Friday, 28 March 2014

பிறந்த பூமி !(36)

''ரகசிய வார்த்தை எப்படி தெரியும்!?

உமர் என்ன ஆனார்!?என தெரிய வேண்டும்!

இமாம் கோபத்துடன் கேட்டார்!

முக்தார் அலி நடந்தவற்றை முழுவதுமாக சொன்னார்!

''அப்படியென்றால் அடுத்த வார்த்தை..!?-
இமாம் கேட்டார்!

''அடுத்த வார்த்தை ''இமாம்''!-என்று
முக்தார் அலி சொன்னார்!

இமாம் அமைதியானார்!

உமரை பற்றி அக்கறையோடு கேட்டார்!

''மாலை நேரம் ஒருவர் உங்களை சந்திப்பார்!

அவர் ''மஸ்ஜித்''என்பார்!

நீங்கள் ''கஃபா''என சொல்லுங்கள் ''-என்றார்!

அலி வீடு வந்தார்!

அந்நாளின் மாலை நேரத்தை எதிர்ப்பார்த்திருந்தார்!

எத்தனையோ நாட்கள் கழித்திருப்போம் -
கவலையில்லாமல்!

''எதிர்ப்பார்ப்பு''டன் இருக்கும்போது நம்மை சுழலச்செய்யாமல் அந்நாள் கடப்பதில்லை!

யாரும் வருவதாக தெரியவில்லை!

அதற்கான அறிகுறியும் இல்லை!

தோட்டக்கார ஹுசைன் வேலை முடிந்து செல்ல முக்தார் அலியிடம் வந்தார்!

முக்தார் அலி போக அனுமதித்தார்!

ஹுசைன்-
''மஸ்ஜித்''என்றார்!

அலியோ உறைந்தே போனார்!

''ஹுசைன் !
நீயா..!?
போராளியா...!?-என
வினவினார்!

பதில் ''கஃபா''என சொல்லாததால் ஹுசைன் மழுப்பினார்!

''இல்லை! ''மஸ்ஜித்''போகிறேன் என்றார்!

முக்தார் அலி புரிந்துக்கொண்டார்!

''கஃபா''என சொன்னார்!

ஹுசைனிடம் ஆச்சரியம் தாளாமல் வினவினார்!

''ஹுசைன் !
நீ எந்நேரமும் வீட்டில் வேலை செய்தவன்!
உன்னிடமே நான் போராளிகள் விஷயங்களை பேசியவன்!

என்னால் நம்ப முடியவில்லை!-என
அலி ஆச்சரியப்பட்டார்!

''நான் இங்கு இருந்ததினால் உங்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கவில்லை!

அதனை விளக்கமாக சொல்ல நேரமில்லை!

நாம் கிளம்புவோம்!

சாலையில் பயணிப்போம்!

யாரோ ஒருவர் உங்களுக்கு ''அஸ்ஸலாமு அலைக்கும்''என சொல்வார்!

உங்களிடம்''வ அலைக்கும் ஸலாம்''என பதிலை எதிர்ப்பார்ப்பார்!

நீங்கள் அவர் பின்னாலேயே செல்லவும்!

அவரது முகத்தை பார்க்க முயற்சிக்காமல் பின்தொடரவும்!

நான் உங்கள் பின்னால் வந்துக்கொண்டிருப்பேன்!

விபரம் சொல்லி முடித்தார் ஹுசைன்!

இருள் சூழ தொடங்கியது!

இவர்களது பயணம் தொடங்கியது!

போய்க்கொண்டிருந்தார்கள்!

ஒருவர் கடந்துக்கொண்டே ''சங்கேத வார்த்தை'' சொன்னார்!

அலி பதில் சொல்லி பின் தொடர்ந்தார்!

பிரதான சாலை முடிந்தது!

ஒரு சந்து வந்தது!

முக்தார் அலி கண்கள் கட்டப்பட்டார்!

பலவாறு சுற்றி சுற்றி ஓர் இடத்திற்கு கொண்டு வரப்பட்டார்!

கட்டு அவிழ்க்கப்பட்டது!

அறை இருட்டாக இருந்தது!

அங்குதான்.......!!!

(தொடரும்....!)

4 comments:

  1. திரைப்படம் போல மர்மமாகத்தான் செல்கிறது...

    ReplyDelete
  2. அடுத்த மர்மம் என்ன... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. வெகு சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. 37க்கு ஓடுறேன்..தாமதமா படிப்பதின் சவுகரியம் :)

    ReplyDelete