Saturday, 8 March 2014

பிறந்த பூமி !(16)

முகாமிட்டு இருந்தார்கள்-
ராணுவ வீரர்கள்!

முகாமை சுற்றி-
பூனைகள் விற்றார்கள்-
உள்ளூர் மக்கள்!

பூனைகளை -
இத்தாலியர்கள் தின்பதாக-
பொதுஜனங்களின் எண்ணம்!

வீரர்கள் நிலையோ பரிதாபம்!

தான் சாப்பிடுவதற்கு முன்-
பூனைக்கு கொடுத்தார்கள்!

ஆம்-
அவர்களை விடுவதாக இல்லை-
விஷத்தின் மேலுள்ள பயங்கள்!

நாட்கள்!

ஆனது-
ஆறு நாட்கள்!

வந்தது-
போராளிகளிடமிருந்து அறிக்கை!

வெளியிட்டது-
அனைத்து பத்திரிக்கைகளும்!

லட்சக்கணக்கில் வினியோகிக்ப்பட்டது-
தேசமெங்கும் துண்டு பிரசுரங்களும்!

அதிலுள்ள விஷ(ய)ம்!

''பேச்சு வார்த்தைக்கு -
நீங்கள் வரவில்லை!

உங்களை கெஞ்சுவதற்கு-
நாங்கள் கோழைகளில்லை!

வடக்கே ஜபலல் அக்தார் மலையிலிருந்து-
தெற்கே ஷாகு நாட்டின் எல்லைவரை-
எங்கள் எல்லை!

உங்களது இத்தாலிய அதிகாரிகள்-
எங்கள் கைகளிலே!''

சுதந்திர பிரகடனம்!

பொத்தென்று விழுந்தது-
தளபதியார்களின் தலைகணம்!

எதிர்பாராத பகுதி!

வருமானம் இல்லாத பகுதி!

வறண்ட பூமியும்-
மலையும் கொண்ட பூமி!

போர் செய்யவே தேர்ந்தெடுத்த பூமி!

படைகள் அவ்விடம் நோக்கி நகர்ந்தது!

அலைச்சல் காரணமாக நொந்தது!

நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்தார்கள்!

தலைமை உத்திரவிற்கு கட்டுப்பட்டார்கள்!

மேற்கொண்டார்கள்-
போராளிகள் பிரகடனம்படுத்திய எல்லைகளை சுற்றி தடுப்பு நடவடிக்கைகள்!

கடல் வழி முடக்கப்பட்டது-
தப்பிசெல்ல முடியாதபடி!

பேருந்துகள் நிறுத்தப்பட்டது-
உதவிகள் செல்ல முடியாதபடி!

ராணுவம் முகாமிட  இருந்த இடம்!

அப்பகுதியிலுள்ள ''குஃப்ரா''எனும் திட்டுத்தோட்டம்!

முப்பது மைல் பரப்பளவு கொண்டது!

அத்தோட்டதிற்குள்ளேயே ஆறொன்று ஓடுகிறது!

இருமலைகளுக்கிடையே ஆறு பயணிப்பதால் !

மரப்பாலத்தை பயன்படுத்த வேண்டும் மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால்!

அல்லது-
 முப்பது மைல்கள் சுற்றியே வரவேண்டும்!

அத்தோட்டத்தில் தங்கிட தளபதிகளின் எண்ணம்!

வேவு விமானம் வேவு பார்த்தது திட்டுத்தோட்டத்தை!

தகவலனுப்பியது-
திடுக்கிடும் செய்தியொன்றை!

(தொடரும்...!!)



4 comments:

  1. ஆவலுடன் செய்தி அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. செய்தி அறிய ஆவல்! அருமை தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. என்ன திடுக்கிடும் செய்தியோ..... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete