இருவரும்!
நீதிபதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளீர்கள்!

பெரும்பான்மை இத்தாலியர்கள்!

சட்டத்தை வளைக்கவே இவ்வேற்பாடுகள்!

உலகில் பிறந்த ஒவ்வோர் உயிர்களும் மரணத்தை நோக்கியே பயணிக்கிறது!

மரணித்த பிறகோ வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது!

இறைவன் நாட்டம் இதுவானால் யார்தான் தடுக்க முடியும்!?

அவன் தடுப்பதை யார்தான் கொடுக்க முடியும்!?

நான் சுதந்திரம் வேண்டி மரணத்தண்டனை பெறுவதால் மகிழ்கிறேன்!

அதற்காக இறைவனையே புகழ்கிறேன்!

ஆனால் சுதந்திர போராட்டம் ஓயாது!

விடுதலையடையாமல் நிற்காது!

லிபியர்கள் உயிர்கள் எத்தனை வேண்டும்!?

சொல்லுங்கள் !
அதற்கும் ஏற்பாடுகள் செய்யபடும்!

எங்களுக்கு தேவை சுதந்திரம்!

இந்நாட்டை விட்டு ஆதிக்க சக்திகள் வெளியேற வேண்டும்!''

சீறியெழுந்து விட்டு அமைதியாக குர் ஆனை ஓதினார்!
உமர் முக்தார்!

நீதிபதிகள் பதினைந்து நாட்கள் கெடு விதித்தனர்!

விமானம் ஒன்று இத்தாலிக்கு பறந்தது!
அவ்விமானம் தலைமை நீதிபதியை சுமந்து சென்றது!

மன்னிப்பு கேட்கும்படி ஏவல்களை அனுப்பி பார்த்தார்கள்!

பாவம் போனவர்கள்தான் தோற்றார்கள்!

கூலிக்கு உமர் போராடவில்லையே.!!
விலைபோக!
தளர்ந்து போக!

கெடு நாள் முடிந்தது!

அரபு நீதிபதிகள் இருவரின் ராஜினாமா செய்தி பத்திரிக்கையில் வந்தது!

துறைமுகத்தில் பலத்த பாதுகாப்பு!

பொதுமக்கள் வர அனுமதி மறுப்பு!

பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தனர்!

தீர்ப்பு சொன்னதை வெளியிட்டனர்!

மரணத்தண்டனை உறுதியாகி விட்டது!

லெபனானிய பத்திரிக்கையிலும் இச்செய்தி வெளியானது!

புதிய ஜெனரல்-
 கிராசியானியை அழைத்தார்!

''உமரை தூக்கிலிட்டால் நாடே தாங்காது !
எப்படி அவரிடம் மன்னிப்பு கடிதம் வேண்டுவது!?

நமது அதிபரோ தூக்கிலிட சொல்கிறார்!
நம் நிலையை அறிய மறுக்கிறார்!

அழாத குறையாக சொன்னார்!

''உமர் ஒரு சிறந்த வீரர்!
தனக்கு பிறகும் போராட படையை உருவாக்கி விட்டவர்!

அவரை காப்பாற்ற வேண்டியுள்ளது!
அதற்கு வேறு வழியுள்ளது!

கிராசியானி சொன்னார்!

உமரை சந்திக்க சம்மதித்தார்!

(தொடரும்...!!)




4 comments:

  1. வேறு வழி என்ன...?

    ஆவலுடன்...

    ReplyDelete
  2. அது என்ன வேறு வழி..... தெரிந்து கொள்ள ஆவலுடன் நானும்....

    ReplyDelete
  3. கண்டிப்பாக! உமர் பிழைத்தாரா? அறிய ஆவலுடன்!

    ReplyDelete