Wednesday 2 November 2011

காலணிகள்!


திருமண வீட்டில்-
எத்தனையோ-
ஜோடி காலணிகள் -இருக்கையிலே!

என் காலணியும் -
உன் காலணியும் -
இருக்குதடி-
அருகினிலே!

உன்-
 பின்னால் -
நான்-
 அலைந்ததினிலே!

நமது காலணிகள் -
இணைந்து இருக்குமோ -
காதலினிலே!

அடியே!
காலணிக்கு உள்ள -
இரக்கம் கூட -
உனக்கில்லையே!

No comments:

Post a Comment