Wednesday, 9 November 2011

காதலிக்க போகிறவர்களே!

பிடித்ததை விட -
பிடிக்காதது என்ன -
என்பதை -
தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் -
பிரியமானவர்களுக்கு!

அந்த பட்டியலில் -
இவர்கள் இருக்கலாம் -
ஒரு இடத்தில்!

குருதியை-
 பாலாக கொடுத்த -
தாய்!

உன்-
 ஆசைகளுக்காக -
தன் ஆசையை -
நிராசையாக-
ஆக்கி கொண்ட -
தகப்பன் !

நீ!
இருந்த கருவிலும்-
நீ!
இருக்கும்-
வீட்டின் அறையிலும் -
உடன் இருக்கும்-
உடன் பிறப்பு!

குழந்தையாக -
இருந்தபோது-
பொத்தி பொத்தி -
வளர்த்து-
வருந்தி போன -;ஆச்சா'[பாட்டி]மார்கள்!

தாயில்லாதவங்களுக்கு -
தாய போல-
 பார்த்து கொண்ட -
அக்கா மார்கள்!

உணர்வும் -
உணர்ச்சியும் உள்ள -
காதலுக்காக!

உயிருக்கு -
உயிரான -
உறவுகளை -
இழந்து விடாதீர்கள்-
காதலுக்காக!

No comments:

Post a Comment