Tuesday, 25 March 2014

பிறந்த பூமி !(33)

கிராசியானி சிறைக்கு சென்றார்!

காவலர் ஒருவர் அழைத்து சென்றார்!

வந்து விட்டது-
மரணத்தண்டனை கைதிகள் அடைக்கப்படும்
சிறை அறை!

கத்திக்கொண்டே கதவு ஒதுங்கி காட்டியது வழிதனை!

கிராசியானி காவலரை பார்த்தார்!

பார்வையின் அர்த்தம் புரிந்தவராக மரியாதை செய்து விட்டு சென்று விட்டார்!

அறையினுள் உமர் தொழுதுக்கொண்டிருந்தார்!

கிராசியானி அமைதிக்காத்தார்!

தொழுது முடித்தவுடன் உமர் கிராசியானியின் தோளைத்தொட்டார்!

சிறு குழந்தைபோல் கிராசியானியழுதார்!

''உமர் அவர்களே!
என்னை மன்னித்து விடுங்கள்!

என்னால்தான் இந்நிலைக்கு ஆளாகிவிட்டீர்கள்!

நான் தவறு செய்து விட்டேன்!
ஆதலால் நான் நொறுங்கி விட்டேன்!

மன்னிப்பு கடிதம் கொடுக்கமாட்டீர்கள்!
நான் சொல்வதை கேளுங்கள்!

ஏற்பாடு செய்து விடுகிறேன்-
நீங்கள் தப்பிப்பதற்கு!

நான் காத்திருக்கிறேன்-
உங்கள் சம்மதத்திற்கு!''

உமர் புன்னகைத்தார்!

''கிராசியானி அவர்களே!
இறைவனின் நாட்டத்தை எண்ணி வியக்கிறேன்!

என்னை கொல்ல வந்தவர் நீங்கள் ,இன்று காப்பாற்ற முயல்கிறீர்கள்!

எனக்கு ஆதரவாக குரல் எழுப்பினீர்!

வேலைகளை இழந்து இருக்கிறீர்!

நான் தப்பிப்பதாகவோ,மன்னிப்பு கேட்பதாகவோ இல்லை!

எனது மரணத்தால் விளைந்திட போகும் மாற்றங்கள் கொஞ்சமில்லை!

லிபியாவில் பெரும்பாலோர் சுதந்திரத்திற்காக போராடுவதில்லை!

ஆனால் போராட்டக்காரர்களை காட்டி கொடுப்பதில்லை!

என் மரணம் ''எனக்கென்ன'' என இருப்பவர்களை எரிமலையாக எழச்செய்யனும்!

குழு , குழுவாக போராடுபவர்களை அரண்போல் ஒன்றிணைக்கச்செய்யும்!

எனக்குள்ள சிறு அச்சம்!

தீராத இருமல் எனக்கிருக்கிறது!

அதனால் நான் இறந்திடுவேனோ  என அச்சமாக இருக்கிறது!''

கிராசியானி தொடர்ந்தார்!

''உங்ளைபோல் ஓர் வீரரை நான் பார்த்ததும் இல்லை!

படித்ததும் இல்லை!

உங்கள் வாழ்க்கையவே நாட்டிற்காக இழந்துள்ளீர்!

உங்கள் உயிரையும் பணயம் வைக்கிறீர்!

நான் உங்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பேசவில்லை!

என் மனதில் பட்ட உண்மைகளே அவை என்பதும் பொய்யில்லை!

உங்களுக்கான தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது!

இந்த விசாரணைக்கூட கண் துடைப்புக்காக நடந்தது!

அதிபர் முசோலினி என் நண்பன்!

அவனை ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர்களில் நானும் ஒருவன்!

மற்ற நண்பர்களை கொன்றுவிட்டான்!

அடிமையாக நான் நடந்ததால் உயிரோடு விட்டான்!

என்னை அவனால் கொல்ல முடியவில்லை!

அவனுக்கு என்னை கொல்ல சந்தர்ப்பங்கள்   அமையவில்லை!

ஆதலால்தான் லிபியாவிற்கு அனுப்பினான்!

நீங்கள் கொன்றுவிடுவீர் என நம்பினான்!

நான் முடிவு செய்துவிட்டேன்!

உங்கள் சம்மதத்தை எதிர்ப்பார்க்கிறேன்!

லிபியாவின் சுதந்திர போராட்டத்தில் நான் கலந்துக்கொள்ளனும்!

அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்!''

உமர் வலது இடதுமாக தலையசைத்தார்!
முடியாது என்று உணர்த்தினார்!

''இது முஸ்லிம்களின் நாடு !
முஸ்லிம்கள் போராடியே சுதந்திரம் பெற வேண்டிய நாடு!
என்றார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''சுதந்திர போராளியாக நான் மாற எண்ணி விட்டேன்!
அதற்கு முன்னால் முஸ்லிமாக மாறி விடுகிறேன்!

(தொடரும்....!!)








3 comments:

  1. ம்ம்ம்ம்... அடுத்தது என்ன....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. எதிர்பாராத திருப்பம்! தொடர்கிறேன்!

    ReplyDelete