Wednesday, 5 March 2014

பிறந்த பூமி !(13)

ராணுவ வீரர்களின்-
உணவுகள்!
பழங்கள்!
தண்ணீர் குடுவைகள்!

அனைத்திலும் கலந்திருந்தது-
விஷங்கள்!

விஷத்தின் தாக்கம்!

கொடுத்துவிட்டது-
முடிவில்லாத உறக்கம்!

மக்ரோனி-
கிராசியானியை சந்திக்க வந்தார்!

கிராசியானி வரவேற்றார்!

மக்ரோனி-
போராளிகளை திட்டித்தீர்த்தார்!

கிராசியானி பொறுமைக்காத்தார்!

''அடுத்தது என்ன செய்யலாம்..!?-
கிராசியானி கேட்டார்!

''பத்திரிக்கைகள் நாம் கொடுக்கும் செய்திகளைத்தான் வெளியிடனும்!
கலகக்காரர்கள் கை ஓங்கியதை மறைக்கனும்!
அத்துடன் என்னையும் நீங்கள் மன்னிக்கனும்!-
மக்ரோனி சொன்னார்!

அழைப்பு மணி அழுத்தப்பட்டது!

சிப்பந்தி நுழைய கதவு திறந்தது!

''பத்திரிக்கையை கட்டுக்குள் கொண்டுவரவும்!

மருத்துவர்கள் அவசரமாக முகாம்களுக்கு செல்லவும்!''

உத்தரவு இடப்பட்டது!

''பத்திரிக்கை விவகாரம் சாத்தியம்!

மருத்துவர்கள் ''தூனிஸ்''நகர மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் சிகிச்சையளிப்பது அசாத்தியம்!''

சிப்பந்தி விளக்கினார்!

அனுமதி கிடைத்ததும் விலகினார்!

சென்றார்கள்-
முகாம்களை நோக்கி இருதளபதிகளும்!

வரவேற்றது -
சடலங்களும்!
ரத்த வாந்திகளும்!

ராணுவ மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள்!

விஷத்தின் வீரியத்தை குறைக்க முடியாமல் தவித்தார்கள்!

கவர்னர் கண்கள் கலங்கினார்!

மக்ரோனி வார்த்தையின்றி பற்களை கடித்தார்!

காப்பாற்ற முடிந்தவர்கள் -
மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்கள்!

மரணித்தவர்கள்-
''ஹோம்ஸ்''துறைமுக ''தர்ஹுனா ''எனும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்!

சடலங்களை அடுக்கி வைத்தார்கள்!
அடக்கம் செய்தார்கள்!

மக்ரோனி ஆலோசனை கேட்டார்!

கிராசியானி பேச்சிற்கு ஒத்துப்போனார்!

தந்தி மூலம் தகவல்கள் பறிமாற்றம்!

சொல்லப்பட்டது-
தீர்வுக்கு வழி-
 பேச்சு வார்த்தையும்!
உடன்படிக்கையும்!

முசோலினி பதிலனுப்பினார்!

கிராசியானி வெம்பினார்!

''பதில் -
தற்காப்பு கேடயமாக இல்லை!
நஞ்சு தடவிய வேலாக இருந்தது!''

(தொடரும்...!!)


4 comments:

  1. விஷம் - என்னவொரு கொடுமை...

    ReplyDelete
  2. ஓ சாப்பாட்டுல கை வச்சுட்டாங்களா??? பாவம்..

    ReplyDelete
  3. அடுத்த விபரீதம் என்ன.... தொடர்கிறேன்.

    ReplyDelete